Home Uncategorized மறந்தும் கூட இந்த பொருட்களை பரிசாக கொடுக்காதீர் கையில் இருக்கும் பணம் வீண் செலவாகி கொண்டே...

மறந்தும் கூட இந்த பொருட்களை பரிசாக கொடுக்காதீர் கையில் இருக்கும் பணம் வீண் செலவாகி கொண்டே இருக்குமாம்!

பொதுவாக பணத்தை சம்பாரிப்பது எவ்வளவு கஷ்டமோ அதனை செலவழியாமல் கட்டுபடுத்துவது மிக அவசியம். மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ போதுமான பணம் இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் பல சமயங்களில், பல வகைகளில் கடுமையாக முயற்சி செய்த பிறகும், வருமானம் அதிகரிக்கப்பதில்லை. அப்படியே அதிகரித்தாலும், பணம் வீட்டில் தங்காமல் போய் விடுகிறது. பணத்தை சேமிக்க வேண்டும் எனில் முதலில் பணம் வீண்விரையம் ஆகாமல் இருக்க வேண்டும். இப்படி செய்தால் மாத்திரம் தான் நம்மால் பணத்தை சேமிக்க முடியும். முதலில் பணம் வீண்விரையம் ஆவதற்கும் நாம் செய்யும் சில தவறுகளும் காரணம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.

-விளம்பரம்-

பணம் சேமிப்பு என்பது பொதுவாகவே மிகவும் நல்ல ஒரு விஷயம் அவசியமானதும் கூட. அந்த சேமிப்பையும் எல்லோராலும் சரியாக சேமித்து அதை சரியான முறையில் செலவு செய்து முன்னேறிட முடியாது. எவ்வளவு சம்பாதித்தாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்பதே பெரும்பாலான நடுத்தர மக்களின் புலம்பலாக உள்ளது. என்ன தான் பட்ஜெட் போட்டு, குடும்பம் நடத்தினாலும் திடீரென ஏற்படும் மருத்துவ செலவு போன்ற திடீர் செலவுகளால் பணம் விரயமாகிவிடும். ஆகையால் முதலில் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகப்‌ பதிவில் தெரிந்து கொள்வோம்.

பணம் விரயம் ஆகாமல் இருக்க செய்ய வேண்டியவை

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மற்றவர்களிடம் பணத்தை கொடுக்கக் கூடாது, செலவு செய்யக் கூடாது என்று கூறுவார்கள். ஏனென்றால் செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக் கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது. இந்த தெய்வங்கள் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதால்‌ அவர்களுக்கு உகந்த நாளில் நாம் கடன்‌ கொடுக்க கூடாது. அதுவும் சூரியன் அஸ்தமனமான பின், எக்காரணம் கொண்டும் வீட்டில் இருந்து மற்றவருக்கு பணத்தை கடனாக கொடுப்பதையோ அல்லது கடன் வாங்குவதையோ செய்யக்கூடாது. அதுமட்டுமல்லாமல் எவ்வளவு நெருங்கிய நண்பராகவோ அல்லது உறவினராக இருந்தாலும், அமாவாசை நாளில் நம்முடைய பணத்தை கடன் கொடுக்க கூடாது.

வெள்ளை நிற பொருட்களை தானம்‌ செய்ய கூடாது

பொதுவாக உப்பு, சர்க்கரை, தயிர் போன்ற பொருட்கள் மகாலட்சுமியின் அம்சமாகவும்‌, மகாலட்சுமி தாயார் வாசம் செய்யும் பொருட்களாகவும் கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று கல் உப்பு வாங்குவது மகாலட்சுமியின் அருளை பெற்று தரும் என்று ஆச்சார்ய பெருமக்கள் சொல்வார்கள். அப்படிப்பட்ட உப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை நம்முடைய அண்டை வீட்டார்கள் கேட்டார்கள் என்று தானமாக அளித்து விடக் கூடாது. அப்படி செய்தால், கடன் இன்னும் அதிகமாவதோடு, கையில் பணம் சேரவே சேராது. மாலை வேளையில் உப்பு, சர்க்கரை மட்டுமின்றி, பால், எண்ணெய், போன்ற பொருட்களையும் மற்றவருக்கு கொடுக்கக்கூடாது.

சாமி படங்களை பரிசாக அளிக்க கூடாது

பொதுவாக திருமண வைபவங்கள், பிறந்தநாள் விழா அல்லது புதுமனை கட்டி குடியேறுபவர்களுக்கு நாம் பெரும்பாலும் பரிசுப் பொருட்களாக தெய்வ படங்களை கொடுப்பது வழக்கம். குபேரன், ஸ்ரீ லட்சுமி முருகன், அன்னபூரணி இது போன்ற படங்களை எல்லாம் எந்த வகையிலும் நம் கையிலிருந்து மற்றவர்களுக்கு செல்லக் கூடாது. இதனால் நமக்கு வர இருக்கும் பண வரவுகள் அவர்களுக்கு சென்று விடுமாம். இல்லாவிடடால், அச்செயலால் வாழ்நாள் முழுவதும் பணப் பிரச்சனையில் சிக்கக்கூடும் மற்றும் பணம் கையில் நிற்காது.

-விளம்பரம்-

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு

வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கும், குபேரனுக்கு உரிய மிக உன்னதமான நாள். வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு மல்லிகை மலர் அல்லது வாசனை மலர்களைக் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும். பின் தெய்வத்திற்கு ஏதாவது ஒரு நைவேத்தியத்தை படைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த நைவேத்தியத்தை குடும்பத்தில் இருக்கும் நபர்கள் எல்லோரும் தவறாமல் சாப்பிட வேண்டும். ஒவ்வொரு வெள்ளியும் இந்த மாதிரி மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் பணப்புழக்கம் அதிகமாகும் என நம்பப்படுகிறது.

இதனையும் படியுங்கள் : வீட்டில் பணம் தடையில்லாமல் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும்!