12 ராசிக்காரர்களுக்கு 2024 எப்படி இருக்க போகிறது ? 2024 இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் தான்!

- Advertisement -

மேஷ ராசி

2024 ல்‌ உங்கள் வாழ்க்கையில் பல விதமான ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். பத்தாம் வீட்டின் அதிபதியான சனி பகவான் பதினொன்றாம் வீட்டில் இருப்பதனால் உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வுகளும் கிட்டும். மேலும் சனி பகவான் உங்கள் அன்பை பல வகைகளில் சோதித்து பார்ப்பார். குரு பகவானின் தாக்கம் இருப்பதால் மாணவர்களின் படிப்பு திறன் மேலோங்கி இருக்கும். உங்கள் ராசி அதிபதியின் செவ்வாய் பகவான் தனுசு ராசியில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ஒன்பதாம் வீட்டில் சூரிய பகவானுடன் சேர்வதால் அதிகமான பயணங்களுக்கான வாய்ப்புகள் உருவாகும். ஆண்டின் தொடக்கத்தில் உங்களது திருமண வாழ்க்கை மற்றும் உறவினர்களுக்கு இடையே ஒரு நல்ல உறவு இருக்கும். ஆனால் ஆண்டின் இறுதியில் இந்த உறவுகளில் கொஞ்சம் கவனமாக இருப்பது சிறந்தது. தனிமையில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டின் இடையில் காதல் வர வாய்ப்புள்ளது. திருமண யோகமும் கூடும். சமுதாயத்தில் உங்களுக்கான மரியாதையும் கூட வாய்ப்புள்ளது. ராகு பகவானின் தாக்கத்தினால் உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும் ஆனால் அது எல்லாம் கட்டுப்படுத்த நீங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும். ராகு மற்றும் கேது அமைப்பினால் உங்களது ஆரோக்கியத்திலும் உங்களுடைய பெற்றோர்களின் ஆரோக்கியத்திலும் சற்று அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். ஆனால் குரு பகவான் உங்களை எல்லாவற்றிலிருந்தும் காப்பாற்றுவார்.

-விளம்பரம்-

ரிஷப ராசி

ரிஷப ராசிக்கு 2024 ன் தொடக்கத்திலேயே கேது பகவான் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்கள் காதலியை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் காதல் உறவில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். எனவே உறவுகளை பொறுத்தவரையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சுக்கிர பகவானின் செல்வாக்கு உங்களை இந்த பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் உங்களுக்கு அதிக கவனம் தேவை. ஏழாம் வீட்டில் புதனும் சுக்கிரனும், பன்னிரண்டாம் வீட்டில் குருவும், பத்தாம் வீட்டில் சனியும், பதினொன்றாம் வீட்டில் ராகுவும் இருப்பதனால் நீங்கள் வியாபாரம் தொடங்க வேண்டும் என்ற கனவில் இருந்தால் நிச்சயமாக கை கூடும். யோகமான கிரகமான சனிபகவான் இந்த ஆண்டு முழுவதும் பத்தாம் வீட்டில் தங்கி இருப்பதால் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். இந்த வருடத்தின் தொடக்கத்தில் குரு பகவான் 12 ஆம் வீட்டில் இருப்பதினால் உங்களுக்கு செலவுகள் அதிகமாக கூடும். ஆனால் மே ஒன்றாம் தேதிக்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு வருவதால் இந்த மாதிரியான பிரச்சனைகள் சரியாக கூடும். ராகுவானது வருடம் முழுவதும் 12 ஆம் வீட்டில் இருப்பதால் இந்த ஆண்டு நீங்கள் விரும்புவது எல்லாம் உங்களுக்கு வந்து சேரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வட்டம் சற்று அதிகரிக்கச் செய்யும். ஐந்தாம் வீட்டில் கேது, பன்னிரண்டாம் வீட்டில் குரு எட்டாம் வீட்டில் செவ்வாய், சூரியன் இருப்பதால் உங்களுக்கு உடல் நல குறைவு ஏற்படக்கூடும். ஆனாலும் அந்த ஆண்டின் நடுப்பகுதியில் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -

