Home ஆன்மிகம் சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடக்கூடாது என்று சொல்வார்கள்? அதற்கு என் காரணம் என்று தெரியுமா...

சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடக்கூடாது என்று சொல்வார்கள்? அதற்கு என் காரணம் என்று தெரியுமா ?

இந்துக்களின் புராணங்களின்படி சிவபெருமானின் மகன் என்று சனி பகவான் சொல்லப்படுகிறார். நவகிரகங்களிலேயே சிவபெருமானின் பட்டம் பெற்றவர் இவர் மட்டுமே. நவக்கிரகங்களில் மந்த கிரகம் என சொல்லப்படும் சனி பகவானின் குரு சிவபெருமான் ஆவார். நாம் மற்ற தெய்வங்களை வணங்குவதை விட சனி பகவானை வணங்கும் பொழுது ஒரு சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.

-விளம்பரம்-

சனிபகவானை வணங்கும் பொழுது அவரை விழுந்து வணங்க கூடாது சனி பகவானின் சன்னதியில் வாங்கிய பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது என சனி பகவானை வணங்குவதில் பல்வேறு விஷயங்கள் உள்ளது. பொதுவாக அனைத்து கோவில்களுக்கும் செல்லும் பொழுது கருப்பு நிற ஆடையை தவிர்க்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள் ஆனால் சனி பகவானுக்கு மட்டும் கருப்பு நிற வஸ்திரமே அணிவிக்கப்படும். இப்படி சனிபகவானை வணங்குவதிலும் சனி பகவானுக்கு செய்யும் பூஜைகளிலும் நிறைய மாறுதல்கள் இருக்கும் அதற்கான காரணங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

சனிபகவானை பற்றிய சில விஷயங்கள்

சனியை போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள்.எனவே சனி பகவானை கண்டு பயப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவானின் அமைப்பு எப்படி இருக்கிறது அதை பொறுத்தே அவர்களின் வாழ்க்கையும் அமையும். நவகிரகங்களிலேயே சனி பகவானை ஆயுள்காரகன் என்று அழைப்பதுண்டு. சனிபகவான் ஒருவருடைய ராசியில் சஞ்சரிக்கும் போது அவர்களுக்கு அனைத்து விதமான துன்பங்களையும் சிறப்புகளையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கஷ்டங்களையும் கொடுத்துவிட்டு அந்த ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது முந்தைய ராசிக்காரர்களுக்கு சில நன்மைகளையும் கொடுத்து விட்டு செல்வார் என்பது வழக்கம்.

சனிபகவானின் பார்வையைத் தவிர மற்ற அனைத்து தெய்வங்களின் பார்வையும் நம்மில் பட வேண்டும் என்று எப்பொழுதுமே நான் நினைப்போம் இதற்கு புராணங்களில் ஒரு கதையே இருக்கிறது. இலங்கையின் அரசன் ராவணன் நவகிரகங்களையும் தன் காலின் கீழ் வைத்து கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். சூரியன் சந்திரன் என ஒன்பது வகையான கிரகங்களையும் தான் அரியணைக்கு ஏறி இறங்கும் படிக்கட்டுகளில் மேல் நோக்கி படுக்க வைத்திருந்தான் ஆனால் சனி பகவானின் பார்வை இராவணன் மீது பட்டால் அவருக்கு தீமை விளையும் என்று நினைத்து கீழ்நோக்கி படுத்திருந்தார். ராவணனின் கொடுமைகளை தாங்க முடியாத நாரதர் ஒரு தடவை ராவணனிடம் மற்ற அனைத்து நவகிரகங்களும் உங்களை மேல் நோக்கி பார்த்து உங்களுக்கு மரியாதை செய்கின்றன ஆனால் இந்த சனி பகவான் மட்டும் கீழ் நோக்கி பார்த்துக் கொண்டு உங்களை அவமதிக்கிறார் என்று கூறினார்.

உடனே கோபம் கொண்ட ராவணன் சனிபகவானை மேல் நோக்கி வைத்தார். சனி பகவான் நான் உங்களை பார்த்தபடி இருந்தால் உங்களுக்கு நிறைய பிரச்சனைகள் வரும் என்று கூறியும் கேட்காத ராவணன் சனி பகவானை மேல் நோக்கி படுக்க வைத்தார். அதன் பிறகு சனி பகவானின் பார்வை இராவணன் மேல் பட அவருக்கு ஏழரை சனி ஆரம்பித்து சிறிது நாட்களிலேயே ராமனின் கைகளால் ராவணன் அழிந்துவிட்டார். எனவே சனிபகவானின் பார்வை ஒருவர் மேல் பட்டு விட்டால் அவர்கள் எந்த அளவிற்கு கஷ்டத்தை அனுபவிப்பார்கள் என்று ராவணனின் கதையில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

-விளம்பரம்-

சனி பகவானை வழிபடும் முறை

ஏழரை சனி பாத சனி அஷ்டம சனி ஜென்ம சனி போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் சனி பகவானையும் நவகிரகங்களையும் சுற்றுவது விசேஷமானது. அப்படி நாம் சனி பகவானை வழிபடும் போது சனி பகவானுக்கு நேருக்கு நேர் நின்று வணங்காமல் சன்னதிக்கு இரு பக்கங்களிலும் நின்று தான் வணங்க வேண்டும். அப்படி நாம் வணங்கினால் சனி பகவானின் பார்வை நம் மேல் இருந்து விலகி நமக்கு நன்மைகள் நடக்கும். மேற்குறிப்பிட்ட இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் நவகிரகங்களையும் சனி பகவானையும் சுற்றும் போது 27 முறை சுற்றி வந்தால் நமக்கு வரும் ஆபத்துகள் சற்று குறையும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நாம் உதவி செய்தாலும் சனீஸ்வர பகவான் நமக்கு நன்மைகள் புரிந்து அருளை தருவார்.

சனிபகவானின் பிடியிலிருந்து தப்பிக்க சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமை காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து விட்டு காளி மாலையும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து பால் பழம் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு இருக்க வேண்டும். மாலை நேரத்தில் சனி பகவானுக்கு நல்லெண்ணெயில் தீபம் போட்டு வழிபட்டுவிட்டு இரவு நேரத்தில் உங்கள் விரதத்தை முடித்து உணவு உண்ணலாம் இவ்வாறு சனிபகவானை வழிபட்டால் ஏழரை சனையிலிருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.

சனிக்கிழமை சனிபகவானை வழிபடுவதன் நன்மைகள்

ஒருவர் சகல செல்வமும் பெற்று வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட வேண்டும். விரதம் இருந்து சனிக்கிழமை மாலை நேரத்தில் சனிபகவானுக்கு கருப்பு வஸ்திரம் கருப்பு எள் மற்றும் சாதம் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. சனிக்கிழமை அன்று சனிபகவான் மட்டுமல்லாமல் அனுமானையும் பெருமானையும் வழிபடுவது இன்னும் சிறப்பானது. சனிக்கிழமை அன்று காகத்திற்கு படையல் வைப்பதும் மிகவும் சிறப்பான ஒன்றாகும். சனி தோஷத்தால் உங்களுக்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த விரதத்தை நீங்கள் இருக்கலாம் உங்களுக்கு நல்ல பலன் விரைவில் கிடைக்கும்

-விளம்பரம்-