இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. சைவ பிரியர்களுக்கு பிடித்த இனிப்புகளில் ஒன்று பேரிச்சம் பழம் லட்டு. இது புரத தேவையில் மூன்றில் ஒரு பகுதியை பூர்த்தி செய்கிறது. இதில் பல்வேறு உணவுகளை செய்து ருசிக்கலாம். இன்று நாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கோதுமை பேரிச்சம் பழ லட்டு சுவையாக செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பேரீச்சம்பழத்தில் நீரில் கரையும் மற்றும் கரையாத இருவகை நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை மலச்சிக்கலை எளிதாக போக்கி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் வெளியேற்றும். இந்த லட்டு ஒரு சிறந்த மருந்து மற்றும் இனிப்பான உணவு என்பதால் அனைவருக்கும் உண்பதற்கு பிடித்தமானதாக இருக்கும்.
இந்த கோதுமை பேரிச்சம் பழ லட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் சுவையாக இருக்கும். வீட்டில் சொந்தக்காரர்கள், அல்லது விசேஷம் போன்று வைத்திருக்கும் போது என்ன ஸ்வீட் செய்யலாம் என்று குழப்பமாக உள்ளதா? அப்போ சட்டுனு கோதுமை பேரிச்சம் பழம் லட்டு செய்து கொடுத்து பாருங்க எல்லா லட்டும் காலியாகிவிடும். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. செய்து டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் மூன்றிலிருந்து நான்கு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். தினமும் ஒன்று அல்லது இரண்டு லட்டு என்று குழந்தைகளுக்கு கொடுங்கள். விருப்பமாக சாப்பிடுவார்கள். அதேசமயம் ஆரோக்கியத்திற்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று ஒரு துளியும் பயப்படவேண்டாம்.
கோதுமை பேரிச்சம் பழ லட்டு | Wheat And Dates Laddu Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கப் கோதுமை மாவு
- 1/2 கப் பேரிச்சம் பழம்
- 1/4 கப் பாதாம், முந்திரி, பிஸ்தா
- 1/2 கப் வெல்லம்
- 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 1/2 கப் நெய்
செய்முறை
- முதலில் பேரிச்சம் பழம், முந்திரி, பாதாம், பிஸ்தா, வெல்லம் எல்லாவற்றையும் தனித்தனியாக மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று விட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து அதில் கோதுமை மாவு சேர்த்து மிதமான சூட்டில் வாசம் வரும் வரை வறுக்கவும்.
- பின் அதனுடன் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள பேரிச்சம் பழம், வெல்லம், நட்ஸ், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பின் கொஞ்சம் மாவு எடுத்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். இந்த கோதுமை பேரிச்சம் பழ லட்டுகளை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.
- அவ்வளவுதான் மிக மிக சுவையாக இருக்கும் கோதுமை பேரிச்சை லட்டு தயார். இந்த சத்துக்கள் நிறைந்த லட்டு செய்வது மிகவும் சுலபம்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சுவையான பேரிச்சை பழ மில்க் ஷேக் இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சொட்டு கூட மிஞ்சமிருக்காது!