மிதுன ராசி

மிதுன ராசிக்கு 2024 ன் தொடக்கத்திலேயே சூரியனும் செவ்வாயும் ஏழாவது வீட்டில் இருப்பதால் வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். நான்காம் வீட்டில் கேது இருப்பதால் மாணவர்களுக்கு தொடக்கத்தில் பல சிரமங்கள் ஏற்படலாம். குடும்ப பிரச்சினைகளும் இருக்கும். ஆனால் குரு பகவான் இந்த பிரச்சினைகளில் இருந்து உங்களை காத்து படிப்பில் நல்ல முன்னேற்றத்தை தருவார். காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆண்டு காதல் வெற்றி பெற்று திருமணத்தில் கொண்டு போய் சேர்க்கும். திருமண வாழ்க்கையில் தாம்பத்தியத்தில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். குரு பகவானின் அம்சத்தை நீங்கள் பெற்றாலும் நீங்களும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சனிபகவான் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் தங்கி உங்களுக்கு பலவகையான அதிர்ஷ்டங்களை தருவார். குரு பகவான் பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு பலவிதமான நன்மைகளையும் தருவார். ராகுவும் கேதுவும் உங்களுடைய பத்தாம் மற்றும் நான்காவது வீட்டில் தங்கி உங்களது ஆரோக்கியத்தை பாதித்து உடல் நலக்குறைவை ஏற்படுத்தலாம். மொத்தத்தில் இந்த ஆண்டு உங்களுக்கு உடல்நலத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.

கடக ராசி

கடக ராசிக்கு 2024 ல் சனி எட்டாம் வீட்டிலிருந்து பத்தாம் வீட்டிற்குச் செல்வதால் உங்களுக்கு வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும். அதனால் நீங்கள் கடினமாக உழைத்து முன்னேறுவீர்கள். புதன்,சுக்கிரன் போன்ற அம்சங்களால் காதல் வாழ்க்கை நன்றாக வலுக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிட்டும். வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மூத்த அதிகாரிகளோடு உங்களின் உறவு வலுக்கும். குருவின் சிறப்பு அம்சம் இரண்டு மற்றும் நான்காம் வீட்டில் இருப்பதால் மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட முடியும். போட்டித்தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். 2024 வருடத்தின் தொடக்கத்தில் குடும்ப வாழ்க்கை சாதகமாக அமையும். பெரியவர்களின் ஆதரவும் கிடைக்கும். குரு பகவான் ஆண்டின் தொடக்கத்தில் பத்தாம் வீட்டில் இருப்பதால் தொழில் மற்றும் குடும்பத்தில் சமநிலை ஏற்படும். மே 1 தேதிக்கு பிறகு குரு பகவான் பதினொன்றாம் இடத்திற்குச் செல்வதால் வருமானம் அதிகரிக்கும். வருடம் முழுவதும் ராகு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் புனித தலங்களுக்கு சென்று