Home காலை உணவு ருசியான வெயிட் லாஸ் அடை இப்படி ஒரு முறை செய்து பாருங்க! உடல் எடையை குறைக்க...

ருசியான வெயிட் லாஸ் அடை இப்படி ஒரு முறை செய்து பாருங்க! உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும் ரெசிபி!

இப்போ இருக்கிற எல்லார்கிட்டயும் பெரிய பிரச்சினையா இருக்கிறது வெயிட் அப்படிங்கிற ஒரு விஷயம் தான். உலகத்திலேயே பெரிய நோயாவும் பெரிய பிரச்சனை நிறைய ஸ்ட்ரெஸ் கொடுக்கக்கூடிய ஒரு விஷயமாக மாறிக்கொண்டிருக்கிறது எடை கூடுதல் அப்படிங்கற ஒரு விஷயம் அப்படின்னு சொல்றாங்க. அப்படி இந்த வெயிட்டுனால நமக்கு என்ன எல்லாம் பிரச்சினை வரும். எடை கூடுவதால நிறைய உடலில் பிரச்சனைகள் வரும்னு சொல்லிட்டு இருக்காங்க. எல்லாம் தெரிந்தும் நம்மளால சாப்பிடறத மட்டும் கம்மி பண்ணவே முடியல. எப்பையுமே டேஸ்ட்டா சாப்பிடணும் தோனிக்கிட்டே இருக்கு.

-விளம்பரம்-

என்னையா பண்றது எப்படிப்பா எடை குறைக்கிறது அப்படின்னு கவலைப்பட்டீர்களா? இந்த அடைய செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட்டாவும் இருக்கும். எடை குறைக்க ரொம்ப ஹெல்ப் பண்ணும். எடை கூடுறதுக்கு முக்கியமான ஒரு விஷயம் அப்படின்னு பாத்தீங்கன்னா அதிகமா பசிக்கிறது. நிறைய சாப்பிடுவது நமக்கு எப்பவுமே ஃபுல்லா சாப்பிட்டு விட்டோம் இதுக்கப்புறம் ஒரு சாப்பாடு தேவை இல்லை அப்படிங்கிற ஒரு திருப்தி வரதே கிடையாது. அப்படி ஒரு திருப்தி வந்துருச்சுன்னா நம்ம எக்ஸ்ட்ரா பசிக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்கோ இல்ல சாப்பிடவோமாட்டோம்.டயட் இருக்கிறோம் அப்படிங்கற பேர்ல நம்ம கம்மி கம்மியா சாப்பிடும் போது நமக்கு வந்து திரும்பத் திரும்ப ரொம்ப பசிக்கிற மாதிரியான ஒரு உணர்வு வந்துகிட்டு இருக்கும்.

அதுக்கு என்ன பண்ணனும் அப்படின்னா நம்மளுக்கு பசி ஒரு உடவு சாப்பிடனும் அப்படின்னா அந்த பொருள் சாப்பிட்டதுக்கு அப்புறம் வயிறு கொஞ்சம் பசிக்காம இருக்கணும் அந்த அளவுக்கு சாப்பிடணும். இந்த அடை காலைல ஒன்னு சாப்பிட்டாலே போதும் வயிறு ஃபுல்லாக ஃபீல் வந்துடும். உங்களுக்கு அப்புறம் அடிக்கடி பசிக்கவே பசிக்காது அதுக்கப்புறம் நீங்க லஞ்சுக்கு தான் சாப்பிடணும். காய்கறி கம்பு இதெல்லாம் சேர்த்து செய்றதால ரொம்ப ஆரோக்கியமாகவும் இருக்கும் வெயிட் லாசுக்கு ரொம்பவே உதவியும் பண்ணும். அப்படி ஒரு சூப்பரான அடை தான் இந்த வெயிட் லாஸ் அடை இந்த வெயிட் லாஸ் அடைய எப்படி செய்யறது என்ன அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
3 from 2 votes

வெயிட் லாஸ் அடை | Weight Loss Adai in tamil

என்னையா பண்றது எப்படிப்பா எடை குறைக்கிறது அப்படின்னு கவலைப்பட்டீர்களா? இந்த அடைய செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட்டாவும் இருக்கும். எடை குறைக்க ரொம்ப ஹெல்ப் பண்ணும். எடை கூடுறதுக்கு முக்கியமான ஒரு விஷயம் அப்படின்னு பாத்தீங்கன்னா அதிகமா பசிக்கிறது. நிறைய சாப்பிடுவது நமக்கு எப்பவுமே ஃபுல்லா சாப்பிட்டு விட்டோம் இதுக்கப்புறம் ஒரு சாப்பாடு தேவை இல்லை அப்படிங்கிற ஒரு திருப்தி வரதே கிடையாது. அப்படி ஒரு திருப்தி வந்துருச்சுன்னா நம்ம எக்ஸ்ட்ரா பசிக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்கோ இல்ல சாப்பிடவோமாட்டோம்.டயட் இருக்கிறோம் அப்படிங்கற பேர்ல நம்ம கம்மி கம்மியா சாப்பிடும் போது நமக்கு வந்து திரும்பத் திரும்ப ரொம்ப பசிக்கிற மாதிரியான ஒரு உணர்வு வந்துகிட்டு இருக்கும்.
Prep Time3 hours 10 minutes
Active Time10 minutes
Total Time3 hours 20 minutes
Course: dosai, Roast, vadai
Cuisine: tamilnadu
Keyword: Adai, adai dosai, Beans Wheat Adai Dosa
Yield: 6 people
Calories: 114kcal
Cost: 50

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 கப் கம்பு மாவு
  • 1 கப் ராகி மாவு
  • 1 கேரட்
  • 1 உருளைகிழங்கு
  • 1 வெங்காயம்
  • 1 ஸ்பூன் கடலைமாவு
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகுதூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • சிறிதளவு கொத்தமல்லி

  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு                             

செய்முறை

  • முதலில் கேரட், உருளைக்கிழங்கு இரண்டையும் கேரட் துருவுவதில் வைத்து துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு துருவல் ,கேரட் துருவல், வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • பிறகு அதில் கம்பு மாவு, ராகி மாவு, கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • இப்போது அதனுடன் மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • மாவை நன்றாக கலந்து விட்ட பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அடை செய்யும் அளவிற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து லேசாக எண்ணெய் தடவி அடை மாவு எடுத்து அழகாக வட்ட வடிவ அடைகளாக சுட்டு ஒருபுறம் என்பது மறுபுறம் திருப்பி போட்டி எடுத்து சூடாக காரச்சட்னி அல்லது தேங்காய் சட்னி உடன் பரிமாறினால் சுவையான வெயிட் லாஸ் அடை தயார்.

Nutrition

Calories: 114kcal | Carbohydrates: 87g | Protein: 15g | Fat: 15g