3 மகா தோஷம் நீங்க நாளை அம்மாவசை தினத்தில் இந்த பரிகாரங்களை செய்யுங்கள் போதும்!

- Advertisement -

பெரும்பாலான நபர்கள் அமாவாசை நாளை ஒரு துஷ்ட நாளாக நினைக்கின்றார்கள் ஆனால் அமாவாசை நாளை போல ஒரு நல்ல நாள் கிடையாது. ஆம் நம் முன்னோர்களை வழிபடக்கூடிய சிறப்பு நாளாக இந்த அமாவாசை திதி இருக்கிறது. அனைத்து மாதங்களிலும் அம்மாவாசை வந்தாலும் இந்த சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை வைஷாக அமாவாசை என அழைக்கப்படுகிறது. புதியதாக பிறந்திருக்கின்ற சோபக்கிற இந்த ஆண்டில் முதல் அம்மாவாசை ஏப்ரல் 19ஆம் தேதி இன்று காலை 11.23 துவங்கி ஏப்ரல் 20 காலையில் 9:41 மணி வரை இருக்கும். மேலும் ஏப்ரல் 20ஆம் தேதி இந்த வருடத்திற்கு உரிய முதல் சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. இத்தனை சிறப்புகள் உடைய இந்த அமாவாசை தினத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

-விளம்பரம்-

சூரிய கிரகணம்

இந்த சித்திரை மாசம் அமாவாசையான வைஷாக அமாவாசை நாளை ஏப்ரல் 20ஆம் தேதி நிகழப்போகிறது. அதே தினம் காலை 7.41 மணி முதல் 12.29 மணி வரை இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நடைபெறுகிறது. அதனால் நாளை அதிகாலை எழுந்து குளித்து சுத்தபத்தமாக ஆகி காலை 7 மணிக்கு முன்பாக உங்களின் இறந்து போன முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மேலும் சூரிய கிரகணம் முடிந்த பின்பு வீட்டை தண்ணீர் ஊற்றி நன்கு அலசி சுத்தம் செய்து பின் குடும்பத்தில் உள்ள அனைவரும் குளித்து முடித்தவன் கிரக தோஷம் தோஷங்களை போக்கக்கூடிய பரிகாரங்களை செய்ய வேண்டும்.

- Advertisement -

சர்வர்த்தா சித்தி யோகம்

முக்கியமாக நாளை ஏப்ரல் 20 தேதி வைஷாக அமாவாசை தினத்தன்று காலை 5.51 மணி நிமிடத்திற்கு சர்வர்த்தா சித்தி யோக நேரம் தொடங்குகிறது. எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டிய நல்ல காரியங்களை எல்லாம் இந்த நேரத்தில் செய்யும் பொழுது நிச்சயமாக நல்ல பலனை உங்களுக்கு பெற்று தரக்கூடியவை என ஜோதிட சாஸ்திரம் வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த வைஷாக அமாவாசை தினத்தில் ஜாதகத்தில் சொல்லப்பட்டுள்ள மூன்று மகா தோஷங்களை போக்குவதற்கான பரிகாரங்களை நீங்கள் செய்யும் போது சிறப்பான பலன்களை நீங்கள் பெற முடியும். ஆம் அது என்னென்ன தோஷங்கள் என்று பார்க்கலாம் வாருங்கள்.

சனி தோஷம்

நவகிரகங்களில் நாம் வழிபடக்கூடிய சனி பகவான் சூரிய பகவானின் மகனாக சொல்லபடுபவர். ஆகையால் சூரிய பகவானுக்கு உண்டான சித்திரை மாதத்தில் வருகின்ற வைஷாக அமாவாசை தினத்தில் தென்பாராத பகுதிகளில் உள்ள கோவில்களை சனி பகவான் ஜெயந்தி கடைபிடித்து வரப்படும். பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய அஷ்டம சனி, பாத சனி, ஜென்ம சனி, விரைய சனி என இது போன்று எந்த சனி தோஷம் இருந்தாலும். நாளை ஏப்ரல் 20 வைஷாக அமாவாசை தினத்தில் அதிகாலை அல்லது மாலை நேரங்களில் சனி பகவானின் சன்னதிக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெயால் தீபமேற்றி வழிபட்டு வந்தால் எப்படிப்பட்ட சனி தோஷமாக இருந்தாலும் நீங்கும்.

பித்ரு தோஷம்

பித்ரு தோஷம் என்பது உங்களுடைய பரம்பரையில் மறைந்து போன உங்களது முன்னோர்களுக்கு சரியான முறையில் திதி கொடுக்காமல் இருக்கும் பொழுது ஏற்படுவது தான் இந்த பித்ரு தோஷம். இந்த பித்ரு தோஷம் உங்களைப் பிடித்துக் கொண்டால் உங்கள் குடும்பத்தில் ஒரு சுபிக்ஷம் என்பதை இல்லாமல் போய்விடும். இந்த தோஷத்தை போக்குவதற்கு நாளை வரக்கூடிய வைஷாக அம்மாவாசை தினத்தன்று அதிகாலையில் நதிக்கரை அல்லது கடற்கரை போன்ற நீர் நிலைகளில் தண்ணீரில் முழ்கு குளித்து விட்டு வழக்கம்போல் மறைந்த உங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுங்கள். பின் எளிய மக்களுக்கு உங்களால் முடிந்த தர்மத்தை செய்யும் பொழுது உங்கள் முன்னோர்களின் அசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். இதனால் உங்களைப் பிடித்து இருக்கும் பித்ரு தோஷம் நீங்கும்.

-விளம்பரம்-

கால சர்ப்ப தோஷம்

நான் இதற்கு முன்பு பார்த்த தோஷங்களை விட ஒருவரின் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய கடுமையான தோஷம் தான் இந்த கால சர்ப்ப தோஷம். இந்த கால சர்ப தோஷம் ஏற்பட்ட ஒரு மனிதனுக்கு திருமணம் என்பது எளிதாக நடந்து விடாது மேலும் வேலை கிடைக்காமல் உடல் நலக் கோளாறுகள் போன்ற பல பிரச்சனைகள் உண்டாகிக் கொண்டே இருக்கும். இவ்வளவு கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும் கால சர்ப்ப தோஷம் நீங்க நாளை வருகின்ற வைஷாக அமாவாசை தினத்தன்று, அதிகாலை எழுந்து சுத்தபத்தமாகி பின்பு தங்கத்தால் செய்யப்பட்டு இருக்கின்ற நாகராஜன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து சிவபெருமானை தொடர்ந்து வழிபட்டு வந்தால் இந்த கால சர்ப தோஷம் நீங்கி ஒரு நிம்மதியான வாழ்க்கையை நீங்கள் வாழலாம்.