உடலுக்கு ஆரோக்கியம் தரும் ருசியான திணை முருங்கைக்கீரை சப்பாத்தி இப்படி சாஃப்டாக செய்து பாருங்க!

- Advertisement -

ஆரோக்கியத்தில் அதிக அக்கறையுடன் இருப்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும். பொதுவாக கோதுமை மாவில் ஆரோக்கியத்திற்காக சப்பாத்தி செய்து சாப்பிடுவோம். ஆனால் திணையை வைத்து நம்முடைய வீட்டிலேயே சாஃப்ட்டான சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபி தான் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபியை மிக மிக சுலபமான முறையில் செய்து கொடுக்க வேண்டும். அதே சமயம் அந்த ரெசிபி சுவையானதாகவும் இருக்க வேண்டும். குழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் பொருளாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு சூப்பரான ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.

-விளம்பரம்-

இந்த திணை முருங்கைக்கீரை சப்பாத்தி அருமையான ருசியில் இருக்கும்.  ஆரோக்கியம் தரக்கூடிய முருங்கைக் கீரையை பொரியல் செய்து கொடுத்தால், குழம்பு வைத்துக் கொடுத்தால் குழந்தைகள் நிச்சயம் சாப்பிட மாட்டார்கள். இப்படி சப்பாத்தியாக செய்து லஞ்சுக்கு பாக்ஸில் போட்டு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய், தயிரில் காராபூந்தி சேர்த்து பச்சடி இருந்தாலும் போதும்.

- Advertisement -

கோதுமை மாவை வைத்து தான் பூரி அல்லது சப்பாத்தியை அதிகமாக செய்வோம். ஏதாவது கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் இந்த திணை முருங்கைக்கீரை சப்பாத்தியை முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் ருசியாக இருப்பதுடன் குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஹெல்தியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் இருக்கும். வாங்க இப்போது இந்த திணை முருங்கைக்கீரை சப்பாத்தியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

Print
No ratings yet

திணை முருங்கைக்கீரை சப்பாத்தி | Thinai Drumstick leaves Chappathi

உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபியைமிக மிக சுலபமான முறையில் செய்து கொடுக்க வேண்டும். அதே சமயம் அந்த ரெசிபி சுவையானதாகவும்இருக்க வேண்டும். குழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் பொருளாகவும் இருக்க வேண்டும். அப்படிஒரு சூப்பரான ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இந்த திணை முருங்கைக்கீரைசப்பாத்தி அருமையான ருசியில் இருக்கும்.  ஆரோக்கியம்தரக்கூடிய முருங்கைக் கீரையை பொரியல் செய்து கொடுத்தால், குழம்பு வைத்துக் கொடுத்தால்குழந்தைகள் நிச்சயம் சாப்பிட மாட்டார்கள்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Thinai Drumstick Leaves Chappathi
Yield: 4
Calories: 60kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் திணை மாவு
  • 1 கட்டு முருங்கைக்கீரை
  • 1/2 ஸ்பூன் மிளகுத்தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முருங்கை கீரையை ஆய்ந்து சுத்தமா செய்து வைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில், திணை மாவு, உப்பு, நீர் மிளகுத்தூள், கீரை என அனைத்தையும் போட்டு, தேவையான அளவு ஊற்றி பிசைந்து 30நிமிடம் அப்படியே வைக்கவும்
  • பின்னர் அந்த மாவை உருண்டையாக்கி, சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, சூடானதும் அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, சுற்றி சிறது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
  • சத்தான திணை முருங்கைக்கீரை சப்பாத்தி ரெடி

Nutrition

Serving: 2g | Calories: 60kcal | Carbohydrates: 14g | Protein: 9g | Saturated Fat: 0.8g | Cholesterol: 42mg | Sodium: 8.9mg | Potassium: 56mg | Fiber: 2g | Sugar: 4.5g | Calcium: 38mg

இதையும் படியுங்கள் : சுவையான ராகி லட்டு இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!