பாரம்பரிய சுவையில் ஸ்ரீரங்கம் வத்த குழம்பை ஒருமுறை இப்படி வைத்து பாருங்கள்! வத்தகுழம்புன்னா அது இதுதான்!!

- Advertisement -

வத்த குழம்பு என்றாலெ  அனைவரது வாயிலும் நீர் ஊற்றும். அதிலும் ஸ்ரீரங்கம் வத்த குழம்பு என்றால் கேட்கவே வேண்டாம். வத்தக்குழம்பு அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு குழம்பு வகை. தினசரி வத்த குழம்பு சமைக்கவில்லை என்றாலும் அவ்வப்போது நாம் இதை சுவைக்க தவறுவதில்லை. வத்த குழம்பு பல வகைகளில் செய்யலாம். இப்படி ஒரு முறை செய்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த வகை வத்தல் குழம்பை இந்த பதிவில் நாம் காண்போம்.

-விளம்பரம்-

நிறைய பேருக்கு வத்த குழம்பு பிடிக்கும். ஆனால் அதை பக்குவமாக பாரம்பரியமான முறையில் எப்படி செய்வது என்பது தெரியாது. அசத்தலான சுவையில் காரசாரமான ஸ்ரீரங்கம் வத்த குழம்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். வத்தல் குழம்பில் சேர்க்கப்படும் சுண்டக்காய் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும். இந்த வத்த குழம்பை வைத்து விட்டு, ஒரு குண்டான் சோறு வைத்து விட்டு, இரண்டு வத்தல் வைத்துவிட்டால் போதும். சாதமும் குழம்பும் எப்படி தொண்டைக்குள் போனது என்பதே நமக்கு தெரியாது.

- Advertisement -
Print
4.67 from 3 votes

வத்த குழம்பு | Vatha Kulambu Recipe In Tamil

நிறைய பேருக்கு வத்த குழம்பு பிடிக்கும். ஆனால் அதை பக்குவமாக பாரம்பரியமான முறையில் எப்படி செய்வதுஎன்பது தெரியாது. அசத்தலான சுவையில் காரசாரமான ஸ்ரீரங்கம் வத்த குழம்பு குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். வத்தல் குழம்பில் சேர்க்கப்படும்சுண்டக்காய் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும். இந்த வத்த குழம்பை வைத்து விட்டு,ஒரு குண்டான் சோறு வைத்து விட்டு, இரண்டு வத்தல் வைத்துவிட்டால் போதும். சாதமும் குழம்பும்எப்படி தொண்டைக்குள் போனது என்பதே நமக்கு தெரியாது.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Srirangam Vatha Kulambu
Yield: 4
Calories: 69kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் சுண்டக்காய்
  • 2 டீஸ்பூன் வெந்தயம்
  • 2 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 4 வரமிளகாய்
  • புளி எலுமிச்சை அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 50 கிராம் சின்ன வெங்காயம்
  • 1 டேபிள்ஸ்பூன் வெல்லம்
  • 1 டேபிள்ஸ்பூன் அரிசி
  • கறிவேப்பிலை சிறிது
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

நல்லெண்ணெய்

  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு

செய்முறை

  • புளியை கரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  • பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து, அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க பின் அதில் அரைத்து வைத்துள்ள விடவும்.பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
  • குழம்புதிக்கான பதம் வந்தவுடன் அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், ஸ்ரீரங்கம் வத்த குழம்பு ரெடி!!.
     

Nutrition

Serving: 500g | Calories: 69kcal | Carbohydrates: 36g | Protein: 9.87g | Saturated Fat: 1.4g | Sodium: 38mg | Potassium: 387mg | Sugar: 3.6g