வீட்டில் பணம் தடையில்லாமல் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும்!

- Advertisement -

பண வரவு மற்றும் மகாலட்சுமி தாயாரின் அருள்ஆசியை பெறுவதற்கும் வீட்டில் விளக்கு ஏற்றுவது, வீட்டை நறுமணமாகவும் மற்றும் பூஜை புனஸ்காரங்கள் என பல வழிகள் உள்ளன. மகாலட்சுமி தாயாரை போன்று சுக்கிரனுக்கும் சில பரிகாரங்கள் செய்தால் பணவரவு குன்றாமல் இருக்கும். சுக்கிரனுக்கு பரிகாரமாக ஒரு குறிப்பிட்ட பொருளை தானம் செய்தால் வீட்டில் பண வரவு தடை நீங்கும் என சொல்லப்படுகிறது. அது என்ன பொருள் என்பதனை பற்றியும் பணவரவை எவ்வாறு அதிகரிப்பது என்பதை பற்றியும் இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

வீட்டில் சுக்கிரன் அருள் பரிபூரணமாக கிடைக்க :

வட இந்தியர்கள் அவர்கள் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க ஒரு சில வழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அதில் ஒன்றுதான் சுக்கிரனின் பரிகாரத்திற்காக ஒரு பொருளை தானமாக வழங்குவது. வட இந்தியர்கள் பின்பற்றும் இந்த சூட்சும பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நாம் இந்த பரிகாரத்திற்கு வெளியில் இருந்து எந்த பொருளையும் வாங்கி பரிகாரம் செய்வதாக இல்லை. அதற்கு மாறாக வீட்டில் இருக்கும் ஒரு பொருளை மற்றவர்களுக்கு தானமாக கொடுத்து இந்த பரிகாரத்தை நிறைவேற்ற போகிறோம்.

- Advertisement -

வீட்டில் பண பழக்கம் அதிகரிக்க மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் கிடைப்பது மட்டுமின்றி குபேரன் மற்றும் சுத்திரனின் அனுகிரகமும் நமக்கு கிடைக்க வேண்டும். அப்படி என்றால் தான் நாம் செய்யும் அனைத்து தானங்களின் பலன்களும் நமக்கு கிடைப்பதோடு மட்டுமின்றி இந்த தெய்வங்களும் நம் வீட்டில் நம்முடன் இருந்து நமக்கு என்றும் அருள் புரிவார்கள்.

வீட்டில் பண வரவை அதிகரிக்கும் இனிப்பு பண்டம் :

நம்முடைய கலாச்சாரத்தில் நமது வீட்டிற்கு வருபவர்களுக்கு குங்குமம், மஞ்சள் மற்றும் ரவிக்கை துண்டு ஆகியவற்றை வழங்கும் வழக்கம் உள்ளது. குங்குமம், மஞ்சள் வழங்கும் பொழுது அத்துடன் சேர்த்து இனிப்பு பொருள் சேர்த்து வழங்க வேண்டும். அதாவது லட்டு அல்லது பாலினால் செய்த இனிப்பு பண்டத்தினை வீட்டிற்கு வருபவர்களுக்கு குறிப்பாக சுமங்கலி பெண்களுக்கு வழங்கினால் மகாலட்சுமி தாயாரின் அருளாசி கிடைப்பதோடு மட்டுமின்றி சுக்கிரனின் அருளும் நமக்கு கிடைக்கிறது. ஏனென்றால் சுக்கிரனுக்கு இனிப்பு பொருள் என்பது பிடித்தமான ஒன்று இப்படி நாம் செய்வதன் மூலம் சுக்கிரனின் மனம் மகிழ்ந்து அவருடைய அருளாசி நமக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகத்தை அதிகரிக்கும் ஊறுகாய் :

இது மட்டும் இல்லாமல் நமது வீட்டில் எப்பொழுதும் நார்த்தங்காய் ஊறுகாய் அல்லது எலுமிச்சை ஊறுகாய் இருக்கும் படி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஊறுகாய் என்பது மகாலட்சுமி தாயாருக்கு பிடித்த ஒன்றாகும். இப்படி நமது வீட்டில் எப்பொழுதும் ஊறுகாய் இருந்து கொண்டே இருந்தால் குபேர சம்பத்து கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்த வகை ஊறுகாய்களை நமது வீட்டில் எப்பொழுதும் வைத்துக் கொள்வதினால் நம் வீட்டின் பண வரவு தடையின்றி நிகழும் என நம் முன்னோர்களால் நம்பப்படுகிறது.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் :உங்கள் வருமானம் உயர வேண்டுமா ? பணம் வீட்டில் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? தென்கிழக்கு திசையில் இந்த பொம்மையை மட்டும் வையுங்கள் போதும்!

இந்த முறையை பின்பற்றிய தான் வட இந்தியர்கள் பண வரவை கையாளுகின்றனர் என சொல்லப்படுகிறது. அதனால் தான் வட இந்தியர்கள் இனிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் அவர்கள் இனிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே!! சுக்கிரனின் அருள் ஆசியை பெறுவதற்கு வட இந்தியர்கள் பயன்படுத்தும் சூட்சம முறை இதுதான்.

இந்த பரிகார முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் இது போல நாமும் நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு இனிப்பை தானமாக வழங்கி மகாலட்சுமி தாயார் சுக்கிரன் இவர்களின் அருளை பரிபூரணமாக பெறலாம்.

-விளம்பரம்-