பால் காய்ச்சும்போது பொங்கி கீழே வழியுதா? இனி பொங்கி வீணாகாமல் தடுக்க இதை செய்யுங்கள்!

- Advertisement -

நாம் தினமும் காபி அல்லது டீ குடிக்கிறோம். அதற்கு பாலை தான் பயன்படுத்துகிறோம். ஆனால் பாலை சிந்தாமல் காய்ச்சுவது என்பது ஒரு சவாலான விஷயம் தான். நாம் இமைக்கும் நொடியில் பால் பொங்கி விடுகிறது. பால் காய்ச்சும்போது, நீங்கள் மிகவும் கவனமாகவும் தந்திரமாகவும் இருக்க வேண்டும். மற்ற வேலைகளில் உங்கள் கவனத்தை சிறிதளவு மாற்றினாலும்கூட, பால் பொங்கி எல்லா இடங்களிலும் பரவி வீணாகிறது. இது வேடிக்கையாகத் தோன்றலாம், ஆனால் அது உண்மைதான். ஒருமுறை இப்படி நடந்தால் பரவாயில்லை ஒவ்வொரு முறையும் இப்படி நடந்தால் நமக்கு எரிச்சல் ஆகத்தான் இருக்கும். எனவே பால் பொங்காமல் இருப்பதற்கு சில குறிப்புகள் இப்பதிவில் கூறப்பட்டுள்ளன, இதனை பின்பற்றினால் நீங்களும் பால் பொங்குவதனை தடுக்கலாம்.

-விளம்பரம்-

ஒரு பெரிய பாத்திரத்தைப் பயன்படுத்தவும்

பொதுவாக ஒரு நாளில் நாம் ஒரு முறையாவது பாலை காய்ச்சுவோம். ஆனால் நாம் சிறிய பாத்திரத்தை பயன்படுத்தும் பொழுது பால் அடிக்கடி சிந்தி பால் வீணாவது மட்டுமல்லாமல் இடத்தையும் வீணாக்கி விடும். இதனை நீங்கள் சிறிய பாத்திரம் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் காணலாம். எனவே பாலின் அளவை விட கூடுதல் அளவுள்ள பாத்திரத்தை எடுத்து அதில் பாலை காய்ச்சுங்கள். இப்படி செய்வதன் மூலம் பால் பொங்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும், அது மட்டுமல்லாமல் பால் கொதிப்பதற்கான இடமும் அதிகமாக இருக்கும்.

- Advertisement -

மர கரண்டியை பயன்படுத்துங்கள்

பால் காய்ச்சும் பாத்திரத்தின் மீது மட்டமாக இந்த மரக்கரண்டியை வைத்தால் அது பாலை பொங்க விடாமல் தடுக்கும். உங்களுக்கு ஏதேனும் வேலை இருக்கா அதனையும் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மரக்கரண்டியை பால் பாத்திரத்தின் மீது வைத்து விட்டால் பால் பொங்குவதனை நாம் தடுக்கலாம். இந்த எளிய தந்திரத்தை பின்பற்றுவதன் மூலம் பால் வீணாவது இடம் நாசமாவது போன்றவற்றை நாம் தடுத்து விடலாம்.

ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்

பால் பொங்கி வீணாவதை தடுக்க ஒரு சிறிய ஹேக்காக உப்பு உங்களுக்கு பயன்படும். ஆம், பாலில் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்ப்பதன் மூலம் பால் கசிந்து வெளியேறுவதை தடுக்கலாம். இது ஒரு சிறந்த ஸ்மார்ட் ஹேக். பாலில் உப்பை சேர்ப்பதன் மூலம், அதிக கொதிநிலை மற்றும் பால் கசிவைத் தடுக்க உதவும்.

பாலை கிளறிவிடுதல்

பால் நிரம்பி வழிவதைத் தடுப்பதற்கான மற்றொரு எளிய வழி, சீரான இடைவெளியில் பாலை கிளறி கொண்டிருக்க வேண்டும். இது வெப்பத்தை சமமாக விநியோகிக்க உதவுகிறது மற்றும் ஹாட்ஸ்பாட்களை உருவாக்குவதைத் தடுக்கிறது. இதனால், பால் நிரம்பி வெளியே வழிவதை நீங்கள் தடுக்கலாம்.

-விளம்பரம்-