நீராடுங்கள். ஆறாம் வீட்டில் சூரியனும் செவ்வாயும், எட்டாம் வீட்டில் சனியும் இருப்பதால், உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாகவும், செலவுகளைக் கட்டுப்படுத்தவும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வருடத்தின் தொடக்கத்தில் திருமண வாழ்வில் சற்று பதற்றம் ஏற்பட்டாலும் வருடத்தின் நடுப்பகுதி சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். ஆரோக்கியத்தின் பார்வையில், நீங்கள் உங்களை கவனித்துக் கொள்ள வேண்டும் மற்றும் எந்தவொரு உடல் பிரச்சனையையும் புறக்கணிப்பதைத் தவிர்த்து கவனம் கொள்ள வேண்டும். ஆறாம் வீட்டில் சூரியனும் செவ்வாயும், எட்டாம் வீட்டில் சனியும் இருப்பதால், உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாகவும், செலவுகளைக் கட்டுப்படுத்தவும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்கு 2024 ல் சனிபகவான் வருடம் முழுவதும் ஏழாவது வீட்டில் இருப்பதால் உங்கள் திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும். மேலும் உங்கள் வாழ்க்கை துணையின் ஆளுமையும் மேம்படும். மே ஒன்றாம் தேதிக்குப் பிறகு குரு பகவான் பத்தாம் வீட்டிற்கு மாறுவதால் வீட்டிற்கும் வேலைக்கும் இடையே சமநிலையான ஒரு சூழல் ஏற்படும். எட்டாம் வீட்டில் உள்ள ராகு தேவையற்ற செலவுகளை அதிகரித்துக் கொடுக்கும். ஆதலால் செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஐந்தாம் வீட்டில் சூரியனும் செவ்வாயும், எட்டாம் வீட்டில் ராகுவும், ஏழாம் வீட்டில் சனியும் இருப்பதால் உங்களது ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் காதல் உறவில் சில பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்படலாம். வருடத்தின் தொடக்கத்தில் சூரியனும் செவ்வாயும் ஐந்தாவது வீட்டில் தங்கி உங்கள் காதல் உறவை கெடுக்கலாம். ஆனால் அதன் பிறகு குருபகவான் ஒன்பதாம் வீட்டிற்கு செல்வதன் மூலம் உங்கள் பிரச்சனைகள் சற்று குறையலாம். மேலும் குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் வீட்டில் சுப காரியங்களுக்கு நீங்கள் ஏற்பாடு செய்யலாம். இந்த வருடம் முழுவதும் உங்கள் தந்தையுடன் ஆன உறவு மிகவும் வலுப்படும். ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு படிப்பில் கொஞ்சம் பலவீனமாக இருக்கலாம். நீங்கள் கொஞ்சம் ஆர்வத்துடன் படித்தால் படிப்பில் வெற்றி கிட்டும். இயற்கை கிரகங்களின் செல்வாக்கு உங்கள் படிப்பில் பலவிதமான இடையூறுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த வருடம் முழுவதும் ராகு பகவான் எட்டாம் இடத்தில் இருப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

