Home சைவம் சாதத்துடன் சாப்பிட ருசியான டர்னிப் மோர் குழம்பு‌ இப்படி செஞ்சி பாருங்கள்! ஒரு சொட்டு குழம்பும்...

சாதத்துடன் சாப்பிட ருசியான டர்னிப் மோர் குழம்பு‌ இப்படி செஞ்சி பாருங்கள்! ஒரு சொட்டு குழம்பும் கூட மிஞ்சமாகாது!

மோர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. அத்தகைய மோரை சாதாரணமாக குடிப்பது போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக அதனை குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள். வழக்கமாக சிம்பிளாக செய்யும் மோர் குழம்பு போர் அடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில் மோர் குழம்பு சாப்பிட ஆசையா? அப்போ இந்த முறையில் டர்னிப் சேர்த்து மோர் குழப்பு செய்து பாருங்க. கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது. கேரட், பீட்ரூட், முள்ளங்கி போல டர்னிப்பும் வேர்ப்பகுதியிலிருந்து கிடைக்கும் ஒரு கிழங்கு வகை காய்.

-விளம்பரம்-

டர்னிப்பின் கிழங்கும், இலைகளும் அதிக சத்துக் களைக் கொண்டுள்ளது. ஆசியா, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் டர்னிப்பின் இலைகளும் உண்ணப் படுகின்றன. காரம் பிடிக்காத பலருக்கும் பிடித்த குழம்பு மோர் குழம்பு. இதை தயார் செய்ய வெறும் 5 நிமிடம் போதும். டர்னிப் சேர்த்து மிகவும் சுலபமான முறையில் செய்யப்படும் இந்த மோர் குழம்பு வெயில்காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும்.

தேங்காய், சீரகம், பச்சைமிளகாய் வாசனை தான் இந்த குழம்போட ஹைலைட். அதுவும் தாளிக்க தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணா, கேட்கவே வேண்டாம். குழம்பு அப்படியே கல்யாண வீட்டுல சாப்பிடுற மாதிரியே இருக்கும். இதுல வெண்டைக்காய், பூசணிக்காய்னு உங்களுக்கு விருப்பமான காய்கறி சேர்த்துக்கலாம். வீட்ல காயே இல்லாட்டியும் பிரச்சனை இல்லைங்க, பிளைன் மோர் குழம்பு கூட வைக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த டர்னிப் மோர் குழம்பு எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Print
3.34 from 3 votes

டர்னிப் மோர் குழம்பு‌ | turnip morkulambu recipe in tamil

மோர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. அத்தகைய மோரை சாதாரணமாக குடிப்பது போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக அதனை குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள். வழக்கமாக சிம்பிளாக செய்யும் மோர் குழம்பு போர் அடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில் மோர் குழம்பு சாப்பிட ஆசையா? அப்போ இந்த முறையில் டர்னிப் சேர்த்து மோர் குழப்பு செய்து பாருங்க. கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது. கேரட், பீட்ரூட், முள்ளங்கி போல டர்னிப்பும் வேர்ப்பகுதியிலிருந்து கிடைக்கும் ஒரு கிழங்கு வகை காய். டர்னிப்பின் கிழங்கும், இலைகளும் அதிக சத்துக் களைக் கொண்டுள்ளது. காரம் பிடிக்காத பலருக்கும் பிடித்த குழம்பு மோர் குழம்பு. இதை தயார் செய்ய வெறும் 5 நிமிடம் போதும். டர்னிப் சேர்த்து மிகவும் சுலபமான முறையில் செய்யப்படும் இந்த மோர் குழம்பு வெயில்காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: turnip morkulambu
Yield: 4 People
Calories: 49kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/4 கப் பாசிப்பருப்பு
  • 1 டர்னிப்
  • 2 கப் தயிர்

அரைக்க

  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 1 டேபிள் ஸ்பூன் உளுந்து
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 3 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1/4 கப் தேங்காய்

தாளிக்க

  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பாசிப்பருப்பை நன்கு அலசி குக்கரில் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • டர்னிப்பை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி கடாயில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கிண்ணத்தில் தயிர், பெருங்காயம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளவும்.
  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு வாணலியில் சேர்த்து வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு‌ கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பருப்புடன் சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • அதன்பிறகு நாம் கடைந்து வைத்துள்ள தயிரை இந்த பாசிப்பருப்புடன்‌ சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்னர் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா, சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான டர்னிப் மோர் குழம்பு தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 49kcal | Carbohydrates: 3.6g | Protein: 7.8g | Fat: 0.1g | Sodium: 39mg | Potassium: 233mg | Fiber: 1.9g | Vitamin A: 7IU | Vitamin C: 14.8mg | Calcium: 38mg | Iron: 0.34mg