காரசாரமான ருசியில் தக்காளி பூண்டு தொக்கு இப்படி ட்ரை பண்ணி பாருங்க மிஸ் பண்ணிராதீங்க!

- Advertisement -

தக்காளி தொக்கு என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த உணவாக இருக்கிறது. இந்த தக்காளி தொக்கை வைத்து எந்த உணவுக்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அந்த அளவுக்கு இதனுடைய ருசி இருக்கும். நாம் எப்பொழுதும் சாப்பிடும் உணவின் அளவை விட தக்காளி தொக்கு இருந்தால் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவோம். சிறிதும் நேரமில்லாமல் நகர்புறங்களில் பணி செய்து கொண்டிருக்கும் நண்பர்கள் ஒருமுறை தக்காளி தொக்கு இந்த முறையில் செய்து பாருங்கள்.

-விளம்பரம்-

மிகவும் குறைந்த நேரத்தில் எளிதில் தயாராகும் இந்த தொக்கை, மூன்று மாதங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். இனிப்பு, புளிப்பு, கசப்பு உள்ளிட்ட அறுசுவையும் இந்த தொக்கில் இருக்கிறது. இனி சட்னி, சாம்பார் என டிபனுக்கு புதிதாக சைடு டிஷ் செய்யத் தேவையே இல்லை. இந்த தக்காளி தொக்கு ரெசிபியை செய்து ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்தாலே போதும். சுடச்சுட இட்லி, தோசை அல்லது சப்பாத்திக்கு இன்ஸ்டன்ட்டாக தேவைப்படும் நேரத்தில் இதனை சைடு டிஷ்ஷாக உபயோகிக்கலாம்.

- Advertisement -

தக்காளி தொக்கும் அப்பளமும் இருந்தால் போதும். அதுவே பலருக்கும் விருந்து சாப்பிட்டது போல் குஷி ஆகிவிடுவார்கள். தக்காளி குழம்பு வைப்பது எளிமையான விஷயம் என்றாலும் அதன் சுவை செய்யும் பக்குவத்தில்தான் உள்ளது. நாம் உணவுகள் சாப்பிடும் போதே பொரியல் கூட்டு எதுவும் இல்லாத சமயத்தில் அந்த தொக்கை சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதை அரிதான ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் இன்று நாம் தக்காளி பூண்டு தொக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
3.72 from 7 votes

தக்காளி பூண்டு தொக்கு | tomato garlic thokku recipe in tamil

தக்காளி தொக்கு என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த உணவாக இருக்கிறது. இந்த தக்காளி தொக்கை வைத்து எந்த உணவுக்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அந்த அளவுக்கு இதனுடைய ருசி இருக்கும். நாம் எப்பொழுதும் சாப்பிடும் உணவின் அளவை விட தக்காளி தொக்கு இருந்தால் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவோம். சிறிதும் நேரமில்லாமல் நகர்புறங்களில் பணி செய்து கொண்டிருக்கும் நண்பர்கள் ஒருமுறை தக்காளி தொக்கு இந்த முறையில் செய்து பாருங்கள். மிகவும் குறைந்த நேரத்தில் எளிதில் தயாராகும் இந்த தொக்கை, மூன்று மாதங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். இனிப்பு, புளிப்பு, கசப்பு உள்ளிட்ட அறுசுவையும் இந்த தொக்கில் இருக்கிறது.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Thokku
Cuisine: Indian
Keyword: tomato garlic thokku
Yield: 5 People
Calories: 48kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பூண்டு
  • 10 தக்காளி                      
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 12 வர‌ மிளகாய்
  • புளி எலுமிச்சை அளவு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 2 டீஸ்பூன் வெல்லம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வரமிளகாய் மற்றும் புளியை சுடுதண்ணீரில் சிறிது நேரம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.
  • மிளகாய் நன்கு ஊறியதும் ஒரு‌ மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு தக்காளி, சின்ன வெங்காயத்தை ‌மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு‌ வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • பின் அரைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதன் பின் அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும் நாம் அரைத்து வைத்துள்ள வரமிளகாய் புளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்.
  • ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.
  • பிறகு இதனை தக்காளி விழுதில் சேர்த்து நன்கு கிளறி பின் வெல்லம் சேர்த்து கலந்து இறக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான தக்காளி பூண்டு தொக்கு தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 48kcal | Carbohydrates: 3.9g | Protein: 4.9g | Fat: 0.2g | Potassium: 237mg | Fiber: 1.2g | Sugar: 2.6g | Vitamin A: 833IU | Vitamin C: 12.7mg