-விளம்பரம்-

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு 2024 தொடக்கத்தில் மிகவும் மிதமாக இருக்கும். வருடத்தின் தொடக்கத்தில் சூரியன் மற்றும் செவ்வாயின் தாக்கம் நான்காம் வீட்டில் இருப்பதால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் கொஞ்சம் பிரச்சனைகள் ஏற்படும். உங்களது உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் உங்கள் காதலியுடன் வரும் பிரச்சனைகள் நீண்ட தூரத்திற்கு போக வாய்ப்புள்ளது. புதனும் சுக்கிரனும் மூன்றாவது வீட்டில் இருப்பதால் உங்களது நட்பு வட்டாரம் மிகுதியாக கூடும். ராகு மற்றும் கேதுவின் தாக்கத்தினால் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஆறாம் மற்றும் எட்டாம் வீடுகளும் பாதிக்கப்பட்டு இருப்பதால் உங்களது வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். ஆண்டின் தொடக்கத்தில் குடும்ப வாழ்க்கை மிகவும் பலவீனமாக இருக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. சகோதர சகோதரிகளிடையே நல்லவிதமான மனப்பான்மை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான அமைப்பு உண்டு. போட்டி தேர்வுகளிலும் வெற்றி கிட்டும். சனி பகவான் உங்களது ஆறாவது வீட்டில் அமர்ந்து எட்டாம் மற்றும் பன்னிரெண்டாம் வீட்டையும் பார்ப்பதால் உங்கள் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. ஆனால் சனிபகவான் இந்த பிரச்சினைகளில் இருந்து உங்களை விடுவிப்பார். உங்களது வாழ்க்கையில் நல்ல ஒழுக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் சனிபகவான் உங்களுக்கு நல்ல வேலையை அமைத்து தருவார். ராகு வருடம் முழுவதும் உங்கள் ஏழாவது வீட்டில் இருப்பார். எனவே நீங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் கவனமாக இருக்க வேண்டும். குரு பகவான் மே 1 வரை உங்களது எட்டாம் வீட்டில் நீடிப்பதால் உங்களது வேலையில் பிரச்சனைகளும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். ஆனால் மே ஒன்றாம் தேதிக்கு பிறகு ஒன்பதாம் வீட்டிற்கு குரு பகவான் செல்வதால் நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் உங்களது சிறிய கவனக்குறைவு பெரிய நோய்க்கு வழி வகுக்கலாம் எனவே எப்பொழுதும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு 2024 இல் தொடக்கம் சிறப்பானதாக அமையும்.‌ புதனும் சுக்கிரனும் இரண்டாவது வீட்டில் இருப்பதனால் நீங்கள் அனைவரிடத்திலும் மிகவும் இனிமையாக பேசுவீர்கள். அதனால் நீங்கள் விரும்பியது அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். வருடத்தின் தொடக்கத்தில் மிகச் சிறப்பானதாக தொடங்கும். அதுவே அந்த வருடத்தின் நடுப்பகுதியில் உங்களுக்கு பல பிரச்சனைகள் நேரிட கூடும். ஆனாலும் அந்த வருடம் முடியும் நேரத்தில் நீங்கள் காதல் திருமணம் செய்ய வாய்ப்புள்ளது. குரு பகவான் மற்றும் சனிபகவானின் அம்சத்தால் உங்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். மேலும் பழைய வேலைகளில் பதவி உயர்வு போன்றவைகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பிலும் போட்டி தேர்வுகளிலும் வெற்றி கிட்டும். இந்த ஆண்டு முழுவதும் அவர்களின் திறமை மற்றும் நேர்மையை மட்டுமே நம்ப வேண்டும். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ அதை பொறுத்து உங்களது திருமண வாழ்க்கையும் சுமூகமாக அமையும். ஆரோக்கியமும் மேம்படும். மே ஒன்றாம் தேதி குரு பகவான் எட்டாம் வீட்டிற்கு மாறுகிறார் எனவே செலவுகள் அதிகரிக்க கூடும். ஆண்டின் முதல் பகுதி மகிழ்ச்சியாகவும் இரண்டாம் பகுதி சற்று பிரச்சினைகள் நிறைந்ததாகவும் இருக்கும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு முதல் வீட்டில் புதனும் சுக்கிரனும், ஐந்தாம் வீட்டில் ராகுவும் இருப்பதால் காதல் உறவுகளை சாதகமாக இருப்பார்கள். ராகு பகவான் ஐந்தாம் வீட்டில் தங்கி மாணவர்களுக்கு புத்தி கூர்மையை அதிகப்படுத்துவார். செவ்வாய் கிரகத்தின் ஐந்தாம் வீட்டில் ராகு பெயர்ச்சிப்பதால் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. அதை தவிர்த்து மற்ற நேரங்களில் நீங்கள் புதிதாக எந்த வேலையும் தொடங்கலாம். தொழிலைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு உங்களுக்கு மிகச் சிறப்பானதாக அமையும். நீங்கள் வேலையை மாற்ற எண்ணினாலும் கூட இந்த ஆண்டு மாற்றிக் கொள்ளலாம். மே ஒன்று வரை வியாழன் ஆறாம் வீட்டில் தங்கியிருப்பதால் உங்கள் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்த ஆண்டு நீங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். அதனால் உங்கள் வீட்டிற்கு உங்களால் குறைந்த நேரம் மட்டுமே செலவு செய்ய முடியும். பொருளாதார முன்னேற்றத்தை பெறுவீர்கள். மே 1 வரை குரு பகவான் ஆறாம் வீட்டில் நீடிப்பதால் உங்களுக்கு செலவுகள் அதிகமாகும். ராகு பகவான் வருடம் முழுவதும் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் உங்களுடைய புத்திசாலித்தனத்தை பாதிக்கும் எனவே அவசரத்தில் கோபத்தில் எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.

