காலை டிபனை அசத்தாலாக மாற்ற முட்டை பாஸ்தா இப்படியும் செய்யலாம்! மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

ஒரு முறை அனைவரும் விரும்பும் முட்டை பாஸ்தா செஞ்சு தான் பார்ப்போமே!ரொம்பவே எளிதாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முட்டை பாஸ்தா ரெசிபி சூப்பரான சுவையில் எளிதாக எப்படி செய்வது? அப்படின்னு தெரிஞ்சுக்குவோம் வாங்க.உலகம் இப்போ ரொம்பவே மாறிடுச்சு. எதிலயும் இப்ப ஃபாஸ்ட் அண்ட் டேஸ்ட் தான்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : முட்டை வறுவல் இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி தான்!

- Advertisement -

துரித உணவுகளுக்குள்ள கிரேஸ் என்னவோ கூடிக்கிட்டேத்தான் இருக்கு. உங்க வீட்ல கூட பாஸ்தா செய்யணும்னு ஆசையா? கண்டபடி ஃபாஸ்ட் புட்ஸ்ல பாஸ்தா வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து வீட்லயே நிறையா காய்கறி சேர்த்து எக் பாஸ்தா செய்து ஹெல்த்தியா சாப்பிடுங்க..!

Print
No ratings yet

முட்டை பாஸ்தா | Egg Pastha Recipe in Tamil

ரொம்பவே எளிதாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முட்டை பாஸ்தா ரெசிபி சூப்பரான சுவையில் எளிதாக எப்படி செய்வது? அப்படின்னு தெரிஞ்சுக்குவோம் வாங்க.உலகம் இப்போ ரொம்பவே மாறிடுச்சு. எதிலயும் இப்ப ஃபாஸ்ட் அண்ட் டேஸ்ட் தான். துரித உணவுகளுக்குள்ள கிரேஸ் என்னவோ கூடிக்கிட்டேத்தான் இருக்கு. உங்க வீட்ல கூட பாஸ்தா செய்யணும்னு ஆசையா? கண்டபடி ஃபாஸ்ட் புட்ஸ்ல பாஸ்தா வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து வீட்லயே நிறையா காய்கறி சேர்த்து எக் பாஸ்தா செய்து ஹெல்த்தியா சாப்பிடுங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast
Cuisine: Indian, TAMIL
Keyword: Bastha, பாஸ்தா
Yield: 3 People

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 2 கப் பாஸ்தா
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/ பாகம் தக்காளி
  • 2 முட்டை
  • 1/ பாகம் குடைமிளகாய்
  • 1/ tbsp சீரகத்தூள்
  • 1/ tbsp கரம் மசாலா
  • உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

  • வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, குடைமிளகாய், தக்காளி ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியாக வதக்கவும்.
  • அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, சீரகத்தூள் போடவும்.நன்றாக வதங்கியதும் முட்டை சேர்க்கவும்.
  • முட்டை நன்றாக வதங்கியதும் வெந்த பாஸ்தா சேர்த்து சுருள விட்டு அடுப்பை அணைக்கவும்.
  • தேவை என்றால் காய்கறிகள் சேர்க்கலாம், சால்னா கூட சேர்க்கலாம்.
  • வித்தியாசமான சுவை கிடைக்கும். சுவையான எக் பாஸ்தா ரெடி.

Nutrition

Serving: 100g | Carbohydrates: 0.5g | Protein: 4g | Fat: 4.5g | Saturated Fat: 1.6g | Cholesterol: 184mg