அம்மாவாசை காகத்திற்கு படைக்க வாழைக்காய் கறி எப்படி செய்வது ? ஏன் படைக்கிறோம் ?

- Advertisement -

பொதுவாக நம்மில் பலரும் அம்மாவாசை தினம் அது ஒரு கெட்ட நாள் என்றும் அன்றைய தினம் மோசமான விஷயங்கள் நடக்கும் எனவும் கருதுகின்றாம். இருந்தாலும் அமாவாசை போல் கடவுள் வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் வேறு நாளில்லை, அம்மன் வழிபாடு செய்வதற்கு இன்னாள் மிகவும் உகந்த நாள். அது போன்று அமாவாசை தினங்களில் நாம் முன்னோர்களை மனதில் நினைத்து அன்று நாம் சமைக்கும் உணவை காகங்களுக்கு படைத்து வருவோம். அப்படி நாம் படைக்கும் உணவுகளில் கிழங்கு, காய், கீரை என மூன்று பொருள்களும் இடம் பெற்று இருக்கும்.

-விளம்பரம்-
unknown facts about black crow, இது உண்மையாம்! வீட்டின் முன் காகம்  கரைந்தால் உறவினர்கள் வருவார்கள்? - crow superstition: meaning of seeing  crows and shouting in front of house - Samayam Tamil

இப்படி நாம் படைக்கும் உணவுகளில் முக்கியமானது வாழைக்காய் தான், ஏனெனில் நம் குலம் வாழையடி வாழையாக வாழ வேண்டுமென பலர் சொல்லிக் கேட்டு இருப்பீர்கள். அதற்காக அதுபோல் நம் குலமும், சந்ததிகளும், தழைத்து வாழ வேண்டும் என்பதற்காக அமாவாசை நாட்களில் காகங்களுக்கு படைக்க வாழக்காய் கறி எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 4
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

தாளிக்க

மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன்
கடுகு – 1 டிஸ்பூன்
கருவேப்பிலை – ஒர கொத்து
உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 4 டீஸ்பூன்

பொடி செய்ய

மல்லி விதை – 3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
கடலை பருப்பு – 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன்
பெருங்காய கட்டி – சிறு துண்டு
எண்ணெய் – 2 டீஸ்பூன்

-விளம்பரம்-
அமாவாசை நாளில் வாழைக்காயை கட்டாயம் சமைக்க வேண்டும்... ஏன் தெரியுமா?

செய்முறை

1) முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணய் காய்ந்ததும் அதில் நாம் வைத்திருக்கும் பெருங்காயம், மல்லி விதை, கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு சிவக்கும் வரை வறுத்துக்கொள்ளுங்கள்.

2) பொருள்கள் நன்கு வறுபட்டு வந்ததும் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காய் துருவலையும் சேர்த்து கொள்ளவும். பின் தேங்காய் நன்கு வறுபடும் வரை வறுத்து எடுத்து கடாயை இறக்கி கொள்ளுங்கள். பின் அனைத்து பொருட்களும் நன்கு குளிர்ந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

3) அதன் பின்பு நாம் வைத்திருக்கும் நான்கு வாழைக்காய் தோல்களை நீக்கி விட்டு. சற்று பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொண்டு. பின் அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து. அதனுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து பின் வாழைக்காய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

-விளம்பரம்-

4) தண்ணீர் நன்கு கொதித்து வாழைக்காய் வெந்து வந்தவுடன் நீரை வடிகட்டி வாழைக்காயை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு கனமான ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, உளுந்தம் பருப்பு போன்ற பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

5) பின் தாளிப்பு முடிந்தவுடன் அதனுடன் நாம் வேக வைத்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு தீயை மிதமாக எரிய விட்டு ஒரு பத்து நிமிடங்கள் வாழக்காயை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

6) பின்பு நாம் முதலில் பொடித்து வைத்திருக்கும் பொடியையும சேர்த்து ஒரு ஐந்து நிமிடங்கள் வரை வாழைக்காயை வதக்கி பின் கடாயை இறக்கி விடுங்கள். அவ்வளவுதான் இதை நீங்கள் காகங்களுக்கு படைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here