காலை டிபனுக்கு சூப்பரான தக்காளி தோசை இப்படி செய்து கொடுத்து பாருங்க!

- Advertisement -

தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும்தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை உணவு. இதை வெகு எளிதாக செய்துவிடலாம். அதுமட்டுமின்றி தோசை உடல் பருமனை அதிகரிக்கும் பொருட்களையோ அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பொருட்களையோ கொண்டவை அல்ல. மேலும் இவை எளிமையான மற்றும் எளிதாக செய்து முடிக்க கூடிய ஒரு உணவு வகை. தோசையில் பல வகை உண்டு அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மிகுந்த சுவையான மற்றும் வித்தியாசமான தக்காளி தோசை. என்ன தக்காளி தோசையா என்று நினைக்கிறீர்களா? ஆமாங்க. தக்காளி வைத்து சுவையான தோசையை செய்து உங்கள் வீட்டு குட்டிஸ்களுக்கு சாப்பிட கொடுங்கள்.

-விளம்பரம்-

பொதுவாக நம் காலை உணவாக சாதா தோசை அல்லது ரவை தோசையை தான் நம்மில் பல பேர் வழக்கமாக நம் குடும்பத்தினருக்கு செய்து கொடுத்து இருப்போம். நீங்கள் வழக்கமாக செய்யும் தோசைக்கு ஒரு நாள் விடுப்பு கொடுத்துவிட்டு, ஒரு மாறுதலுக்காக இந்த மிகுந்த சுவையான தக்காளி தோசையை செய்து உங்கள் குடும்பத்தினரை மகிழ வையுங்கள். அவர்கள் நிச்சயமாக அசந்து போவார்கள். வழக்கமாக தக்காளி வைத்து சட்னி, குழம்பு, குருமா,தக்காளி சாதம் போன்றவையே அதிகமாக செய்து இருப்போம். ஆனால் இன்று தக்காளி வைத்து மொறுமொறு தோசை செய்யலாமா!

- Advertisement -
Print
4.50 from 2 votes

தக்காளி தோசை | Tomato Dosa Recipe In Tamil

தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும்தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை உணவு. இதை வெகு எளிதாக செய்துவிடலாம். அதுமட்டுமின்றி தோசை உடல் பருமனை அதிகரிக்கும் பொருட்களையோ அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பொருட்களையோ கொண்டவை அல்ல. மேலும் இவை எளிமையான மற்றும் எளிதாக செய்து முடிக்க கூடிய ஒரு உணவு வகை. தோசையில் பல வகை உண்டு அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மிகுந்த சுவையான மற்றும் வித்தியாசமான தக்காளி தோசை.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast
Cuisine: Indian
Keyword: Tomato Dosa
Yield: 4 People
Calories: 61kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 5 தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • 6 வர ‌மிளகாய்
  • 4 பல் பூண்டு
  • 50 கி உளுந்து
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 250 கி இட்லி அரிசி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் உளுந்து, இட்லி அரிசி, வெந்தயம் சேர்த்து நன்கு அலசி பின் தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • அரிசி நன்கு ஊறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு நன்கு அரைத்துக் கொள்ளவும். பின் மாவை 8 மணி நேரம் வரை அப்படியே வைத்து விடவும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், தக்காளி, பூண்டு, வர ‌மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது மற்றும் தேவையான அளவு மாவு எடுத்து கலந்து கொள்ளவும். மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக வார்த்து சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
  • அவ்வளவுதான் சுவையான தக்காளி தோசை தயார். இந்த தோசைக்கு புதினா துவையல், தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 300g | Calories: 61kcal | Carbohydrates: 3.5g | Protein: 8g | Fat: 3.1g | Sodium: 130mg | Potassium: 217mg | Fiber: 1.5g | Vitamin A: 17IU | Vitamin C: 23mg | Calcium: 13mg | Iron: 5mg

இதனையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட ஆந்திரா ஃபேமஸ் வெள்ளரிகாய் சட்னி இப்படி செஞ்சி பாருங்க!