ருசியான சுண்டைக்காய் வத்தல் குழம்பு அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

- Advertisement -

என்னதான் நம்ப சாம்பார், ரசம், கறி குழம்பு , மீன் குழம்பு, கோழி குழம்பு சாப்பிட்டாலும் நம்ம மனசுக்கு பிடிச்ச மாதிரியான ஒரு குழம்பு எல்லா உணவுகளுடைய சேர்த்து ருசித்து சாப்பிட மாதிரியான ஒரு குழம்பு அப்படின்னு பார்த்தா அது வத்தல் குழம்புதான். இந்த வத்தகுழம்பு மேல எல்லாருக்குமே அப்படி ஒரு க்ரேஸ் கண்டிப்பா இருக்கும். அதுவும் இந்த வடை பாயசங்களோட சாப்பாடு சாப்பிடும் போது வத்தல் குழம்பு கண்டிப்பா வச்சு தான் சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

அந்த மாதிரி குழம்பு வைக்க காய்கறிகள் எதுவுமே இல்லையா? ரொம்பவே கவலையா இருக்கா? எப்படிடா இந்த குழம்பு வைக்கிறது எல்லாருக்கும் பத்தாதே வீட்டில் காய்கறியே இல்லையே அப்படின்னு கவலைப்பட்டீர்களா? உங்களுக்கு தான் இந்த சுண்டைக்காய் வத்தல் குழம்பு. இந்த சுண்டைக்காய் வத்தல் குழம்பில் பூண்டு வெங்காய உறிச்சி போட்டு ரொம்ப ரொம்ப சிம்பிள்ங்க நம்ம வீட்ல செய்யற அதே வத்தல் குழம்பு வகையில் தான் இதுவும் வரும். காய்கறிகளுக்கு பதிலா சுண்டைக்காய் வத்தல், பூண்டும் வெங்காயத்தையும் சேர்த்து வைக்க போறோம்.

- Advertisement -

இந்த சுவையான வத்தல் குழம்பு ருசிக்காக மட்டும் கிடையாது ரொம்பவே ஆரோக்கியமானதும் கூட.. பூண்டுல உடலுக்கு தேவையான பல நன்மைகள் இருக்கு பூண்டை உணவுல தினமும் சேர்த்துகிறது இதய நோய் பிரச்சனை குறைகிறது. அது மட்டும் இல்லாமல் சுண்டைக்காயிலும் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கு. இந்த சுவையான வத்தல் குழம்பு எப்படி ருசியா வைக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
No ratings yet

சுண்டைக்காய் வத்தல் குழம்பு | Sundaikai vanthal kulambu recipe in tamil

என்னதான் நம்ப சாம்பார், ரசம், கறி குழம்பு , மீன் குழம்பு, கோழி குழம்பு சாப்பிட்டாலும் நம்ம மனசுக்கு பிடிச்ச மாதிரியான ஒரு குழம்பு எல்லா உணவுகளுடைய சேர்த்து ருசித்து சாப்பிட மாதிரியான ஒரு குழம்பு அப்படின்னு பார்த்தா அது வத்தல் குழம்புதான். இந்த வத்தகுழம்பு மேல எல்லாருக்குமே அப்படி ஒரு க்ரேஸ் கண்டிப்பா இருக்கும். அதுவும் இந்த வடை பாயசங்களோட சாப்பாடு சாப்பிடும் போது வத்தல் குழம்பு கண்டிப்பா வச்சு தான் சாப்பிடுவாங்க. அந்த மாதிரி குழம்பு வைக்க காய்கறிகள் எதுவுமே இல்லையா? ரொம்பவே கவலையா இருக்கா? எப்படிடா இந்த குழம்பு வைக்கிறது எல்லாருக்கும் பத்தாதே வீட்டில் காய்கறியே இல்லையே அப்படின்னு கவலைப்பட்டீர்களா? உங்களுக்கு தான் இந்த சுண்டைக்காய் வத்தல் குழம்பு.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Kulambu
Cuisine: tamilnadu
Keyword: andhra vathakulambu, Appala Vatthakulambu, sri rangam vatha kulambu
Yield: 8 People
Calories: 250kcal
Cost: 50

Equipment

  • 1 வானெலி
  • 1 கரண்டி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • எலுமிச்சை அளவு புளி
  • 12 கப் சுண்டைக்காய் வத்தல்
  • 20 சின்ன வெங்காயம்
  • 20 பூண்டு
  • 2 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • 1 ஸ்பூன் மிளகு சீரக பொடி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் புளியை கரைத்து வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளவும். பின் பூண்டு வெங்காயம் இவைகளை முழுதாக உரித்து வைத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி அதில் வெந்தயம், சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • பின்பு சுண்டைக்காய் வத்தலை எண்ணெயில் சேர்த்து பொரித்து கொள்ளவும்.
  • இப்பொழுது குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து கொள்ளவும் பிறகு தண்ணீர் சேர்த்து ஒரு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
  • கொதித்த உடன் கரைத்து வைத்துள்ள புளியை அதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  • கொதி வந்ததும் அதில் மிளகு சீரக பொடி சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும்.
  • இறுதியாக சிறிதளவு நல்லெண்ணெயும் சேர்த்து இறக்கினால் வத்தல் குழம்பு கம கமனு தயார்

Nutrition

Calories: 250kcal | Carbohydrates: 15g | Protein: 19g | Fat: 20g