Home ஆன்மிகம் இன்றைய ராசிபலன் – 03 ஜூலை 2024!

இன்றைய ராசிபலன் – 03 ஜூலை 2024!

Mesha Rasi Palan

மேஷம்

இன்று உங்கள் உடன்பிறப்புகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். இன்று உங்களுக்கு ஏமாற்றம் தரும் நாளாக இருக்கும். உங்கள் இல்லற வாழ்வில் சில பிரச்சனைகளால் உங்கள் துணையுடன் மனக்கசப்பு ஏற்படலாம். நீங்கள் பொறுமையாக பிரச்னைகளை தீர்க்க வேண்டிய நாள். இன்று காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் தீரும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதால், செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

-விளம்பரம்-
Rishaba Rasi Palan

ரிஷபம்

இன்று உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். குடும்ப உறவில் இனிமையான வார்த்தையை கடைப்பிடிக்கவும். வேலை தேடிக் கூடியவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். பொருளாதார நிலை பலப்படும். பணியிடத்தில் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயலவும். உங்களின் மனக்குறைபாடுகள் தீரும். சுறுசுறுப்பாக எந்த ஒரு வேலையும் செய்து முடிக்கவும். இன்று ஆன்மீகத்தில் ஆர்வம் ஏற்படும். சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

Mithuna Rasi Palan

மிதுனம்

வேலையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு இன்று நீங்கள் இன்று எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள். இன்று உங்களின் குடும்ப சூழ்நிலை இனிமையானதாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனையும் சமரசமாக தீர்த்துக் கொள்ளவும். இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமையும். சகோதரர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் நீங்கள் செய்த தவறுக்கு வருந்த வேண்டியதற்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தரும்.

Kadaga Rasi Palan

கடகம்

உங்கள் அண்டை வீட்டுகாரர்கள் திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். பணியிடத்தில் நேர்மறையான சிந்தனையுடன் செயல்படவும். இன்று அசையும், அசையா சொத்து வாங்கும் நல்வாய்ப்பு இருக்கும். இருப்பினும் ஆவணங்களை சரியாக சோதித்து பார்க்கவும். உங்களின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். குடும்ப பொறுப்புகளை சரியான நேரத்தில் செய்து முடிக்க முயலவும். பழைய கடனை திருப்பி செலுத்தலாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.

Simma Rasi Palan

சிம்மம்

நண்பர்கள் ஆதரவு அளித்து உங்களை மகிழ்விப்பார்கள். உங்கள் வேலையில் புதிதாக ஏதேனும் செய்ய நினைப்பீர்கள். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். முதலீடு செய்வதற்கான நல்வாய்ப்புகள் அமையும். இன்று பணம் தொடர்பான விஷயங்களில் சற்று பலவீனமான சூழல் இருக்கும். மற்றவர்களின் சுயநலம் உங்களை பாதிக்கும். கூட்டு குடும்பத்தில் இருந்தால் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

-விளம்பரம்-
Kanni Rasi Palan

கன்னி

நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம். நிலுவையில் உள்ள வேலைகளை முடித்து, கவலை தீர்ப்பீர்கள். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இன்று உங்களுக்கு கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு குடும்பத்தில் நல்ல ஆலோசனை கிடைக்கும். உங்கள் குடும்ப பொறுப்புகள் சுமையாக தோன்றும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

Thulam Rasi Palan

துலாம்

இதுவரை உங்கள் எதிரியாய் இருந்தவர்கள் இன்று நட்புடன் பழகுவார்கள். இன்று வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு சற்று பலவீனமான நாள். இன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். இன்று யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். ஏனெனில் மீண்டும் பணத்தை திரும்பப் பெரும் வாய்ப்பு குறைவாக இருக்கும். அதிகாரிகளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

Viruchiga Rasi Palan

விருச்சிகம்

அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். உங்களின் தந்தை உடல்நிலை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். உடல்நிலை, உணவு விஷய விஷயத்தில் கவனம் தேவை. இன்று உங்கள் வேலைகளில் மும்முரமாக செயல்படுவீர்கள். வேலையை தேடுபவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதமாகும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் நடைபெறும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

-விளம்பரம்-
Dhanusu Rasi Palan

தனுசு

இன்று குழந்தைகளின் பிடிவாதமான குணத்தால் பெற்றோரின் அமைதி கெடும். இன்று நீங்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். சுற்றத்தாருடன் எந்த ஒரு விவாதத்திலும் ஈடுபட வேண்டாம். உரிய வாகனம், சொத்து வாங்கும் உங்களின் விருப்பம் நிறைவேறும். வீட்டில் சுப காரியங்கள், பூஜைகள் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் நீங்கள் செய்த தவறுக்காக வருந்த நேரிடும். குடும்பத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு.

Magara Rasi Palan

மகரம்

உடல் நலப் பிரச்சினை காரணமாக ஒரு முக்கியமான வேலையை முடிக்க உங்களால் முடியாது என்பதால் ஒரு பின்னடைவை சந்திப்பீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு சங்கடம் தரக்கூடிய நாள். பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. பணியிடத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். புதிய வேலை, திட்டங்களை செயல்படுத்தும் முன் சூழ்நிலையை கருத்தில் கொள்ளவும். இன்று நண்பர்களுடன் விருந்து விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

Kumba Rasi Palan

கும்பம்

நிதி ரீதியாக, நீங்கள் இன்று மிகவும் வலுவாக இருப்பீர்கள். இன்று உங்களுக்கு நற்பலன்கள் தரக்கூடிய நாள். வியாபாரத்தில் நல்ல லாபமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். பிள்ளைகளின் செயல் கண்டு மகிழ்வீர்கள். சமூகத்தில் மரியாதையும், பணியிடத்தில் பெரிய பதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது. வெளிநாடு சென்ற கல்வி கற்க விரும்புவர்களின் எண்ணம் நிறைவேறும். உறவினர்களுடன் பிரச்சனைகள் தீர்க்க முயல்வீர்கள். தந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

Meena Rasi Palan

மீனம்

இன்று நீங்கள் உங்கள் தாயின் தரப்பிலிருந்து பயனடைய வாய்ப்புள்ளது. இன்று உடல் நலப் பிரச்சினைகள் தீரும். பெற்றோருடன் இணக்கமான சூழ்நிலை இருக்கும். பணியிடத்தில் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கல்வி தொடர்பான விஷயங்களில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.