இரவு உணவுக்கு ருசியான ஒயிட் சாஸ் பாஸ்தா இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! போட்டி போட்டு சாப்பிடுவார்கள்!!

- Advertisement -

உங்கள் வீட்டில் உள்ளோர் பாஸ்தாவை விரும்பி சாப்பிடுவார்களா? பொதுவாக பாஸ்தா செய்வது மிகவும் சுலபம். அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே நல்ல அற்புதமான ருசியில் பாஸ்தாவை செய்யலாம். பாஸ்தாவை இன்னும் சத்தானதாக மாற்ற உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். ஒயிட் சாஸ் பாஸ்தா உணவகங்களில் வழங்கப்படும் பிரபலமான பாஸ்தா ரெசிபிகளில் ஒன்றாகும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : ருசியான முட்டை பாஸ்தா இப்படி செய்து பாருங்க! தினசரி இட்லி, தோசை செய்வதற்கு ஒரு மாறுதலாக இருக்கும்!

- Advertisement -

இப்போதெல்லாம் ஒயிட் சாஸ் பாஸ்தா தெருக் கடைகளிலும் கிடைக்கிறது. பாஸ்தா காலை நேர உணவாகவும், மாலை சிற்றுண்டி, அல்லது இரவு நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பலாம். எப்போதும் சாப்பிடும் இட்லி அல்லது தோசை போர் அடிக்கும் பொழுது சில சமயங்களில் இது போன்ற பாஸ்தா வகைகளை செய்து சாப்பிடலாம்.

Print
No ratings yet

ஒயிட் சாஸ் பாஸ்தா | White Sauce Pasta Recipe in Tamil

உங்களுக்கு நல்ல சுவையில் பாஸ்தா செய்யத் தெரியாதா? பொதுவாக பாஸ்தா செய்வது மிகவும் சுலபம். அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே நல்ல அற்புதமான ருசியில் பாஸ்தாவை செய்யலாம். பாஸ்தாவை இன்னும் சத்தானதாக மாற்ற, அவற்றுடன் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். ஒயிட் சாஸ் பாஸ்தா உணவகங்களில் வழங்கப்படும் பிரபலமான பாஸ்தா ரெசிபிகளில் ஒன்றாகும். இப்போதெல்லாம் ஒயிட் சாஸ் பாஸ்தா தெருக் கடைகளிலும் கிடைக்கிறது. பாஸ்தா காலை நேர உணவாகவும், மாலை சிற்றுண்டி, அல்லது இரவு நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Pasta
Yield: 4 People
Calories: 221kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 200 கிராம் பாஸ்தா
  • 2 டேபிள் ஸ்பூன் மைதா
  • 2 டேபிள் ஸ்பூன் பட்டர்
  • 1 டீஸ்பூன் ஹெர்ப்ஸ்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 கப் பால்
  • 2 டேபிள் ஸ்பூன் சீஸ்
  • உப்பு தேவையானஅளவு

செய்முறை

  • முதலில் பாஸ்தாவை ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
  • பாஸ்தா நன்கு வெந்த பின் அதை நன்கு வடிகட்டி கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் முழுவதுமாக வடிந்த பாஸ்தா அதனுடன் மிளகு தூள், எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயில் பட்டர் சேர்த்து உருகியதும் மைதா அதனுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
  • பின் தேவையான அளவு பால் ஊற்றிக் கொண்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். நன்றாக க்ரீம் ஆகும் வரை கிளறிக் கொள்ளவும்.
  • பின் அதனுடன் பாஸ்தா சேர்த்து நன்றாகக் கிளறிக் கொள்ளவும். சுவையான ஒயிட் சாஸ் பாஸ்தா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 221kcal | Carbohydrates: 43.2g | Protein: 8.1g | Fat: 1.3g | Sodium: 650mg | Potassium: 403mg | Fiber: 2.5g | Calcium: 11mg