இட்லி, தோசையுடன் சாப்பிட ருசியான தக்காளி பாதாம் கிரேவி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

வழக்கமாக நாம் தக்காளி வாங்கி ஒரே மாதிரியான தக்காளி குழம்பு அல்லது கிரேவியை தான் பெரும்பாலும் செய்து சாப்பிடுவோம். ஒரே மாதிரியான தக்காளி குழம்பு செய்வதால் வீட்டில் இருப்பவர்களுக்கு போர் அடிக்கும் அல்லவா? நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு தக்காளி கிரேவி சமைப்பார்கள். அதில் ஒன்றான தக்காளி பாதாம் கிரேவி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்த தக்காளி பாதாம் கிரேவியானது நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த வாரம் வித்தியாசமான தக்காளி கிரேவி செய்ய நினைத்தால், தக்காளி பாதாம் கிரேவியை செய்யுங்கள்.

-விளம்பரம்-

இந்த கிரேவி வழக்கத்திற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். இந்த தக்காளி பாதாம் கிரேவியை செய்வதற்கு காய்கறிகள் கூட எதுவும் தேவை இல்லை கொஞ்சம் வெங்காயம், தக்காளி ,ஒரு கப் பாதாம் இருந்தால் போதும் இந்த கிரேவியை 10 நிமிடத்திற்குள்ளே தயார் செய்து விடலாம். இந்த கிரேவி நல்ல ஒரு அசைவ குழம்பு சுவையில் மிகவும் அருமையாக இருக்கும். புளிப்பு, காரம் என அனைத்தும் சேர்ந்த இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -
Print
No ratings yet

தக்காளி பாதாம் கிரேவி | Tomato Badam Gravy Recipe In Tamil

வழக்கமாக நாம் தக்காளி வாங்கி ஒரே மாதிரியான தக்காளி குழம்பு அல்லது கிரேவியை தான் பெரும்பாலும் செய்து சாப்பிடுவோம். ஒரே மாதிரியான தக்காளி குழம்பு செய்வதால் வீட்டில் இருப்பவர்களுக்கு போர் அடிக்கும் அல்லவா? நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு தக்காளி கிரேவி சமைப்பார்கள். அதில் ஒன்றான தக்காளி பாதாம் கிரேவி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்த தக்காளி பாதாம் கிரேவியானது நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த வாரம் வித்தியாசமான தக்காளி கிரேவி செய்ய நினைத்தால், தக்காளி பாதாம் கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி வழக்கத்திற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: Tomato Badam Gravy
Yield: 4 People
Calories: 42kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1/4 கி தக்காளி
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 6 பல் பூண்டு
  • 1/4 கப் பாதாம்
  • 5 துண்டு முருங்கைக்காய்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • கடலை எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்

செய்முறை

  • முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் தேங்காய், பாதாம் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கருவேப்பிலை, தக்காளி, முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்கு வெந்ததும் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்தூள் சேர்த்து நன்கு கலந்து அரைத்த தேங்காய், பாதாம் விழுது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான தக்காளி பாதாம் கிரேவி தயார். இந்த கிரேவி சப்பாத்தி, தோசை, சாதம் என அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 42kcal | Carbohydrates: 4.8g | Protein: 4.1g | Fat: 0.2g | Sodium: 6mg | Fiber: 1.5g | Vitamin A: 20IU | Vitamin C: 26mg | Calcium: 10mg | Iron: 2mg

இதனையும் படியுங்கள் : சுவையான தக்காளி முட்டைகோஸ் காரக்கறி ஒரு முறை இப்படி வீட்டிலயே ட்ரை பண்ணி பாருங்க!