எவ்வளவு செய்தாலும் காலியாகும் ருசியான வாழைக்காய் மிளகு மசாலா இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

- Advertisement -

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. மேலும் நம்முடைய அன்றாட உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளும் ஒன்றாகவும் உள்ளது. அந்த வகையில் வாழைக்காயை வறுவலாகவும், குழம்பாகவும் நம்முடைய உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். வாழைக்காயை வறுப்பதுதான் பலருடையாக முதல் தேர்வாக இருக்கும். ஆனால் என்றைக்காவது அதில் மிளகு‌ மசாலா வைக்க யோசத்ததுண்டா..? அதுவும் மட்டன் சுக்கா சுவையில் சமைத்து சாப்பிட தோன்றியதுண்டா..? மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

-விளம்பரம்-

இன்று சமைக்க பிடிக்கவில்லையா? தயிர் சாதம் தான் செய்யப் போகிறீர்களா? அந்த தயிர் சாதத்திற்கு ஊறுகாய் தொட்டுக்க ப்ளாக் பண்ணியிருந்திங்களா? அதற்கு பதிலாக சுவையான சைடு டிஷ் ஏதாவது செய்யலாம் அல்லவா? உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த வாழைக்காயைக் கொண்டு மிளகு‌ மாசாலா செய்யுங்கள். வாழைக்காய் சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது. வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்றவை நீங்கும்.

- Advertisement -

வாரம் ஒரு முறை வாழைக்காயை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. அதிலும் அதனை வறுவல் போன்று செய்து சாப்பிட்டால் மிகவும் சூப்பராக இருக்கும். பலர் இதனை சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும் என்று சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதனை சமைக்கும் போது, ஆனால் வாழைக்காயுடன் மிளகு சேரும் போது உங்கள் பயம் பறந்தேவிடும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Print
5 from 1 vote

வாழைக்காய் மிளகு மசாலா | valaikkai pepper masala recipe in tamil

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. மேலும் நம்முடைய அன்றாட உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளும் ஒன்றாகவும் உள்ளது. அந்த வகையில் வாழைக்காயை வறுவலாகவும், குழம்பாகவும் நம்முடைய உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். வாழைக்காயை வறுப்பதுதான் பலருடையாக முதல் தேர்வாக இருக்கும். ஆனால் என்றைக்காவது அதில் மிளகு‌ மசாலா வைக்க யோசத்ததுண்டா..? அதுவும் மட்டன் சுக்கா சுவையில் சமைத்து சாப்பிட தோன்றியதுண்டா..? மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: valakkai pepper masala
Yield: 4 People
Calories: 105kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 3 வாழைக்காய்
  • 3/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மல்லி

தாளிக்க :

  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 2 மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வாழைக்காயை நன்கு கழுவி தோல் சீவி, வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெறும் கடாயில் மிளகு, சீரகம், சோம்பை தனித்தனியாக வறுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
  • பின்னர் அதே கடாயில்‌ எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • அதன்பிறகு வாழைக்காய், மிளகு தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வாழைக்காய் சற்று வெந்ததும் மஞ்சள்‌ தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத் தூள், சோம்புத் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வாழைக்காய் ஒன்று சேர குழையாமல் வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும். வாழைக்காய் மேல் கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
  • அவ்வளவுதான் சுவையான, வித்தியாசமான வாழைக்காய் மிளகு மசாலா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 2.7g | Protein: 7.3g | Fat: 0.4g | Sodium: 9mg | Potassium: 358mg | Fiber: 3.1g | Vitamin A: 3IU | Vitamin C: 8.7mg | Calcium: 24mg | Iron: 0.26mg