வித்தியாசமான ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால் சுவையான இந்த வெஜ் பிரட் டோஸ்ட் ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்யலாமா! காலை உணவினை சத்தான ஆகாரமாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் நாம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். அப்படிப்பட்ட சத்தான காலை உணவினை தான் இன்று நாம் காண உள்ளோம். காலை உணவு மிகவும் இன்றியமையாதது. ஒருவரின் உடலுக்கு தேவையான சக்தியானது, காலை உணவைப் பொறுத்து தான் உள்ளது.

-விளம்பரம்-

எனவே எந்த நேரம் சாப்பிடாமல் இருந்தாலும், காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. பெரும்பாலானோர், காலையில் எழுந்து சமைத்து சாப்பிட சோம்பேறித்தனப்பட்டோ அல்லது அலுவலகத்திற்கு நேரம் ஆகிவிட்டது என்று சரியாக சாப்பிடாமல் செல்கின்றனர். அத்தகையவர்களுக்கு எளிதான முறையிலும், ஆரோக்கியமான வகையிலும் பிரட்டை வைத்து ஈஸியான முறையில் ஒரு ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

- Advertisement -

பொதுவாக பிரட்டை சாதாரணமாக டோஸ்ட் செய்து சாப்பிடுவோம். ஆனால் இதில் அந்த பிரட்டுடன் காய்கறிகள் சேர்த்து எப்படி ஒரு வெஜ் பிரட் டோஸ்ட் செய்வதென்று பார்க்கலாம். இந்த வெஜ் பிரட் டோஸ்டானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாலை நேர சிற்றுண்டியாக டீ, காபியுடன் சாப்பிடலாம். காலை வேளையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு மிகவும் எளிமையான காலை உணவு செய்ய வேண்டுமானால், வெஜ் பிரட் டோஸ்ட் செய்து கொடுங்கள். இது மிகவும் ஈஸியான காலை உணவாகும். மேலும் இதில் காய்கறிகள் சேர்த்திருப்பதால், ஆரோக்கியமானதும் கூட.

Print
3.34 from 3 votes

வெஜ் பிரட் டோஸ்ட் | Veg Bread Toast Recipe In Tamil

தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்யலாமா! காலை உணவினை சத்தான ஆகாரமாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் நாம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். அப்படிப்பட்ட சத்தான காலை உணவினை தான் இன்று நாம் காண உள்ளோம். காலை உணவு மிகவும் இன்றியமையாதது. ஒருவரின் உடலுக்கு தேவையான சக்தியானது, காலை உணவைப் பொறுத்து தான் உள்ளது. எனவே எந்த நேரம் சாப்பிடாமல் இருந்தாலும், காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. பொதுவாக பிரட்டை சாதாரணமாக டோஸ்ட் செய்து சாப்பிடுவோம். ஆனால் இதில் அந்த பிரட்டுடன் காய்கறிகள் சேர்த்து எப்படி ஒரு வெஜ் பிரட் டோஸ்ட் செய்வதென்று பார்க்கலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast
Cuisine: Indian
Keyword: Veg Bread Toast
Yield: 2 People
Calories: 120kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 10 பிரட் துண்டுகள்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 கேரட்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 குடைமிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • வெண்ணெய் தேவையான அளவு
  • 10 பீன்ஸ்
  • 2 வேகவைத்த உருளைக்கிழங்கு

செய்முறை

  • முதலில் வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு, பீன்ஸ் ஆகியவற்றை கழுவி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் கேரட், பீன்ஸ், குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் உப்பு சேர்த்து கலந்து, வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து அதிலேயே மசித்து விடவும். பின் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
  • பின் ஒரு‌ பிரெட் துண்டை எடுத்து அதில் காய்கறி கலவையை வைத்து அதன்மேல் மற்றொரு பிரெட்டில் மூடி விடவும்.
  • ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு சூடானதும் பிரெட்டை சேர்த்து இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜ் பிரட் டோஸ்ட் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 120kcal | Carbohydrates: 6.1g | Protein: 5g | Fat: 3g | Sodium: 90mg | Potassium: 77mg | Fiber: 3g | Vitamin A: 15IU | Vitamin C: 130mg | Calcium: 42mg | Iron: 3mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பிரெட் சில்லி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!