கமகமக்கும உடுப்பி தோசை இப்படி செய்து பாருங்க! எப்பொழுதும் ஓரே மாதிரியாக தோசை ஊற்றாமல் இப்படி செய்யுங்கள்!

- Advertisement -

இட்லி மற்றும் தோசைகள் என் வீட்டில் காலை உணவாகும். சில சமயங்களில் இரவு உணவாகவும் கூட வழக்கமாக செய்யப்படும் டிபன் அல்லது பாஸ்புட் சென்டர் மெனு பலவகையான தோசைகள் உள்ளன. தோசை ஒரு ஆரோக்கியமான புரதம் நிறைந்த காலை உணவு. இது நம் நாளை தொடங்க ஒரு சிறந்த உணவை உருவாக்குகிறது.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : கமகமக்கும் முடக்காத்தான் தோசை இப்படி செய்து பாருங்க! குறைந்தது 10 தோசை சாப்பிடுவாங்க!

- Advertisement -

இது நம் உடலுக்கு ஊட்டமளிக்கும் சிறந்த ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக நான் கருதுகிறேன். நான் பின் தொடரும் சமையல் குறிப்புகளை இங்கே பகிர்கிறேன். உடுப்பி தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

Print
4 from 2 votes

உடுப்பி தோசை | Uduppie Dosa Recipe in Tamil

இட்லி மற்றும் தோசைகள் என் வீட்டில் காலை உணவாகும். சில சமயங்களில் இரவு உணவாகவும் கூட வழக்கமாக செய்யப்படும் டிபன் அல்லது பாஸ்புட் சென்டர் மெனு பலவகையான தோசைகள் உள்ளன. தோசை ஒரு ஆரோக்கியமான புரதம் நிறைந்த காலை உணவு. இது நம் நாளை தொடங்க ஒரு சிறந்த உணவை உருவாக்குகிறது. இது நம் உடலுக்கு ஊட்டமளிக்கும் சிறந்த ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக நான் கருதுகிறேன். நான் பின் தொடரும் சமையல் குறிப்புகளை இங்கே பகிர்கிறேன்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Dosai, தோசை
Yield: 4 People
Calories: 110kcal

Equipment

  • 1 மிக்ஸி (அ) கிரைண்டர்
  • 1 பெரிய பவுல்
  • 1 தோசைக்கல்

தேவையான பொருட்கள்

  • 2 கப் பச்சரிசி
  • 1/2 Tbsp வெந்தயம்
  • 2 கப் அவல்
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 கப் மோர்
  • எண்ணெய் தேவையான அளவு
  • தண்ணீர் சிறிதளவு

செய்முறை

  • முதலில் நாம் எடுத்து வைத்திருக்கும் பச்சரிசி, வெந்தயம், அவல் இவற்றை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்தது அதனுடன் தண்ணீர் சேர்த்து இரண்டு, மூன்று முறை நன்றாக அலசிக் கொள்ளவும்.
  • பின் நாம் தண்ணீரில் அலசி வைத்திருக்கும் பொருள்களுன் புளித்த மோர் சேர்த்து நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை நன்றாக ஊற வைத்து கொள்ளவும்.
  • பின்பு நாம் மோரில் ஊற வைத்த அரிசி, அவல், வெந்தயத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின் அரைத்த மாவுடன் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • நாம் இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் மாவினை ஒரு ஏழு மணி நேரம் வரை தட்டினால் மூடி வைத்து விட வேண்டும் மாவு நன்றாக புளித்து வந்ததும்.
  • வழக்கம்போல் தோசை கல்லை அடுப்பில் காய வைத்து ஒரு தேக்கரண்டி மாவினை தோசை கல்லில் ஊத்தாப்பம் போல ஊற்றி கொள்ளவும் பின்பு சிறிது எண்ணெயை தோசையை சுற்றி ஊற்றிக் ஊற்றிக் கொள்ளவும்.
  • அவ்வளவுதான் சுட சுட உடுப்பி தோசை தயார் இதனுடன் வழக்கம் போல் சாம்பார் அல்லது சட்னி சேர்த்து சாப்பிட்டால் அற்புதமான சுவையில் இருக்கும்.

Nutrition

Serving: 700G | Calories: 110kcal | Carbohydrates: 67g | Protein: 12g | Fat: 1.2g | Saturated Fat: 0.2g | Cholesterol: 0.1mg | Potassium: 250mg | Sugar: 0.5g