தக்காளி தொக்கு சாதம் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு பிடி சாதம் கூட மிச்சம் இருக்காது!

- Advertisement -

தக்காளி தொக்கு இருக்கும் போது இரண்டு வாய் அதிகமாக தான் சாப்பிடுவோம். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் எப்போதும் செய்யும் தக்காளி தொக்கையே கொஞ்சம் வித்தியாசமாக நீண்ட நாட்கள் கெடாமல் எப்படி செய்வது எப்படி என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

-விளம்பரம்-

தக்காளி உடம்புக்கு எவ்வளவு நல்லது என்று அனைவருக்கும் தெரிந்தது தான். பல நோய்களுக்கு தக்காளி ஒரு நல்ல மருந்து. ஒரு தக்காளி தொக்கு போன்ற பொருட்கள் எதையுமே சேர்க்காமல் மிக மிக எளிமையாக வீட்டில் இருக்கும் ஒன்று, சில பொருள்களை வைத்து அருமையாக செய்யக் கூடிய ஒரு ரெசிபி தான் இந்த தக்காளி தொக்கு.

- Advertisement -

தக்காளி சாதம் விதவிதமான வகைகளில் செய்யப்படுவது உண்டு.  தக்காளி சேர்த்து பிரியாணிக்கு கிண்டுவது போலவும் கிண்டுவது உண்டு. சாதாரணமாக தக்காளியை தொக்கு போல வதக்கி, அதில் சாதத்தை சேர்த்து கிளறி வைப்பதும் உண்டு,இந்த முறையில்  ரொம்ப எளிமையாக அருமையான சுவையில் தக்காளி தொக்கு சாதம் செய்வது எப்படி? அப்படின்னு தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

Print
3.75 from 4 votes

தக்காளி தொக்கு சாதம் | Tomato Thokku Rice Recipe In Tamil

தக்காளி உடம்புக்கு எவ்வளவு நல்லது என்று அனைவருக்கும் தெரிந்தது தான். பல நோய்களுக்கு தக்காளி ஒரு நல்லமருந்து. ஒரு தக்காளி தொக்கு போன்ற பொருட்கள் எதையுமே சேர்க்காமல் மிக மிக எளிமையாகவீட்டில் இருக்கும் ஒன்று, சில பொருள்களை வைத்து அருமையாக செய்யக் கூடிய ஒரு ரெசிபிதான் இந்த தக்காளி தொக்கு. இந்த முறையில்  ரொம்ப எளிமையாக அருமையான சுவையில் தக்காளி தொக்குசாதம் செய்வது எப்படி? அப்படின்னு தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Tomato Thokku Rice
Yield: 4
Calories: 493kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கிண்ணம் வடித்த சாதம்
  • 2 பெரியவை தக்காளி பொடிதாக வெட்டி கொள்ளவும்
  • 10 சின்ன வெங்காயம் நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்
  • 2 கீரியது பச்சை மிளகாய்
  • மஞ்சள் பொடி சிறிதளவு
  • 1/2 தே.கரண்டி கடுகு
  • உப்பு தேவைக்கு
  • 1 தே.கரண்டி உ.பருப்பு 
  • 1 தே.கரண்டி க.பருப்பு
  • 1 மே.கரண்டி கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு
  • பெருங்காய தூள் சிறிதளவு
  • 3 மே.கரண்டி எண்ணெய்

செய்முறை

  • பாத்திரத்தில் எண்ணெய் சூடாணதும் கடுகு,உ.பருப்பு, க.பருப்பு. கறிவேப்பிலை இட்டு பொரிக்கவும்.
  • அதில் மிளகாய், வெங்காயம் இட்டு நன்றாக வதக்கவும், பின்னர் பெருங்காயம் தூள் சேர்கவும்.
  • தக்காளி சேர்த்து, சிறிது உப்பிட்டு வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கி கறைந்ததும். மஞ்சள் தூள், உப்பு. சிறிது எண்ணெய் சேர்த்து இளந் தீயில் 2 நிமிடம் மூடிவைத்து, கொத்தமல்லி சேர்த்து இரக்கவும்.
  • இதில் 1 கிண்ணம் சாதம் சேர்த்து, நன்றாக கிளறி.சூடாக பறிமாறவும்.

Nutrition

Serving: 250g | Calories: 493kcal | Carbohydrates: 69g | Protein: 4.9g | Fat: 25g | Sodium: 16mg | Potassium: 432mg | Calcium: 32mg | Iron: 4.1mg