அந்த காலத்துல எல்லாம் அரிசி சாப்பிடுவதை விட சிறு தானியங்களான கம்பு சோளம் திணை கேழ்வரகு கருப்பு கவுனி அப்படின்னு இதுல தான் உணவுகள் செஞ்சு சாப்பிடுவாங்க. இதுதான் உடம்புக்கு ஆரோக்கியமானது இந்த சிறுதானியங்கள் எல்லாம் சாப்பிட்டு தான் நம்ம முன்னோர்கள் இப்ப வரைக்குமே ரொம்ப ஆரோக்கியமா இருக்காங்க. அந்த வகையில் நம்ம இந்த சிறுதானியங்கள வச்சு நிறைய உணவுகள் செய்யலாம் இப்போ சிறுதானியமான தரகரிசி வச்சு ஒரு சூப்பரான பாயாசம் ரெசிபி தான் செய்யப் போறோம்.
வரகரிசிகா தேங்காய் பாலில் வேக வைத்து செய்ற இந்த வரகரிசி பாயாசம் சாப்பிடுவதற்கு ரொம்பவே தித்திப்பா சூப்பரான டேஸ்ட்ல இருக்கும். நம்ம எப்பவும் ஒரே மாதிரியா பால் பாயாசம் பருப்பு பாயாசம் செய்யாம ஒரு தடவை ரொம்பவே ஆரோக்கியமான இந்த வரகரிசி பாயாசம் செய்யலாம். குழந்தைகளுக்கு முக்கியமா போடுங்க அவங்களும் இத விரும்பி சாப்பிடுவாங்க.
இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு சின்ன வயசுல இருந்தே இந்த மாதிரியான சத்தான சிறு தானியங்களை சாப்பிட கொடுங்க. அப்பதான் அவங்களும் இதெல்லாம் சின்ன குழந்தைகளில் இருந்தே சாப்பிட்டு பழகுவாங்க. இந்த சூப்பர் டேஸ்டியான வரகரிசி பாயாசம் அவங்களோட ஃபேவரிட் ஆகவே மாறிடும் அந்த அளவுக்கு இதோட சுவை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சாமிக்கு வேற ஏதோ இருந்தது பூஜை செய்றவங்க இந்த வரகு அரிசி பாயசத்தை நெய்வேத்தியமா படைக்கலாம். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாங்கன்னா அவங்களுக்கும் கூட எப்பவும் ஒரே மாதிரியா ஸ்வீட் செஞ்சு கொடுக்காம இந்த வரகரிசி பாயாசத்தை செஞ்சு கொடுக்கலாம் சாப்பிட்டு கண்டிப்பா உங்கள பாராட்டிட்டு தான் போவாங்க. இப்ப வாங்க இந்த சத்தான ஆரோக்கியமான டேஸ்டான வரகு அரிசி பாயசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
வரகு அரிசி பாயாசம் | Varagu Arisi Payasam Recipe In Tamil
Equipment
- 1 அடி கனமான பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 1 கப் வரகு அரிசி
- 1 கப் சர்க்கரை
- 1 கப் தேங்காய் பால்
- 1/2 கப் பாசிப் பருப்பு
- 5 முந்திரி பருப்பு
- 5 திராட்சை
- 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- நெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் வரகு அரிசியை சேர்த்து அதனுடன் பாசிப்பருப்பை ஒரு கடாயில் சேர்த்து சிவக்க வறுத்து அதனையும் அரிசியுடன் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை முக்கால் பதத்திற்கு வேக வைத்துக் கொள்ளவும்
- பிறகு அதனுடன் தேங்காய் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் கொதிக்க விடவும்
- ஏலக்காய் தூள் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து இறக்கினால் சுவையான வரகு அரிசி பாயசம் தயார்
Nutrition
இதையும் படியுங்கள் : ஆரோக்கியம் நிறைந்த கேழ்வரகு மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!