இந்த 12 பாவங்களை செய்பவர் மட்டும் சிவனின் கோபத்தில் இருந்து தப்ப முடியாது ?

- Advertisement -

இந்து புராணத்தின் படி ஏன் இந்த உலகத்திலேயே இருக்கும் அனைத்து கடவுள்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கூட கடவுளுக்கெல்லாம் கடவுளாக விளங்குவர் சிவபெருமான் ஒருவரை. சிவபெருமான் நினைத்தால் ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கவும் முடியும் அழக்கவும் முடியும் என்பார்கள். இப்படி அபரிவிதமான சக்தி படைத்த கடவுளை கூட சில பேருக்கு பிடிப்பதில்லை. அதற்கு காரணம் அவரின் தோற்றமே நீங்கள் வழிபடும் அனைத்து கடவுள்களும் தங்க கிரீடம், தங்க ஆபரணம் மற்றும் நல்ல உடைகளை உடுத்திருப்பார்கள். ஆனால் சிவனோ ஒரு புலி தோலையும், ருத்ராட்சம் மாலையையும், சுடுகாட்டில் இருக்கும் சாம்பலையும் உடம்பில் பூசி கொண்டிருப்பவர்.

-விளம்பரம்-

இதனாலையே சிவபெருமானையே அன்றைய காலத்தில் இருந்து இந்த காலம் வரை பலரும் வழிபட தயங்குவார்கள். ஆனால் சிவபெருமான் நமக்கு ஒன்றை உணர்த்துவதற்காக தான் அந்த கோலத்தில் இருக்கிறார் என்று இங்கே யவேறுமே அறிந்து கொள்வதே இல்லை. ஆம், இந்த உலகில் எதுவும் யாருக்கும் சொந்தமில்லை என்றும். வாழும் பொழுது எவ்வளவு காசு, பணம் வைத்திருந்தாலும் கடைசியில் இறந்து இந்த மண்ணோடு மண்ணாக போயிருவான் என்பதை உணர்த்தும் விதமாகவே இறந்த மனிதனின் சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொண்டு இருப்பார். அதையும் தாண்டி சிவபெருமானை விட ஒரு சாந்தமான கடவுளும் இல்லை அவரைவிட ஒரு கோபக்கார கடவுளும் இல்லை. அதனால் எந்தெந்த பாவங்கள் செய்தால் சிவபெருமானின் கோப அக்கினியில் இருந்து தப்பிக்க இயலாது என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

- Advertisement -

குழந்தைகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் வன்முறையில் ஈடுபடுபவர்களை என்றுமே சிவனின் கோப அக்னியில் இருந்து தப்ப முடியாது

தேவையில்லாத வதந்திகளையும், தவறான விஷயங்களையும் அடுத்தவர்களிடம் கூறி மன நிம்மதி இல்லாமல் செய்வதும் கூட சிவபெருமானின் கோபத்தை தூண்டும் ஒரு செயலாகும்.

அடுத்தவரின் பணம் மற்றும் சொத்துக்களின் மீது ஆசை கொள்வது சிவபெருமான் ஒரு போதும் மன்னிக்க மாட்டார். மேலும் அவரின் பக்தர்களின் பொருட்கள் மீது ஆசைப்பட்டால் அது பேராபத்து. இதைதான் சிவன் சொத்து குல நாசம் என்பார்கள்.

-விளம்பரம்-

திருமணம் ஆன ஒரு பெண்ணின் மீது அல்லது ஒரு ஆணின் மீது ஆசைப்படுவதை சிவபெருமான் என்றுமே மன்னிக்க மாட்டார்.

ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் அடுத்தவர்களுக்கு தீமை செய்து கொண்டு தீய வழியில் செல்வதும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யாமல் வாழ்பவனும் கூட சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாவார்கள்.

மாதா, பிதா, குரு, தெய்வம் வயதானவர்கள், மற்றும் உடல் குறைபாடு உடையவர்களை கேலி செய்தல், அடித்து துன்புறுத்துதல் போன்ற விஷயங்களை நாம் செய்யும் பொழுது சிவபெருமானின் கோபத்திற்கு நேரடியாக ஆளாவோம்.

-விளம்பரம்-

கர்ப்பிணி பெண்களிடம் மோசமான முறையில் நடந்து கொள்வது, அவர்களை தகாத வார்த்தைகளைக் கொண்டு பேசுவது இதை செய்பவர்கள் எளிதில் சிவபெருமானின் கோபத்தை சம்பாதித்து விடலாம்.

முறையற்ற வழியில் பணம் சம்பாதித்து சொத்து சேர்ப்பது மற்றும் ஒருவருக்கு தானமாக கொடுத்த பொருளை அவரிடம் இருந்து கட்டாயப்படுத்தி வாங்குவது சிவபெருமானின் கோபத்தை தூண்டு நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு சமம்.

ஒருவர் அவர் செய்யாத அப்பட்டமான பழியை தூக்கி ஒருவர் மீது சுமத்துததால் நாம் நேரடியாக சிவனின் கோபத்திற்கு ஆளாகி விடுவோம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவரை கொலை செய்து அவருடைய வாழ்க்கையும், அவரை சார்ந்தவர்களின் வாழ்க்கையும் நாசம் செய்வதை சிவபெருமான் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்.

இந்து புராணத்தின் படி புனிதமாக சொல்லப்படும் விலங்குகளை உணவாக உட்கொள்வது சிவபெருமானின் கோபத்தை தூண்டும். அதிலும் பசுமாட்டை உணவாக எடுத்துக் கொள்வது சிவபெருமானின் கோபத்தை இன்னும் உக்கிரமாக்கும்.

தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று சுயநலத்தோடு, அடுத்தவர்களின் வாழ்வையும், கனவையும் அழிப்பவன் சிவனின் மூன்றாவது கண்ணான நெற்றி கண்ணில் இருந்து தப்ப முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here