வாஸ்து என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம் வீடு கட்டுவதில் வாஸ்து அப்படிங்கறது நிச்சயமாக பார்த்து கட்ட வேண்டும்.ஒவ்வொரு இடங்களையும் சரியான திசைகளில் இருக்க வேண்டிய அமைப்புகளில் வீடுகளில் அறைகள், சமையலறை, குளியலறை சரியாக கட்டப்படவில்லை என்றால் அது பின்னாடி பல பிரச்சனைகள் வருவதற்கு காரணமா இருக்கும். காரணம் அக்னி மூலையில் மட்டும்தான் சமையலறை வைக்கணும் அதே மாதிரி வாயுமுலையில் தான் குளியல் அறைகள் வைக்கணும். இது மாதிரி ஒருவருக்கும் ஒரு ஒரு இடங்கள் இருக்க அதே மாதிரி குபேர முலையில் மட்டும் தான் பணம் புழக்கப்படுகின்ற பொருட்களை வைக்கனும் அப்படின்னு சொல்லுவாங்க. ஒரு இடத்தில நம்ம ஒரு பொருளை வைக்கிறோம் அப்படின்னா அந்த பொருளினால பாதிப்புகள் எப்படி வேணாலும் ஏற்படலாம் அதை சரியான இடத்தில வைக்கிறோமோ அப்படிங்கறது பொறுத்து மட்டும்தான் இந்த வாஸ்து ஓட பலன் நமக்கு வந்து சேரும்.
வாஸ்து சரியாக இருந்தால் செல்வ செழிப்பு, மன நிம்மதி, உடல் ஆரோக்கியம், சந்தோஷம் குடும்பத்தில் ஒற்றுமை இப்படி பல நன்மை கிடைக்கும். அதே வாஸ்து சரியில்ல அப்படின்னா குடும்பத்தில் பிரச்சனை, நோய்கள்,செலவு , கடன் பிரச்சனை இந்த மாதிரி எந்த இடங்களில் எப்படி வீடு கட்டமைப்பு இருக்கு எந்த மூலையில் வைக்கணும் அப்படிங்கறது ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். அதிலும் குளியலறை தானே அப்படின்ற எண்ணத்துல நாம குளியலறையை எங்க வேணாலும் வைத்து கட்டிடக் கூடாது ஏன்னா முக்கியமான விஷயம் குளியலறைல தான் இருக்கு . ஒரு குளியலறையை எந்த இடத்தில கட்டணும் எந்த திசையில் கட்டணம் அப்படிங்கறது ரொம்ப ரொம்ப முக்கியம் . குளியலறை தவறான இடத்தில் இருந்தாலும் குடும்பத்தில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கு அந்த மாதிரி தவறான மூலையில் கட்டப்பட்ட குளியலறையை பயன்படுத்தாமல் வேறு குளியலறை தான் பயன்படுத்தியாகனும்.
வீட்டை கட்டும் போது கவனிக்க வேண்டியவை ?
ஒரு வீட்டில் வாஸ்து பகவானை திருப்திப்படுத்தி கட்டப்படும் வீட்டில் தான் மகாலட்சுமி அதிகமாக வாசம் செய்வாள். அப்படி இருக்கையில் நாம் வீடு கட்டுவதற்கு முன்பு வாஸ்து சாஸ்திரங்களை சரியாக பார்த்து பஞ்சபூதங்களை திருப்திப்படுத்தி அவர்களுக்கு ஏற்றது போல் ஒரு ஒரு அறையையும் வடிவமைக்க வேண்டும். ஒரு வீட்டை கட்டும்பொழுது எட்டு திசைகள், காற்று, நீர், நெருப்பு, பூமி, வானம் ஆகியவற்றை திருப்தி படுத்தி தான் கட்ட வேண்டும் அப்படி தெரிவு செய்து கட்டினால் மட்டுமே வாஸ்து பகவான் திருப்தி அடைந்து அங்கு மகாலட்சுமி நிறைந்திருந்து மனநிறைவும் நேர்மறை எண்ணங்களும் நிறைந்து இருக்கும்.
