தர்ப்பூசணிக்காய் கூட்டு இப்படி செய்து பாருங்க! இந்த ரகசியம் தெரிஞ்ச வீட்ல எல்லாரும் பாராட்டுவாங்க!

- Advertisement -

ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்துள்ள நீர் காயாக இருக்கும் இந்த தர்ப்பூசணிக்காயை மெனக்கெடாமல் சட்டென 10 நிமிஷத்துல அட்டகாசமான ஹோட்டல் சுவையில் தர்ப்பூசணிக்காய் கூட்டு செய்துபாருங்க, புளிக்குழம்பு போன்றவற்றுக்கு அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும் .தர்ப்பூசணி பழத்தை சாப்பிட்ட பின் தூக்கி

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : ருசியான தர்பூசணி விதை சோறு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

- Advertisement -

வீசப்படும் வெள்ளை துண்டுகளை வீணாக்காமல் கூட்டு செய்து குழந்தைகளுக்குப் பிடித்த விதத்தில் கலர்ஃபுல்லாக கொடுத்தால் சத்தமில்லாமல் சாப்பிடுவார்கள். சத்து நிறைந்த சுவையான கூட்டை சந்தோஷத்தோடும் பரிமாறுங்கள்… வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
No ratings yet

தர்ப்பூசணிக்காய் கூட்டு | Watermelon rind curry recipe in Tamil

ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்துள்ள நீர் காயாக இருக்கும் இந்த தர்ப்பூசணிக்காயை மெனக்கெடாமல் சட்டென 5 நிமிஷத்துல அட்டகாசமான ஹோட்டல் சுவையில் தர்ப்பூசணிக்காய் கூட்டு செய்துபாருங்க, புளிக்குழம்பு போன்றவற்றுக்கு அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும் .தர்ப்பூசணி பழத்தை சாப்பிட்ட பின் தூக்கி வீசப்படும் வெள்ளை துண்டுகளை வீணாக்காமல் கூட்டு செய்து குழந்தைகளுக்குப் பிடித்த விதத்தில் கலர்ஃபுல்லாக கொடுத்தால் சத்தமில்லாமல் சாப்பிடுவார்கள்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time15 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Watermelone, தர்பூசணிக்காய்
Yield: 4 people
Calories: 103kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் தர்ப்பூசணி துண்டுகள் வெள்ளை பாகம்
  • 1/4 கப் கறிவேப்பிலை
  • 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 2 மிளகாய் வற்றல்
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள்
  • 4 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் விருப்பப்பட்டால்
  • 1/4 கப் கேரட் துண்டு, பட்டாணி (பச்சை)

செய்முறை

  • பயத்தம்பருப்பையும், கடலைப் பருப்பையும் சுத்தம் செய்து 1/2 கப் தண்ணீர் விட்டு, தர்ப்பூசணி துண்டுகளை அதில் போட்டு குக்கரில் வேகவிட்டு எடுக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், மிளகாய்வற்றல் இவற்றை வறுத்து, அரைத்து எடுக்கவும்.
  • அதே எண்ணெய் கடாயில் கடுகை வெடிக்கவிட்டு, பெருங்காயம் சேர்த்து, பச்சை பட்டாணி, கேரட் துண்டுகள் (மெலிதாக நறுக்கியது) சேர்த்து 1 நிமிடம் வதக்கியதும், வேக வைத்துள்ள தர்ப்பூசணி, பருப்பு கலவையைச் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
  • கொதித்து வரும்போது அரைத்து வைத்துள்ள கலவையைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும். கறிவேப்பிலை கிள்ளிப் போடவும். தேங்காய் துருவல் சேர்த்தால் கூடுதல் ஏசியைக் கொடுக்கும்.
  • இது சத்தானது. புதுமையானது. வித்தியாசமானது. சுவையானது. வீணாக்காமல் பயன்படுத்திய திருப்தி கிடைக்கும்.  சுலையானதர்ப்பூசணிக்காய் கூட்டுதயார்.

Nutrition

Calories: 103kcal | Carbohydrates: 11g | Protein: 3g | Fat: 4g | Saturated Fat: 3g | Sodium: 1mg | Fiber: 3g | Iron: 1mg