பழைய வெள்ளை துணிகள் கூட புதிய துணிகள் போல் மாற பயனுள்ள வீட்டு குறிப்பு!

- Advertisement -

பொதுவாக நம் வீட்டில் இருக்கும் எந்த வெள்ளை துணியாக இருந்தாலும் அதை நாம் நீண்ட நாட்கள் பயன்படுத்தும் போது அதன் நிறம் கண்டிப்பாக பழுப்பு நிறமாக மாறத் தொடங்கி விடும். இப்படிப்பட்ட வெள்ளைத் துணிகளை எப்படி பழுப்பு நிறத்தில் இருந்து வெள்ளை நிறத்திற்கு மாற்றுவது என்பதையும் இதனுடன் சேர்த்து நாம் வீட்டில் பீரோவில் வைத்திருக்கும் துணிமணிகள் வாசனையாக இருப்பதற்கு பாச்சா உருண்டைகளை போட்டு வைத்திருப்போம். அதை போடாமலேயே துணிகளை எப்படி நல்ல வாசனையாக வைத்திருப்பது என்பதையும் நாம் இந்த வீட்டு சம்பந்தமான குறிப்புகளில் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

தேவையான பொருட்கள்

நாம் முதலில் பழுப்பு நிறத்தில் இருக்கும் வெள்ளை துணிகளை புதியது போல மாற்றுவதற்காக நாம் வீட்டில் இருக்கும் அலுமினிய வட்டை போன்ற பெரிய பக்கெட் எடுத்துக்கொண்டு. அந்த பக்கெட்டில் கால் பக்கெட் கொதித்துக் கொண்டிருக்கும் சுடுதண்ணியை ஊற்றி அதனுடன் நீங்கள் வீட்டில் சாதாரணமாக துணி துவைக்க பயன்படுத்தும் லிக்யூடாக இருந்தாலும் சரி அல்லது சோப்பு பவுடராக இருந்தாலும் சரி ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் காஸ்டிக் சோடா ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து குச்சி போன்ற ஏதாவது ஒரு பொருளை வைத்து நன்றாக கலக்கி விடுங்கள் எக்காரணம் கொண்டும் கையை நேரடியாக விட்டு கலக்கக்கூடாது.

- Advertisement -

காஸ்டிக் சோடா

நாம் இதில் காஸ்டிக் சோடா பயன்படுத்துவதால் நம் கை வெந்து போகும் அளவு கூட பாதிப்பு ஏற்படும் அதனால் ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும். அதேபோல் நாம் இதனுடன் காஸ்டிக் சோடா சேர்த்திருப்பதால் அதிகமாக நுறை பொங்கி வரும் அப்படி பொங்கி வரும் நுறை அடங்கியதும் மறுபடியும் குச்சியை விட்டு ஒரு முறை கலந்து விட்டு. நாம் இந்த அளவில் சேர்த்த பொருட்களுக்கு ஒரு மூன்று வெள்ளை துணிகளை சேர்த்து ஒரு இரண்டு மணி நேரங்கள் நன்கு ஊர விட்டுக் கொள்ளுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து நாம் ஊறவைத்த தண்ணீரிலேயே ஒரு இரண்டு முறை இரண்டு மூன்று முறை நன்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு எப்போதும் போல் நீங்கள் துணிகளை துவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்யும்போது நீங்கள் புதிதாக வாங்கிய துணி போல் உங்கள் வெள்ளை துணிகள் மாறிவிடும்.

துணிகள் வாசனைக்காக

நம் வீட்டு பீரோவில் துணிமணிகள் வாசனையாக இருப்பதற்காக பாச்சா உருண்டைகளை போட்டு வைத்திருப்போம். ஆனால் பாச்சா உருண்டை பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் ஆப்ப சோடா, ஒரு ஸ்பூன் துணி துவைக்க பயன்படுத்தும் கம்போர்ட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதை நாம் சப்பாத்திக்கு மாவு பிசையும் பதத்திற்கு பிசைந்தால் நமக்கு ஒரு சிறு உருண்டைகளாக கிடைக்கும். இந்த உருண்டைகளை நம் வீட்டிற்குள்ளேயே ஒரு நாள் முழுவதும் நிழலில் காய வைத்து எடுக்க வேண்டும்.

நல்ல வாசனை நிலவும்

பின்பு இந்த உருண்டைகளை நம் வீட்டில் இருக்கும் மெல்லிதான காட்டன் துணிகளில் கட்டி அப்படியே பீரோவில் ஏதேனும் ஒரு பகுதியில் மாட்டி விடலாம் அல்லது துணிகள் இருக்கும் இடங்களில் வைத்து விடுங்கள். நீங்கள் இந்த உருண்டையை எந்த பொருளில் போட்டு வேண்டாலும் வைக்கலாம் ஆனால் அதிலிருந்து வாசனை வெளியாகும் படி போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் உங்கள் வீட்டில் கெட்ட வாசனைகள் துர்நாற்றம் அடிக்கும் இடங்களில் கூட இந்த உருண்டையை வைக்கும் போது அங்கு நல்ல வாசனை நிலவும் சூழலை உங்களுக்கு இந்த உருண்டைகள் ஏற்படுத்திக் கொடுக்கும். அதனால் இதையும் உங்கள் வீட்டில் கண்டிப்பாக செய்து பாருங்கள்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here