கேரளத்து மண்வாசனை மாறாத தீயல் குழம்பு இப்படி செய்து பாருங்க! கேரளா போய் சாப்பிட்ட உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்!!

- Advertisement -

தினமும் என்ன சமையல் செய்வதென்பதே வீட்டிலுள்ள பெண்களின் கவலையாக இருக்கும். ஒரே மாதிரியான பருப்பு, சாம்பார், ரசம் என்று செய்து கொடுத்தால் சலித்துக் கொண்டு தான் சாப்பிடுவார்கள். எனவே இன்று மதியம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு வத்த குழம்பு ரெசிபியை செய்து கொடுங்கள். இந்த வத்தக் குழம்பை சற்று வித்தியாசமான சுவையிலும் , கேரளாவின் ஸ்டைலிலும் செய்ய உள்ளோம். இதற்கு கேரளாவில் தீயல் என்றழைப்பார்கள். கேரளா என்றாலே ஓணம் பண்டிகையும் அதில் பரிமாறப்படும் சத்யா விருந்தும் தான் முதலில் நினைவுக்கு வரும்.

-விளம்பரம்-

கேரள மாநிலத்திற்கென்றே தனித்துவமான சில உணவு வகைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் ஓணம் திருநாளன்று இடம் பெற்றிருக்கும். அதில் மிக முக்கியமான ஒரு ஸ்பெஷல் ரெசிபி தான் இந்த உள்ளி தீயல். இதனை செய்யும் பொழுதே வீட்டில் உள்ளவர்கள் என்ன சமைக்கிறீர்கள் என்று கேட்கும் அளவிற்கு இதன் மணம் இருக்கும். பொதுவாக இந்த ரெசிபியானது வத்தக்குழம்பு போன்று இருக்கும். வத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை கேரளா நாட்டினர் தீயல் என்று அழைப்பார்கள். இந்த தீயல் ரெசிபியின் ஸ்பெஷலே அதன் மசாலா தான்.

- Advertisement -

அதிலும் இந்த மசாலாவை அம்மியில் அரைத்து செய்தால், தீயல் ரெசிபியின் சுவைக்கு இணையாக எதுவும் வர முடியாது. மேலும் தீயல் ரெசிபியில் நமக்கு வேண்டிய எந்த ஒரு காய்கறிகளையும் பயன்படுத்தலாம். இங்கு முருங்கைக்காய் மற்றும் வெங்காயத்தை பயன்படுத்தி தீயல் ரெசிபியானது செய்யப்பட்டுள்ளது. தேங்காயைத் தீய்த்து, அதாவது பொன்னிறமாக வறுத்து அரைத்து சேர்ப்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம். வத்த குழம்பு பல வகைகளில் செய்யலாம். இப்படி ஒரு முறை செய்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த வகை வத்தல் குழம்பை எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் நாம் காண்போம்.

Print
No ratings yet

கேரளா ஸ்பெஷல் தீயல் குழம்பு | Theyal Kuzhambhu Recipe In Tamil

தினமும் என்ன சமையல் செய்வதென்பதே வீட்டிலுள்ள பெண்களின் கவலையாக இருக்கும். ஒரே மாதிரியான பருப்பு, சாம்பார், ரசம் என்று செய்து கொடுத்தால் சலித்துக் கொண்டு தான் சாப்பிடுவார்கள். எனவே இன்று மதியம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு வத்த குழம்பு ரெசிபியை செய்து கொடுங்கள். இந்த வத்தக் குழம்பை சற்று வித்தியாசமான சுவையிலும் , கேரளாவின் ஸ்டைலிலும் செய்ய உள்ளோம். இதற்கு கேரளாவில் தீயல் என்றழைப்பார்கள். பொதுவாக இந்த ரெசிபியானது வத்தக்குழம்பு போன்று இருக்கும். தேங்காயைத் தீய்த்து, அதாவது பொன்னிறமாக வறுத்து அரைத்து சேர்ப்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம். வத்த குழம்பு பல வகைகளில் செய்யலாம். இப்படி ஒரு முறை செய்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த வகை வத்தல் குழம்பை எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் நாம் காண்போம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian, KARALA
Keyword: Theyal Kuzhambhu
Yield: 4 People
Calories: 44kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மண் சட்டி
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 3 டேபிள் ஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 4 வர ‌மிளகாய்
  • புளி எலுமிச்சை அளவு
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 6 பல் பூண்டு
  • 1 முருங்கைக்காய்
  • தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 கப் துருவிய தேங்காய்
  • உப்பு தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் கடுகு, உளுந்த பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் முருங்கைக்காய் மற்றும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு‌ மண் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் தனியா, மிளகு, மிளகாய், சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • பின்‌ தேங்காய், பூண்டு, வெங்காயத்தையும் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இவை ஆறியதும் ஒரு மிக்சியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் புளியை சிறிது நேரம் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் நாம்‌ அரைத்து வைத்துள்ள கலவை மற்றும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பின் மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், முருங்கைக்காய் துண்டுகளையும் சேர்த்து வதக்கி, கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி மூடி போட்டு நன்றாக கொதி விடவும்.
  • குழம்பு கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கிவிடவும்.
  • அவ்வளவுதான் அருமையான தீயில் குழம்பு தயார். இந்த குழம்பு சாதம், இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 44kcal | Carbohydrates: 10g | Protein: 4.2g | Fat: 2.2g | Sodium: 5mg | Potassium: 61mg | Fiber: 1.9g | Vitamin C: 15mg | Calcium: 30mg | Iron: 1.5mg

இதனையும் படியுங்கள் : இந்த மழைக்கு இதமா சுட சுட கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!