ருசியான வெஜ் ரோல் வீட்டிலயே ரெம்ப எளிமையாக ஒரு தரம் இப்படி செய்து பாருங்க! இனி அடிக்கடி இதை செய்ய ஆரம்பிச்சிடுவாங்க!

- Advertisement -

மாலை நேர சிற்றுண்டிக்கு ஏதாவது ஒன்னு சாப்பிடணும் அப்படின்னு தோணும்போது நம்ம பேக்கரிக்கு போய் வெஜ் ரோல், சிக்கன் ரோல் ஏதாவது ஒரு ரோல் வாங்கி சாப்பிடுவோம். அந்த மாதிரி எல்லாருக்கும் பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி இந்த ரோல்.  எல்லா உணவுகள் ஆரோக்கியமான உணவுகள் தான். அப்படி இருக்கும்போது நம்ம உடல்ல காய்கறிகள் அதிகமா சேர்த்துக்குறதுனால நமக்கு இன்னும் அதிக நன்மை கிடைக்கிறது. 

-விளம்பரம்-

நம்ம இப்போ காய்கறிகளில் வெஜிடபிள் ரோல் செய்து கொடுக்கப்போறோம். அதுவும் இது குழந்தைகளுக்காகவே செய்து தரப்போறம். குழந்தைகள் தான் எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் வேணும் அப்படினு கேட்டுகிட்டே இருப்பாங்க. அந்த மாதிரிP  குழந்தைகளுக்கு கொடுக்கும்போது வீட்டிலேயே செய்து காய்கறிகள் வைத்து செய்து கொடுக்கும் போது இன்னும் ரொம்பவே ஹெல்தியா இருக்கும்.

- Advertisement -

இந்த மாதிரி சுவையான சூப்பரான ஒரு வெஜ் ரோல் அவங்க கடைகளில் சாப்டா அதே டேஸ்ட்ல எப்படி கொடுக்கிறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த சுவையான வெஜ் ரோல்க்கு நமக்கு என்ன மாதிரியான வெஜிடபிள்ஸ் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று தோணுதோ அது எல்லாமே சேர்த்துக்கலாம் . குழந்தைகள் எந்தெந்த காய்கறிகளை சாப்பிட விரும்ப மாட்டாங்களோ அந்த காய்கறிகளை கூட இந்த மாதிரி வித்தியாசமான உணவுகளை சேர்த்து செய்து கொடுக்கும் பொழுது அவர்கள் சாப்பிடுவாங்க.

குழந்தைகளோட உடலோடு ஆரோக்கியத்திற்காக என்னவெல்லாம் செய்யலாம் அந்த மாதிரி எல்லாம் உணவுகள் செய்து கொடுக்கும் பொழுது அவங்க நிச்சயமாக விரும்பி சாப்பிடுவாங்க. உடலுக்கு தேவையான சத்து கிடைக்கும். இந்த சுவையான வெஜ் ரோல் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

Print
5 from 1 vote

வெஜ் ரோல் | Veg Roll Recipe In Tamil

நம்ம இப்போகாய்கறிகளில் வெஜிடபிள் ரோல் செய்து கொடுக்கப்போறோம். அதுவும் இது குழந்தைகளுக்காகவேசெய்து தரப்போறம். குழந்தைகள் தான் எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் வேணும் அப்படினு கேட்டுகிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி  குழந்தைகளுக்கு கொடுக்கும்போது வீட்டிலேயேசெய்து காய்கறிகள் வைத்து செய்து கொடுக்கும் போது இன்னும் ரொம்பவே ஹெல்தியா இருக்கும். குழந்தைகளோட உடலோடு ஆரோக்கியத்திற்காக என்னவெல்லாம்செய்யலாம் அந்த மாதிரி எல்லாம் உணவுகள் செய்து கொடுக்கும் பொழுது அவங்க நிச்சயமாக விரும்பிசாப்பிடுவாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: veg roll
Yield: 4
Calories: 84kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கேரட்
  • 1 கப் பச்சை பட்டாணி
  • 1 கப் உருளைக்கிழங்கு
  • 1 கப் குடைமிளகாய்
  • 1 வெங்காயம்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லித்தூள்
  • 1 ஸ்பூன் சாட் மசாலா
  • 1 ஸ்பூன் மைதா மாவு
  • கொத்தமல்லி  சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை சேர்த்து அதன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து சப்பாத்திமாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும் மாவு காயாமல் இருக்க சிறிதளவு எண்ணெயை அதன் மேல் தடவி ஊற வைக்க வேண்டும்.
  • எடுத்து வைத்துள்ள காய்கறிகளை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்துநன்றாக பொன்னிறமாக வதக்கவும்.
  • பின் அதில்  கேரட் , உருளைக்கிழங்கு, குடைமிளகாய், ஊற வைத்தபட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சாட் மசாலாமற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து அதனை வேக வைக்க வேண்டும்.
  • காய்கறிகள் நன்றாக வெந்த பிறகு அதன் மேல் கொத்தமல்லி இலைகளை போட்டு இறக்க வேண்டும்.
  •  
    பிசைந்து வைத்துள்ள மைதா மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து தேய்த்து தோசை கல்லில்போட்டு சப்பாத்தி போன்று சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்..
     
  •  
    பின் தயார் செய்து வைத்துள்ள காய்கறிகளை அந்த சப்பாத்தி போட்டு ரோல் மாதிரியாக உருட்டி வைத்தால் சுவையானவெஜ் ரோல் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 84kcal | Saturated Fat: 5.8g | Monounsaturated Fat: 5.8g | Cholesterol: 8mg | Vitamin A: 5.37IU | Calcium: 2.6mg | Iron: 21mg