- Advertisement -
முடக்கத்தான் தோசை உணவில் சேர்த்துக்கொள்ளுங்க இனி மூட்டுவலிக்கு டாடா சொல்லிடுங்க. தோசைகளில் பல வித வெரைட்டிகளை விரும்பும் மனசு, அதில் சத்துக்கள் நிறைந்திருந்தால் இன்னும் சந்தோஷத்தோடே சாப்பிடத் துடிக்கும். சத்தான கீரைகளை விரும்பி உண்டு ஆரோக்கியமாக வாழ ஆசையா?
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஏற்ற மதுரை நீர் சட்னி இப்படி செய்து பாருகங்க! ஒரு மாறுதலாக இருக்கும்!
- Advertisement -
வாத நோய் வராமல் தடுக்கிறது. பித்தத்தை சுத்தமாக அகற்றி விடுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். குழந்தைகள் அடம்பிடிக்காமல் சாப்பிட வேண்டுமா? குழந்தைகளும் பெரியவர்களும் அடம்பிடிக்காமல் சுவையாய் சாப்பிட இதுவே சிறந்த வழி.
முடக்கத்தான் தோசை | Mudakathan Dosai Recipe in Tamil
முடக்கத்தான் தோசை உணவில் சேர்த்துக்கொள்ளுங்க இனி மூட்டுவலிக்கு டாடா சொல்லிடுங்க. தோசைகளில் பல வித வெரைட்டிகளை விரும்பும் மனசு, அதில் சத்துக்கள் நிறைந்திருந்தால் இன்னும் சந்தோஷத்தோடே சாப்பிடத் துடிக்கும். சத்தான கீரைகளை விரும்பி உண்டு ஆரோக்கியமாக வாழ ஆசையா? வாத நோய் வராமல் தடுக்கிறது. பித்தத்தை சுத்தமாக அகற்றி விடுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். குழந்தைகள் அடம்பிடிக்காமல் சாப்பிட வேண்டுமா? குழந்தைகளும் பெரியவர்களும் அடம்பிடிக்காமல் சுவையாய் சாப்பிட இதுவே சிறந்த வழி!
Yield: 4 People
Calories: 90kcal
Equipment
- 1 மிக்ஸி (அ) கிரைண்டர்
- 1 தோசை கல்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் புழுங்கல் அரிசி
- 2 கப் முடக்கத்தான் கீரை
- 1 Tsp வெந்தயம்
- தண்ணீர் தேவையாண அளவு
செய்முறை
- முதலில் நாம் வைத்திருக்கும் அரிசி மற்றும் வெந்தயத்தை இரண்டு முறை தண்ணீரீல் அலசி சுத்தம் செய்து பின் நன்கு ஊற வைத்து கொள்ளவும்.
- அதன் பின் நாம் வைத்திருக்கும் முடக்கத்தான் கீரை இலையையும் ஆய்ந்து, தண்ணீர் வைத்து சுத்தமாக கழுவி கொள்ளவும்.
- அதன் பின் தோசை மாவுக்கு அரைப்பது போலவே தோசை மாவு பதத்தில் அரைத்து, அதனுடன் முடக்கத்தான் இலையையும் சேர்த்து நன்கு அரைத்து விடவும்.
- இல்லை மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்ந்து போட்டு கூட அரைக்கலாம். அப்படி மாவை மிகவும் நைசாக தோசை ஊற்றுவதற்கு முதல் நாள் இரவே அரைத்து வைத்து விடவும்.
- பின் மறுநாள் வழக்கம் போல் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடாகியதும் தோசை ஊற்றி எடுக்கவும். அவ்வளவு தான் முடக்கத்தான் தோசை தயார் இதற்கு தேங்காய் சட்னி, பூண்டுச் சட்னி – இரண்டுமே நன்றாக இருக்கும்.
Nutrition
Serving: 450G | Calories: 90kcal | Carbohydrates: 52g | Protein: 11g | Saturated Fat: 0.5g | Potassium: 59mg | Sugar: 0.5g | Iron: 7mg