Advertisement
ஆன்மிகம்

வீட்டில் மகிழ்ச்சி பொங்க செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள் இதோ!

Advertisement

ஜோதிட ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நம்மை சுற்றிலும் நம்பிக்கை சுற்றிலும் நமக்குள் இருக்கும் எதிர்மறையா ஆற்றல்களையும் எண்ணங்களையும் விரட்டுவதற்கு நிறைய பரிகார முறைகள் உள்ளது அது காலம் காலமாக அனைவராலும் கடைபிடிக்கப்படும் வருகிறது அந்த வகையில் ஆன்மீக ரீதியாக வீட்டில் செய்யும் சில மாற்றங்களால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் ஏற்படும் எதிர்மறை ஆற்றல் நம்முடைய வாழ்க்கையில் உணவு உடை இருப்பிடம் மூன்றும் அத்தியாவசியமானது அதில் வீடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று அது நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான ஒவ்வொரு விஷயங்களையும் தேர்ந்தெடுக்கும் இடமாகும்.

அந்த இடத்தை நாம் எப்பொழுதும் நேர்மறையாக வைத்துக் கொள்ள வேண்டும் அந்த வகையில் பலருடைய வீடுகளில் எப்பொழுதும் வீட்டில் சண்டை இருந்து கொண்டே இருக்கும் அடிக்கடி மருத்துவர் செலவுகளும் ஏற்பட்டு கொண்டே இருக்கும் ஒரு சிலர் வீட்டிற்கு வெளியே இருக்கும் போது மகிழ்ச்சியாக இருப்பார்கள் ஆனால் வீட்டிற்குள் வந்தவுடன் மிகவும் கோபமாக நிம்மதி இல்லாத சூழலில் இருப்பார்கள்.

Advertisement

எதிர்மறை ஆற்றலால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள்

பொதுவாக வீட்டில் எதிர்மறையா ஆற்றல் இருந்தால் வீட்டில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் சுப காரிய தடைகள் மன கஷ்டம் பண பிரச்சினை கடன் பிரச்சினை என ஏதாவது ஒன்று நம்மை சுற்றிக்கொண்டே இருக்கும் இது போன்ற சூழ்நிலைகளில் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நாம் நீக்கினால் வீட்டின் சூழல் மட்டுமின்றி நம்முடைய வாழ்க்கையும் மாறும் இதற்கு சாஸ்திரங்களில் பலவிதமான வழிமுறைகள் உள்ளது இவற்றை செய்தால் நம்முடைய வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் அழிந்து நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் அதற்கு நாம் செய்ய வேண்டிய மூன்று விஷயங்களை பற்றி பார்க்கலாம்.

எதிர்மறை ஆற்றலை வீட்டிலிருந்து விரட்ட செய்ய வேண்டிய விஷயங்கள்

வீட்டின் நிலை வாசலில் செய்ய வேண்டியவை

வீட்டின் நிலை வாசலில் ஒரு நேர்மறையான ஆற்றல் இருந்தால் வீட்டிற்குள் வரும் பொழுது நமக்கு ஒரு நேர்மறையான

Advertisement
எண்ணங்களும் தோன்றும். எனவே வீட்டிற்குள் நுழையும் போது நிலை வாசலில் வலது புறத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் கல் உப்பை வைக்க வேண்டும் அதன் மீது ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி ஒன்றில் மஞ்சள் மற்றொன்றில் குங்குமம் வைக்க வேண்டும். இது வீட்டிற்குள் உள்ள எதிர்மறை ஆற்றலை ஈர்த்து வீட்டில் எப்பொழுதும் நேர்மறை ஆற்றலை உருவாக்கும்
Advertisement
பரிகாரத்திற்காக பயன்படுத்துகிற உப்பை வியாழக்கிழமை அன்று எடுத்து தண்ணீரில் கரைத்து விட வேண்டும்.

பூஜை அறையில் செய்ய வேண்டிய பரிகாரம்

நீங்கள் கிராமங்களில் இருந்தால் பஞ்ச கவ்யங்களில் ஒன்றான வீட்டின் வாசலை சாணத்தால் மொழுகுவது நல்லது. அப்படி செய்ய முடியாதவர்கள் வீட்டின் வாசலில் போடும் கோலத்திற்கு நடுவே சிறிய சாதம் வைத்து அதன் மேல் ஒரு பூ வைப்பது நல்லது. சாணம் கிடைக்காதவர்கள் நிலை வாசலில் மஞ்சளும் அரிசியும் கலந்த அட்சதையை வைக்க வேண்டும் இல்லை என்றால் வீட்டின் பூஜை அறையில் ஒரு தட்டில் இந்த அட்சதையை வைத்து அதன் மேல் இரண்டு காசுகளை போட்டு வைக்கலாம்.

வீட்டில் மகிழ்ச்சியை உண்டாக்க செய்ய வேண்டியவை

வீட்டின் நிலை வாசலில் வலது புறம் நாம் உப்பு வைத்திருப்போம் அதேபோல் வீட்டின் உள்ளே இடது பக்கத்தில் ஒரு சிறிய தட்டில் பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும் அதன்மேல் நாம் தீபாரதனைக்காக பயன்படுத்தப்படும் கற்பூரத்தையும் பொடி செய்து வைக்கலாம் பச்சை கற்பூரம் நேர்மறை ஆற்றல்களை ஈர்த்து வீட்டில் தெய்வீக தன்மையையும் நிலைத்திருக்க செய்யும் அதோடு வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து எப்பொழுதும் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…

10 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

21 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

2 நாட்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 நாட்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago