இந்த செடியை வீட்டில் வளர்த்தால் மகாலட்சுமி உங்கள் வீட்டில் இருப்பதற்கு சமம்! பண வரவு அதிகரிக்கும்!

பெருமானார் வீட்டில் பல செடிகளை வைத்து வளர்ப்பது உண்டு. முக்கியமாக பெண்களுக்கு செடிகள் வைத்து அதனை பராமரிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இக்கால கட்டத்தில் பலரும் அதை மறந்து விட்டார்கள், ஏனென்றால் பலரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பதால் அவர்களால் சின்ன செடிகளை கூட வ

By ·

பெருமானார் வீட்டில் பல செடிகளை வைத்து வளர்ப்பது உண்டு. முக்கியமாக பெண்களுக்கு செடிகள் வைத்து அதனை பராமரிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இக்கால கட்டத்தில் பலரும் அதை மறந்து விட்டார்கள், ஏனென்றால் பலரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பதால் அவர்களால் சின்ன செடிகளை கூட வைத்து வளர்க்க முடிவதில்லை. ஆனால் இந்த பாரம்பரிய செடியை நாம் வளர்க்க மறந்து விடக்கூடாது. இந்த செடியை வளர்த்தால் நமக்கு பல வகைகளில் நன்மையை அள்ளித்தரும். அது என்ன செடி என்பதனை பற்றியும், அதனை எப்படி வளர்க்க வேண்டும் என்பதனை பற்றியும் இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

வீடு என்றால் கண்டிப்பாக இந்த ஒரு செடி இருந்து வருவது பாரம்பரியமிக்க ஒரு மங்களகரமான விஷயம் ஆகும். மருத்துவ குணங்களும், ஆன்மீகப் பலன்களும் உள்ள துளசி செடியை பற்றி தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மகிமை வாய்ந்த இந்த துளசி செடி வீட்டில் இருந்தால் உடல் நலமும் ஆரோக்கியம் பெறும், உள நலமும் ஆரோக்கியம் பெறும் என்பது தான் உண்மை.அந்த காலகட்டத்தில் வீட்டில் செடிகளை வளர்க்க முடியவில்லை என்றாலும் அருகில் இருக்கும் இடங்களில் நம் முன்னோர்கள் செடிகள் மற்றும் மூலிகை மருந்துகளை வளர்த்து வந்தனர். அதன் மூலம் அவர்கள் குழந்தைகளுக்கு மருந்தும் கொடுத்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாமோ சாதாரண காய்ச்சல் என்றால் கூட மருத்துவரிடம் சென்று

மங்களம் தரும் துளசி செடி

மங்களம் தரும் இந்த துளசி செடி வீட்டில் இருந்தால் இது போன்ற பிரச்சனைகளுக்கு எளிதாக நிவாரணம் காணலாம். தினமும் 2 டீஸ்பூன் துளசி சாறை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகி வந்தால் சளி, கபம் அனைத்தும் நீங்கும். மேலும் நல்ல ஒரு ஆற்றல் உடலுக்கு கிடைத்து எதிர்மறை எண்ணங்களை உங்கள் மனதில் இருந்து உடைய செய்யும் அற்புதம் வாய்ந்த மூலிகையாகவும் இது இருக்கிறது.

எங்கள் வீட்டில் இடமில்லை நாங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறோம், என்பவர்கள் கூட இருக்கும் சின்ன இடத்தில் துளசி மாடம் வைத்து இதனை வளர்க்கலாம். ஜன்னலிலோ அல்லது வீட்டிற்கு வெளியே சிறு இடத்திலோ இந்த துளசி செடியை வைத்து வளர்த்து வரலாம்.

சிறிய விளக்கு

துளசி செடியை வளர்த்து வருபவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அந்த துளசி செடிக்கு ஒரு பூ வைத்து, ஊதுபத்தி ஏற்றி, துளசி மாடத்திற்கு அருகில் சிறிய விளக்கு ஒன்றை ஏற்றி துளசி தேவியை வழிபட்டு வந்தால் குடும்பத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். மேலும் பண பிரச்சினைகள் எல்லாம் நீங்கி வருமானமும் அதிகரிக்கும்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை