நீங்கள் பிறந்த தேதியை வைத்த உங்களுடைய குணம் மற்றும் வாழ்க்கையை பற்றி சொல்லிவிடலாம்!

- Advertisement -

பொதுவாக ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தை பிறந்த நாளை கணக்கில் வைத்து தான் அந்த குழந்தைக்கு ராசி நட்சத்திரம் என அனைத்தும் கணிக்கப்படும். பிறந்தநாள் வைத்து தான் இந்த குழந்தை நல்ல நாளில் பிறந்துள்ளதா என்பதையும் கணிப்பார்கள். அந்த வகையில் என் கணிதம் என்பது பழங்கால அறிவியல் என்று சொல்லலாம். குறிப்பிட்ட ஒரு சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தானாகவே தேடி வரும் அவர்கள் எதில் காலடி எடுத்து வைத்தாலும் அதில் வெற்றியை மட்டுமே காண்பார்கள். ஒரு சில தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். அந்த வகையில் எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் எந்தெந்த துறையில் திறமைகளைப் பெற்று இருப்பார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

-விளம்பரம்-

1,10,19,28 போன்ற தேதிகளில் பிறந்தவர்கள்

இயற்கையாகவே தலைமை பண்பை கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்களுக்கு மட்டும் இல்லாமல் மற்றவர்களுடைய கருத்தையும் உயர்த்துவார்கள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை முன்கூட்டியே கணித்து எல்லா சூழ்நிலைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பார்கள். சவால்களை ஏற்று புதிய பாதையை உருவாக்கும் திறமை இவர்களிடம் உண்டு. நிறைய புது வாய்ப்புகள் தேடி வரும் பொழுது அதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வார்கள்

- Advertisement -

3,12,21,30 போன்ற தேதிகளில் பிறந்தவர்கள்

கலை மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள். படைப்பாற்றல் திறமையையும் கொண்டிருப்பார்கள். ஒருவர் தடையாய் பார்க்கும் ஒரு விஷயத்தை இவர்கள் வாய்ப்புகளாக மாற்றி நல்ல பாதையில் இவர்களை செலுத்திக்கொண்டு அதில் வெற்றி பெறுவார்கள். புதிதாய் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கும் சிந்தனை இவர்களிடம் நிறைய உண்டு.

5,14,23 போன்ற தேவைகளில் பிறந்தவர்கள்

மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பல சாகசங்களை செய்யும் திறமைகளை கொண்டிருப்பார்கள். எந்த காரியத்தை தொட்டாலும் அதில் பயமில்லாமல் அவர்களும் முன்னேறுவார்கள் அதோடு மற்றவர்களையும் முன்னேற்றுவார்கள். புதிய நல்ல பல விஷயங்களை தங்களை அடிக்கடி ஈடுபடுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்

9,18,27 போன்ற தேதிகளில் பிறந்தவர்கள்

வலுவான தலைமை பண்புகளைக் கொண்டு எப்பொழுதும் தொலைநோக்கு பார்வையோடு யோசிப்பார்கள். பின்னால் நடக்கப் போகும் பிரச்சனைகளை முன்னாடியே அறிந்து அதனை தடுத்து சில செயல்பாடுகளை செய்வார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அதிகம் கொண்டிருப்பார்கள் மேலும் வியாபாரத்திலும் தொழிலிலும் வேலை வாய்ப்புகளிலும் உள்ள பிரச்சனைகளை தீர்க்கும் திறமையும் கொண்டிருப்பார்கள். குறிப்பாக ஒன்பதாம் தேதி பிறந்தவர்கள் சவால்களை ஏற்று அதனை முடிப்பதில் மிக சிந்தனையுடையவர்களாக விளங்குவார்கள்

-விளம்பரம்-