- Advertisement -
குழந்தைகள் ஏதாவது அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்கும் பொழுது இது போல ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகளை செய்து கொடுக்கலாம். ஒரு அரிசி இருந்தாலே உப்பு உருண்டையை ரொம்பவே பஞ்சு போல இப்படி செய்து விடலாம்! ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும் பொழுது கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளாமல் நல்ல ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகளை வீட்டிலேயே நாம் சாப்பிட்டால் மிகவும் நல்லது.
-விளம்பரம்-
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய இந்த சிற்றுண்டி வகை உப்பு உருண்டை. அரை கப் அரிசி மாவு இருந்தால் கூட போதும் பத்து நிமிடத்தில் சட்டென செய்யக் கூடிய ஒரு எளிதான ஸ்நாக்ஸ் வகை தான் ‘உப்பு உருண்டை’. ஆரோக்கியாமான இந்த உப்பு உருண்டை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
- Advertisement -
உப்பு உருண்டை | Uppu Urundai Recipe In Tamil
குழந்தைகள் ஏதாவது அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்கும் பொழுது இது போல ஆரோக்கியமான சிற்றுண்டிவகைகளை செய்து கொடுக்கலாம். ஒரு அரிசி இருந்தாலே உப்பு உருண்டையை ரொம்பவேபஞ்சு போல இப்படி செய்து விடலாம்! ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்றுதோன்றும் பொழுது கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளாமல் நல்ல ஆரோக்கியமானசிற்றுண்டி வகைகளை வீட்டிலேயே நாம் சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஆரோக்கியாமான இந்த உப்பு உருண்டை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
Yield: 4
Calories: 25kcal
Equipment
- 1 இட்லி பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 1 கப் இட்லி அரிசி (அ) புழுங்கல் அரிசி
- 1/4 கப் தேங்காய்
- 1 வெங்காயம்
- 4 மிளகாய் வற்றல்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1/2 தேக்கரண்டி சீரகம்
- 2 தேக்கரண்டி உளுந்து
- 2 தேக்கரண்டி கடலை பருப்பு
- பெருங்காயம் சிறிது
- கறிவேப்பிலை தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியஅரிசியுடன் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து உளுந்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் போட்டு சிவக்க விடவும்.
- அதனுடன் பொடியாக நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விடவும். இதில் அரைத்த மாவை சேர்த்து கிளறி விடவும். மாவு உருண்டை பிடிக்கும் பதத்திற்கு கெட்டியாக ஆனதும் இறக்கி வைக்கவும்.
- இந்த கலவை ஆறியதும் சிறு உருண்டையாக பிடித்து இட்லி தட்டில் வைத்து இட்லியை போல் வேக வைத்து எடுக்கவும். உருண்டைகள் வேக அதன் அளவை பொறுத்து 10 – 15 நிமிடங்கள் ஆகும்.
- சுவையான உப்பு உருண்டை தயார். வேர்கடலை சட்னி அல்லது காரமான சட்னியுடன் சாப்பிட ருசியாக இருக்கும். தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம்.
Nutrition
Serving: 100g | Calories: 25kcal | Carbohydrates: 38g | Fat: 29g