குளியலறை எந்த திசையில் கட்டினால் என்ன பலன்?
வீட்டில் சமையல் அறையும் பூஜையறையும் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் குளியலறையும் கழிவறையும். எந்த இடத்தில் கட்டி இருக்கிறோம் என்பது அதை பொருத்துதான் வீட்டில் நடக்கும் நன்மைகள் தீமைகள் அமைகின்றது. சமையலறை இருக்கக்கூடிய தென்கிழக்கு பகுதியில் குளியலறையை கட்டினால் இது ஆரோக்கிய குறைபாடை கொடுக்கும். மருத்துவச் செலவை அதிகரிக்கும். தென்கிழக்கு எனப்படும் அக்னி மூலையில் குளியலறை கட்டினால் தண்ணீர் செலவாகுவது போல பண செலவு பணவிரயம் ஆகும் மீளவே முடியாத கடன் சுமை வந்து சேரும்.
கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் குளியலறையினால் திருப்திகனமான குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக அமையும் . பண வரவும் அதிகரிக்கும். ஆகையால் கிழக்கு பகுதியில் கட்டுவது நல்ல பலன்களை தரும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்கலாம் என்ற மன உறுதியையும் கொடுக்கும்.
தெற்கு திசையில் கட்டினாலும் நல்ல பலன்களை கொடுக்கும். குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகள் கலைத்துறையில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். பெண்களுக்கு பிடித்தமான குடும்ப வாழ்க்கை அமைவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு நல்ல சமூக அந்தஸ்து கிடைக்கும்.
மேற்கு மையத்தில் அமைக்கும் குளியலறையால் பெண்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். இருந்தாலும் இது ஆணின் ஆதிக்கம் உள்ள திசையாக ஆண்களுக்கு நற்பலன்களை கொடுக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். நவீன பொருட்கள் அதிகமாக சேரும். சொந்த தொழில் அந்தஸ்து போன்றவைகள் கிடைக்கும். மேற்கு என்பது வருண ஆதிக்கம் உடைய திசை என்பதால் மேற்கும் வடமேற்கும் குளியலறை கட்டுவதற்கு ஏதுவான திசைகளாக இருக்கிறது.
குளியல் மற்றும் கழிவறை கட்டுவதற்கு 90 சதவீதம் ஏற்ற இடமாக வடமேற்கு திசை அமைகிறது. இதனை வாஸ்துவில் வாயு மூலை என்று அழைக்கிறார்கள். ஆகையால் இந்த இடத்தில் குளியலறை மற்றும் கழிவறை கட்டுவதால் திருப்திகரமான இல்லற வாழ்க்கை, குடும்பத்தில் நிம்மதி பணவரவு அதிகரித்தல் போன்றவை இருக்கும். நல்லவர்களின் நட்புகள் போன்றவை கிடைக்கும்.
எந்த ஒரு வீட்டில் குளியலறை யோடு சேர்த்து சமையலறை கட்டப்பட்டிருக்கிறதோ அந்த வீட்டில் நகைகள் பணங்கள் விற்பனை செய்ய வாய்ப்பு உண்டு . அதிக செலவுகள் வரும் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் போன்றவற்றை விற்கும் நிலை ஏற்படும். ஒரு பொருட்களை விற்பதற்கு முன்பு பல சிக்கல்கள் வந்த பின்பே விற்பனை செய்ய இயலும். இது போன்ற அமைந்துள்ள இடங்களில் பெண்களுக்கான உடல் பாதைகள் அதிகம் ஏற்படும்ஶ்ரீ ஆகையால் வீடு கட்டுவதற்கு முன்பு வாடகை வீடுக்கு செல்வதற்கு முன்பு குளியலறை எந்த இடத்தில் எந்த மூலையில் இருக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு பிறகு முடிவு செய்யுங்கள். வீடு கட்டும் பொழுது சரியான முறையில் வாஸ்து செய்யப்பட்டிருக்கிறதா என்பதை தெளிவுபடுத்திக் கொள்வது மிகவும் நல்லது.