சாதத்துடன் பிரட்டி சாப்பிட அருமையான தூதுவளை துவையல் இப்படி செஞ்சி பாருங்கள் கொஞ்சம் கூட மிச்சமாகாது!

- Advertisement -

தூதுவளை என்றால் நம் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது சளி பிரச்சனை தீர்க்கக் கூடிய ஒரு மூலிகை தூதுவளை என்பதுதான். இந்த தூதுவளை உடலுக்கு சளி பிரச்சனைகளை சரி செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த முள் செடிகள் இருந்து இலைகளை மட்டும் தனியாக பறித்தெடுத்து அவற்றில் உள்ள முட்களை நீக்கி விட்டு துவையல் அரைத்து சாப்பிட்டால் உடலுக்கு அவ்வளவு நன்மைகள் கிடைக்கும்.

-விளம்பரம்-

ஆகையால் தூதுவளை செடிகள் உங்கள் வீட்டில் வேலி கொடிகளில் இருந்தாலும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்பொழுது எல்லாம் கீரை கடைகள் காய்கறி கடைகளிலேயே தூதுவளைகள் கிடைக்கின்றன. அவைகளை வாங்கியும் பயன்படுத்திக் கொள்ளலாம். சிலர் இந்த தூதுவளையை அப்படியே வெறும் வயிற்றில் வெண்ணை சேர்த்து இந்த தூதுவளை வதக்கி உள்ளுக்கு  சேர்த்துக் கொள்வார்கள்.

- Advertisement -

அப்படி இந்த தூதுவளை உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது. பித்தத்தை குறைப்பதற்கும் இந்த தூதுவளை பயன்படுத்தப்படுகிறது. சளி தொல்லையை தலைவலி போன்றவற்றை சரி செய்வதற்கு இந்த தூதுவளை பயன்படுத்தப்படுகிறது. இந்த தூதுவளை துவையலை சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவை உடலுக்கு நல்ல பயனை கொடுக்கின்றனர்.

இந்தத் துவையலை இட்லியுடன் தோசையுடனும் சேர்த்து சாப்பிடுவதற்கும் நன்றாக இருக்கும். இந்த நல்ல சத்துமிக்க சளி பிரச்சினையை தீர்க்கக் கூடிய தூதுவளை துவையலை எப்படி செய்வதென்று தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

Print
4 from 1 vote

தூதுவளை துவையல் | Thoodhuvalai Thuvayal Recipe In Tamil

தூதுவளை உடலுக்குபல நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது. பித்தத்தை குறைப்பதற்கும் இந்த தூதுவளை பயன்படுத்தப்படுகிறது.சளி தொல்லையை தலைவலி போன்றவற்றை சரி செய்வதற்கு இந்த தூதுவளை பயன்படுத்தப்படுகிறது.இந்த தூதுவளை துவையலை சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவை உடலுக்கு நல்லபயனை கொடுக்கின்றனர். நல்ல சத்துமிக்க சளி பிரச்சினையை தீர்க்கக் கூடிய தூதுவளை துவையலை எப்படி செய்வதென்று தெரிந்துகொள்ளலாம்வாருங்கள்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: chutney
Cuisine: tamil nadu
Keyword: Thoodhuvalai Thuvyal
Yield: 5
Calories: 134kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் தூதுவளை
  • 4 காய்ந்த மிளகாய்
  • 5 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 4 சின்ன வெங்காயம்
  • 1/2 கப் தேங்காய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் தூதுவளை இலைகளை பறித்து முட்கள் இல்லாமல் பறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இளம் தளிர் இலைகளாகஇருந்தால் முட்களை நீக்க வேண்டாம். ஆனால் சிறிது முற்றிய இலைகளாக இருந்தால் அதில் உள்ளமுட்களை நீக்கிவிட்டு இலையை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துஎடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் தூதுவளை இலைகளை சேர்த்து நன்றாக வறுத்துஎடுத்துக் கொள்ள வேண்டும். மொறு மொறுப்பாக வரும் வரை வதக்க கூடாது சிறிது வெந்தது போல்தெரிந்த பிறகு அவற்றை தனியாக எடுத்து வைத்து விட வேண்டும்.
  • பிறகு அதே எண்ணெயில் வெங்காயம், இஞ்சி , பூண்டு இவைகளை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கடாயில் தேங்காய் பூவை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • துவையலுககு வதக்கி எடுத்துள்ள பொருட்களை ஆற வைக்க வேண்டும். முதலில் மிக்சி ஜாரில் துவையல் அரைக்க தேவையான பொருள் ஆறிய பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
  •  இங்கு அதில் தூதுவளை, இஞ்சி பூண்டு, வெங்காயம், தேங்காய்துருவலை சேர்த்து நன்றாக கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.மிக்ஸியில் நன்றாககொரகொரப்பாக அரைத்த  தூதுவளை துவையல் தயார்.

செய்முறை குறிப்புகள்

 இந்த தூதுவளை துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் உடலில் உள்ள சளி பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்து விடும் அது மட்டுமல்லாமல் இந்த சாதம் நல்ல சுவையாகவும் ருசியாகவும் இருக்கும்.

Nutrition

Serving: 100g | Calories: 134kcal | Carbohydrates: 6g | Protein: 2g | Sodium: 85mg | Potassium: 576mg