சுவையான வெஜ் குருமா செய்வது எப்படி ?

- Advertisement -

பொதுவாக நம் வீடுகளில் இட்லி தோசை சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு சாம்பார் மற்றும் எதாவது ஓரு சட்னி வைத்து தான் சாப்பிட்டு வருகிறோம். மேலும் புரோட்டா சாப்பிட வேண்டுமானாலும் சால்னா வைக்க வேண்டும். இதற்காகவே நாம் வெளியே சென்று தான் சாப்பிட்டு வருகிறோம் இதற்கு இன்று ஒரு முடிவு கட்டிவிடலாம் ஆம் இன்று சுவையான வெஜ் குருமா செய்யப் போகிறோம் வீடுகளில் விரோதங்கள் மேற்கொள்ளும் பொழுது புரோட்டாவுக்கு அசைவ சால்னா சாப்பிடாமல் இருப்பார்கள் ஆனால் அதற்கு பதிலாக அதைவிட சுவையான வெஜ் குருமா எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை என அனைத்தையும் இன்றைய சமையல் தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-
Print
5 from 1 vote

Prep Time15 minutes
Active Time35 minutes
Course: Breakfast, dinner, Main Course
Cuisine: Indian, TAMIL
Keyword: VEG KURUMA, வெஜ் குருமா
Yield: 4 4

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

தேவையான காய்கறிகள்.

  • 2  வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2 தக்காளி  பொடியாக நறுக்கியது
  • 1 கேரட்                             நறுக்கியது
  • 2 உருளைக்கிழங்கு    நறுக்கியது
  • ¾ கப் பச்சைப் பட்டாணி
  • 8 to 10 பீன்ஸ்                             சிறியதாக நறுக்கியது .
  • ¾ கப் காலிப்ளவர்    சிறியதாக நறுக்கியது .

மசாலா அரைப்பதற்கு தேவையான பொருட்கள் :

  • ¼ கப் தேங்காய் துருவியது அல்லது நறுக்கியது
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு   
  • 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 12 முந்திரி

குருமா செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • 1 பிரியாணிஇலை   
  • 2 ஏலக்காய்      
  • ½ டேபிள் ஸ்பூன் கிராம்பு 
  • 3 பட்டை 
  • 1 அண்ணாச்சி பூ   
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு  தேவையான அளவு.
  • 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா 
  • 1 to 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் தேவைக்கேற்ப
  • கொத்தமல்லித்தலை சிறிதளவு
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

செய்முறை

மசாலா அரைப்பது :

  •  ஒரு மிக்சியில்  தேங்காய் ,சோம்பு ,பொட்டுக்கடலை,முந்திரி ,சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசாலா பதத்திற்கு அரைக்கவும் .             
  • அதை தனியாக எடுத்து வைக்கவும் .  

குருமா செய்யும் முறை :

  • முதலில் கடாய் சூடானதும் எண்ணெய் ஊற்றி எண்ணெய்  சூடானதும்  அதில் பிரியாணி இலை ,ஏலக்காய் ,கிராம்பு, பட்டை ,அண்ணாச்சி பூ,  சேர்த்து வதக்கவும்.
  •  பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 முதல் 2 நிமிடம் வரை வதக்கவும். 
  • பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து அதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக தக்காளி மென்மையாகும்வரை  வதக்கவும்.
  • வதங்கிய பிறகு அதில்  மிளகாய்த்தூள், கரம்மசாலா,கொத்தமளித்தலை சேர்த்து குறைவான தீயில் 1 முதல் 3 நிமிடம் வரை வதக்கவும்
  • மசாலா வாசனை வந்தபிறகு அதில் முதலில் அரைத்துவைத்த மசாலாவை சேர்த்து நன்றாக கிளறவும்
  • கிளறிய பின்பு அதனுடன்  கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு,பச்சைபட்டாணி,காலிப்ளவர், சேர்த்து கிளறவும். அதில் 1 முதல் 5 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து,தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மிதமான தீயில் காய்கறிகள் வேகும் வரை விடவும்.
  • காக்காய்கறிகள் வெந்தவுடன் சிறிது எடுத்து சுவை பார்க்கவும் தேவைப்பட்டால் உப்பு  சேர்க்கவும். பின்பு கொத்தமளித்தலைகளை தூவி விடவும் 
  • இப்பொழுது சுவையான வெஜ் குருமா தயார் …..

Nutrition

Serving: 4PERSON | Carbohydrates: 4.5g | Fat: 2.9g | Vitamin A: 7.8IU | Vitamin C: 12.3mg

- Advertisement -

LEAVE A REPLY

Recipe Rating

Please enter your comment!
Please enter your name here