மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த மாதம் பல சவால்களை எதிர் கொள்வீர்கள் மற்றும் கடினமாக உழைப்பீர்கள். உங்களுக்கு பல வழிகளில் இருந்து பணம் கிடைக்கும். இதனால் உங்கள் நிதி நிலைமை முன்னேறும். இருப்பினும், தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். நண்பரின் உதவியால் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் எதிர்கால நலன் கருதி நீங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள். உங்கள் வருமானம் மற்றும் சேமிப்பை அதிகரிப்பதன் மூலம் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி காண முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாதம் கடினமான உழைக்க வேண்டும். இந்த மாதம் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் நிறுவனத்தில் உள்ள மேலதிகாரிகள் உங்களுக்கு திருப்தி அளிக்கும் சம்பள உயர்வைப் பெறுவதற்கு ஆதரவளிப்பார்கள். இந்த மாதம் செலவு கை மீறிப் போகும் என்பதால் உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. இந்த மாதம் அதிக உழைப்பு இருக்கும். வருமானம் அதிகரிக்கும், ஆனால் நீங்கள் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டியிருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், பணக்காரர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களது கடின உழைப்பு, திறமை தைரியத்தால் வேலைகளை சுலபமாக செய்து முடிப்பீர்கள். முன்பை காட்டிலும் , தொழில் மற்றும் வியாபாரம் முன்னுரமாக செயல்படும். பயணங்களால் நன்மை உண்டாகும். கல்வி அல்லது அறிவுசார் வேலைகளில் நீங்கள் மரியாதை பெறலாம். இந்தக் காலகட்டம் மனக் கவலைகளை அதிகரித்து, உறவுச் சிக்கல்களால் உங்களை மனச்சோர்வடையச் செய்யலாம். எனவே, மன அமைதியைப் பெற ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல மாதம். உங்கள் பணியிடத்தில் உங்கள் ஆதிக்கம் மேலோங்கும். இந்த மாதம் உங்களுக்கு பதவி உயர்வு பரிசாக கிடைக்கும். உங்கள் புதிய செயல்கள் அல்லது நடவடிக்கைகள் மூலம் உத்தியோகத்தில் நீங்கள் வளர்ச்சி காண்பீர்கள். குடும்பத்தில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சில மூதாதையர் சொத்துக்களால் செல்வம் பெறலாம். பொருளாதார நிலை வலுவாகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெற மேலதிகாரிகளின் ஆதரவை நீங்கள் பெறலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் செய்யும் வேலையை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உத்தியோகம் பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உள்ளது. தொழில் விஷயமாக வெளியூர் பயணம் செல்லலாம். இந்த மாதம் மகிழ்ச்சியைத் தரும் புதிய நிறுவனங்களுக்கு மாறுவதன் மூலம் புதிய நண்பர்களைக் கண்டறிய முடியும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். நீங்கள் சில அபரிதமான முன்னேற்றங்களை காண்பீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த மாதத்தில் வீடு வாகனம் வாங்கும் திட்டம் இருந்தால் அது நிறைவேறும். கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் உள்ளவர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள். கல்வி பணிக்காக சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த மாதம் விரைவில் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திருமண பேச்சு வார்த்தைகள் சற்று தள்ளி போகும். ஆன்மீகத்தில் மனம் செல்லும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். உங்கள் குழந்தைகள் மீதான அக்கறைகூடும். அவர்கள் மீது நீங்கள் அன்பையும் பாசத்தையும் பொழிவீர்கள். இந்த மாதம் லாப வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த மாதம் உங்கள் தொழிலை விரிவுபடுத்த சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் தந்தையிடமிருந்தும் பணம் பெறலாம். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பணியின் அளவு கூடும். வியாபாரத்தில் சிரமங்கள் இருக்கலாம், ஆனால் லாபத்திற்கான வாய்ப்புகளும் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த மாதம் சற்று கவனமாக இருக்க வேண்டும். இளைய சகோதரர்கள் மற்றும் தந்தையின் செல்வாக்கு இந்த காலகட்டத்தில் அதிகரிக்கும். இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களுடன் வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது இதனை தவிர்ப்பதன் மூலம் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளலாம். நண்பரின் உதவியால் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயணச் செலவுகள் அதிகரிக்கலாம். நண்பரின் உதவியால் வருமானத்தைப் பெருக்கும் வழி உருவாகும். செலவுகள் அதிகமாகவே இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஜூலை மாதம் சிறப்பான மாதமாக இருக்கும். கல்விப் பணிகளில் வெற்றி கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். வாடிக்கையாளர்களின் பாராட்டு உங்கள் தொழிலில் சிறப்பாக செயல்பட வைக்கும். உங்களின் தொழில் வளர்ச்சிக்காக புதிய இடங்களுக்கு இடம் பெயர்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. வியாபாரம் மற்றும் வேலையில் பதவி உயர்வுகள் மூலம் லாபம் கிடைக்கும். கல்வியில் வளர்ச்சி பெற மாணவர்களுக்கு இந்த மாதம் உறுதுணையான காலமாக இருக்கும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த மாதம் லாபம் அதிகரிக்கும். இந்த மாதம் நீங்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். தாயின் அனுகூலமான ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கல்விப் பணி மகிழ்ச்சியான பலனைத் தரும். கல்வி பணிக்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டு.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த மாதம் நீண்ட தூர பிரயாணங்கள் மேற்கொள்வீர்கள். இந்த மாதம் உங்கள் காதல் துணையின் ஆலோசனை உங்கள் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் மாற்றம் ஏற்படலாம். எழுதுதல் போன்ற அறிவுசார் வேலைகள் மூலம் நீங்கள் மரியாதை பெறலாம். பண வரவு அதிகமாகும். வருமானம் அதிகரிக்கும். இந்த மாதம் வீடுகள், நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மூலம் பணத்தைப் பெற முடியும்.
மீனம்
வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுக்காய் காத்திருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஜூலை மாதம் சிறந்த மாதம். உங்கள் துணையுடன் நீங்கள் வெளியிடங்களுக்குப் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான பாதைகள் அமையும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் வளர்ச்சி காண்பீர்கள். தொழில் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் ஆதாயம் மூலம் நீங்கள் பொருளாதார வளர்ச்சி காண்பீர்கள்.
இதனையும் படியுங்கள் : இன்றைய ராசிபலன் – 1 ஜூலை 2024!