பிரபலமான உணவுப்பொருட்களில் ஒன்றாக ‘பிரியாணி’ இன்று உருவெடுத்துள்ளது என்றால் நிச்சயம் மிகையாது. தற்போது பிரியாணி கடைகளை நோக்கி எல்லா நாட்களிலும் வாடிக்கையாளர்கள் படையெடுத்து வரும் நிலையில், நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரியாணி கடைகள் தோன்றி வருகின்றன. பொதுவாக பிரியாணி என்றாலே அதற்கு தனி மவுசு தான்.
அனைவருக்கும் தெரிந்தது போலவே சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி தான் பிரியாணிகளில் பெரும்பாலானோரால் விரும்பி உண்ண படுகிறது. தமிழ்நாட்டிலும் பலவிதமான பிரியாணிகள் கிடைக்கும் உதாரணமாக செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி மற்றும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஆகியவை மிக மிக புகழ்பெற்றது. ஒவ்வொரு பிரியாணியும் ஒவ்வொரு வகையில் வேறுபட்ட சுவையுடன் இருக்கும்.
ஆனால் வான்கோழி பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. வான்கோழி என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு. அசைவ பிரியர்களுக்கு இந்த வான்கோழி மிகவும் பிடித்த உணவு என்று கூட சொல்லாம். சாதரணமான வான்கோழி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அந்த வான்கோழியில் பிரியாணி செய்தால் எப்படி இருக்கும்? நாம் இந்த பதிவில் சுவையான வான்கோழி பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வான்கோழி பிரியாணி | Turkey biriyani recipe in tamil
Equipment
- 1 கரண்டி
- 1 குக்கர்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கிலோ வான்கோழி
- 2 கப் பாசுமதி அரிசி
- 2 வெங்காயம்
- 3 தக்காளி
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- 4 ஸ்பூன் நெய்
- 1 துண்டு பட்டை
- 4 கிராம்பு
- 3 ஏலக்காய்
- 1 பிரிஞ்சி இலை
- 1 கப் புதினா, கொத்தமல்லி
- 10 முந்திரி பருப்பு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் வான்கோழியை சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாக வெட்டி பொன்னிறமாக எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் முந்திரிபருப்பை நெய்யில் பொரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து குக்கரில் வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
- பிறகு அதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- ஊற வைத்த அரிசியை வடிகட்டி இந்தக் கலவையோடு சேர்த்து கிளறி விட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்துள்ள வான்கோழியை இந்த அரிசியோடு சேர்த்து குக்கரை மூடி விடவும்.
- மிதமான தீயில் வைத்து 5 விசில் வரை வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- பின்னர் குக்கர் மூடியைத் திறந்த பொரித்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் முந்திரி பருப்பினை மேலாகத் தூவி கிளறிவிட்டு சூடாக பரிமாறினால் சுவையான வான்கோழி பிரியாணி தயார்.