நாாளை மகா சிவராத்திரி அன்று வீட்டு பெண்கள் முக்கியமாக பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

- Advertisement -

மார்ச் எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை வருகின்ற இந்த வருட மகா சிவராத்திரி மிகவும் விசேஷமானது. மகா சிவராத்திரி என்று சிவபெருமானையும் பார்வதி தேவையும் வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் கை கூடி நம் கவலைகள் எல்லாம் நீங்கும் என்பார்கள். இந்த மகா சிவராத்திரி என்று சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வழிபட்டு தேவர்களை வரம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாமும் மனதார சிவபெருமானை வழிபட்டால் நாம் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

-விளம்பரம்-

சிவப்புராணம் மற்றும் தேவாரம்

மகா சிவராத்திரி அன்று அனைத்து சிவாலயங்களிலும் ஆறு கால பூஜைகள் நடைபெறும். அந்த பூஜைகளில் கலந்து கொண்டு சிவபெருமானை முழு மனதோடு விரதம் இருந்து வழிபட்டால் மிகவும் நல்லது. கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபட முடியாதவர்கள் வீட்டிலேயே இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபடுவார்கள். கண்வழிப்பவர்கள் ஒரு மனதாக சிவபுராணம் திருவாசகம் தேவாரம் போன்றவற்றை பாடி மனம் உருக சிவபெருமானை வழிபடலாம்.

- Advertisement -

சிவபெருமானை முதலில் வழிபடுவதற்கு முன்பாக சிவபெருமானுடைய வாகனமான நந்தியை முதலில் வழிபட வேண்டும். நாம் வழிபட்டால் பாற்கடலில் இருந்து விஷத்தை உண்டு தேவர்களை காத்தது போல் நம்முடைய பாவங்கள் பித்ர தோஷங்கள் கவலைகள் என அனைத்தையும் சிவபெருமான் நீக்கி விடுவார்.

மகா சிவராத்திரி அன்று பெண்கள் செய்ய சில விஷயங்கள்

இந்த மகா சிவராத்திரி அன்று விரதம் இருக்கும் பெண்களுக்கு பல விதமான நன்மைகளும் நடைபெற வாய்ப்புள்ளது. சிவராத்திரிக்கு வீட்டை எல்லாம் கழுவி சுத்தம் செய்து பூஜை அறையையும் சுத்தம் செய்து விளக்கு ஏற்றி அனைத்து தெய்வங்களுக்கும் மாலை போட்டு மனதார வழிபட வேண்டும். மாலை கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபட்டு பார்வதி தேவியையும் வழிபட வேண்டும். இவ்வாறு பெண்கள் முழு மனதோடு சிவபெருமானை வழிபட்டால் திருமண தடைகள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேரு கிடைத்தல் வீட்டில் மகிழ்ச்சி தங்குதல் என பலவிதமான நன்மைகள் பெண்களுக்கு கிடைக்கும்.