Home காலை உணவு கோதுமை பிரட் இருந்தால் காலை டிபனுக்கு டென்ஷன் இல்லாமல் உப்புமா இப்படி செய்து பாருங்க!

கோதுமை பிரட் இருந்தால் காலை டிபனுக்கு டென்ஷன் இல்லாமல் உப்புமா இப்படி செய்து பாருங்க!

பிரட் துண்டுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ஐந்து நிமிடத்தில் இப்படி ஒரு பிரேக் ஃபாஸ்ட் ரெசிபி செய்து பாருங்க! தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட்டவர்களுக்கு வித்தியாசமான முறையில் இப்படி செய்து கொடுத்தால் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவார்கள். டெய்லி என்ன செய்வது? என்று புலம்பிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த கோதுமை பிரட் உப்புமா இனி லிஸ்டில் நிச்சயம் இடம்பெறும். அந்த அளவிற்கு ஆரோக்கியமும் சுவையும் மிகுந்தது இந்த கோதுமை பிரட் உப்புமா.

-விளம்பரம்-

 காலையில் எழுந்தும் என்ன டிபன் செய்வது என்பது தான் பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய டென்சனே. அதிலும் இந்த காலை உணவு உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் சீக்கிரம் செய்து முடிப்பதாக இருக்க வேண்டும். இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் இந்த சமையல் குறிப்பு பதிவில் ரொம்பவே சுலபமான கோதுமை பிரட் உப்புமா எப்படி செய்வது என்பதை பற்றியும் தெரிந்து கொள்ள போகிறோம்.பிரட் துண்டுகளை போட்டு இப்படி உப்புமா செஞ்சு பாருங்க! தட்டுல ஒரு துண்டு கூட மிச்சமே இருக்காது தீர்ந்து போய்விடும்.

இட்லி உப்புமா சாப்பிட்டு பார்த்திருப்பீங்க! ஆனால் சுவையான இந்த கோதுமை பிரட் உப்புமா சாப்பிட்டதுண்டா? ஒரு முறை இந்த மாதிரி பிரட் கொண்டு கோதுமை பிரட் உப்புமா  காரசாரமா ருசியா செஞ்சி பாருங்க, எல்லோருமே திரும்பத் திரும்ப கேட்டு சாப்பிடுவாங்க. என்னடா செய்வது? வித்தியாசமா காலை உணவு ஏதாவது வேண்டும்? என்று தோன்றும் பொழுது சட்டுனு பிரட் இருந்தா நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க! சுவையான கோதுமை பிரட் உப்புமா  ரெசிபி எளிதாக எப்படி செய்வது? அப்படின்னு இனி இந்த பதிவில் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
No ratings yet

கோதுமை பிரட் உப்புமா | Wheat Bread Upma Recipe In Tamil

காலையில் எழுந்தும் என்ன டிபன் செய்வது என்பது தான் பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய டென்சனே.அதிலும் இந்த காலை உணவு உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில்சீக்கிரம் செய்து முடிப்பதாக இருக்க வேண்டும். இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் இந்தசமையல் குறிப்பு பதிவில் ரொம்பவே சுலபமான கோதுமை பிரட் உப்புமா எப்படி செய்வது என்பதைபற்றியும் தெரிந்து கொள்ள போகிறோம்.பிரட் துண்டுகளை போட்டு இப்படி உப்புமா செஞ்சு பாருங்க!தட்டுல ஒரு துண்டு கூட மிச்சமே இருக்காது தீர்ந்து போய்விடும். சுவையான கோதுமை பிரட் உப்புமா  ரெசிபி எளிதாக எப்படி செய்வது? அப்படின்னு இனி இந்தபதிவில் தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamilnadu
Keyword: Wheat Bread Upma
Yield: 4
Calories: 680kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 10 ரொ‌ட்டி கோதுமை பிரட்
  • 1 தே‌க்கர‌ண்டி எலுமிச்ச‌ம் சாறு
  • 1/2 தே‌க்கர‌ண்டி மஞ்சள் பொடி
  • 1/2 தே‌க்கர‌ண்டி கடுகு
  • 1/2 தே‌க்கர‌ண்டி க.பருப்பு
  • 1/2 தே‌க்கர‌ண்டி உ.பருப்பு
  • 10 தே‌க்கர‌ண்டி முந்திரி உடைத்தது
  • 3 தே‌க்கர‌ண்டி எண்ணெய் (அ) நெய்
  • உப்பு தேவையான அளவு
  • 1 சிட்டிகை பெருங்காயப் பொடி
  • 4 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி

செய்முறை

  • ரொ‌ட்டி து‌ண்டுகளை நான்காகப் பிய்த்து மிக்ஸியில் போட்டு முதல் ஸ்பீடில் ஒரு சுற்று சுற்றவும். நன்றாக பஞ்சு போல் தூளாகி விடும்.
  • வாணலியை அடுப்பி‌ல் வை‌த்து சூடாக்கி எண்ணெய் அல்லது நெய் விடவும். சூடானதும் கடுகைப் போ‌ட்டு தா‌ளி‌க்கவு‌ம்.
  • ‌பி‌ன்ன‌ர் பருப்பு வகைகளைச் சேர்த்து பொன்னிறமானவுடன், கருவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  • சிறிது நேரம் கழித்து (கொத்துமல்லி தவிர) மேற்சொன்ன பொருள்களை பிரட் தூளுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  • ரொ‌ட்டி உ‌ப்புமாவை தட்டில் பரப்பி கொத்துமல்லி தூ‌வி தூவி அலங்கரிக்கவும். எளிமையான இரண்டு நிமிடங்களில் செய்யக்கூடிய பிரட் உப்புமா.

Nutrition

Serving: 300g | Calories: 680kcal | Carbohydrates: 6.7g | Protein: 41.3g | Fat: 55.8g | Cholesterol: 180mg | Sodium: 1704mg | Potassium: 305mg | Calcium: 1288mg