-விளம்பரம்-

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டில் குரு பகவான் அமர்ந்திருப்பதால் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். இந்த ராசியில் செவ்வாய் மற்றும் சூரியன் உக்கிரமாக இருப்பதால் பல கடினமான சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். மூன்றாம் வீட்டில் சனிபகவான் மற்றும் நான்காம் வீட்டில் ராகவும் இருப்பதால் குடும்ப வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். மாணவர்களுக்கு குரு பகவானின் அருளால் கல்வி நன்றாக அமையும். போட்டி தேர்வுகளுக்கு முயற்சி செய்யும் மாணவர்களுக்கு வெற்றி கிட்டும். செலவுகள் அதிகரிக்கக்கூடும். ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் நல்ல வேலை வாய்ப்பையும் சம்பளத்தையும் பெறுவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாயும் சூரியனும் உங்கள் ராசியில் தங்கி இருப்பதால் அதிகமாக கோபப்படுவீர்கள். வருடத்தின் தொடக்கத்தில் குரு பகவான் ஐந்தாம் வீட்டில் தங்கியிருப்பதால் உங்கள் காதல் உறவுகள் மேம்படும். வருமானத்திலும் நல்ல முன்னேற்றம் காணலாம். மே ஒன்றாம் தேதி குரு பகவான் ஆறாம் வீட்டிற்கு செல்வதால் உங்கள் உடல் நலத்தில் குறைபாடுகள் ஏற்பட‌ வாய்ப்புகள் உள்ளது. மொத்தத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புகள் நிறைந்த ஆண்டாக அமையும்.

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு 2024 பலவிதமான நன்மைகள் வந்து சேரும். உங்கள் ராசி அதிபதியும் இரண்டாம் வீட்டிற்கு அதிபதி தான். வருடம் முழுவதும் சனிபகவான் உங்களது இரண்டாம் வீட்டில் இருப்பதால் பொருளாதார வகையில் நீங்கள் பலப்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் இந்த வருடம் உங்களுக்கு வெற்றி அடையும். உங்கள் குடும்பத்தை ஒன்றிணைக்க பாடுபடுவீர்கள். காதல் வாழ்க்கையும் நன்றாக அமையும். மாணவர்கள் கொஞ்சம் முயற்சி செய்த படித்தால் நல்ல பலன் கிடைக்கும். உயர்கல்வியில் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். மே ஒன்று வரை குரு பகவான் நான்காம் வீட்டில் இருப்பதால் தொழிலிலும் குடும்ப வாழ்க்கையிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பிறர் விஷயங்களில் தலையிடுவதை நிறுத்திவிட்டு உங்களது விஷயங்களில் கவனத்தை செலுத்துங்கள். சவால்களுக்கு பயப்படாமல் எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். உங்களது உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. மொத்தத்தில் இந்த ஆண்டில் உங்களுக்கு பெரிய பிரச்சனைகள் எதுவும் வராது. அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு 2024 இன் தொடக்கத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தினால் காதல் விவகாரத்தில் சில பதற்றங்கள் ஏற்படும். காதலில் மிகவும் ஆழம் அடைவீர்கள். உங்களது உறவுகளை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் அதிகமான முயற்சியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு இல்லாமல் கொஞ்சம் அசால்ட் தனமாக இருப்பார்கள். சனிபகவானின் அருளால் நீங்கள் கடினமாக உழைத்து முன்னேறுவீர்கள். ஒழுக்கமாகவும் இருப்பீர்கள். ஆதலால் உங்களது வேலையில் உயர்வு கிட்டும். மூன்றாவது வீட்டில் தங்கி உங்கள் வருமானத்தில் அதிகரிப்பை ஏற்படுத்துவார் மற்றும் உங்கள் திருமண வாழ்க்கையிலும் சாதகமான அறிகுறிகள் இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சியும் அதிர்ஷ்டமும் கூடும். மே 1 தேதிக்கு பிறகு குரு பகவான் நான்காவது வீட்டிற்குச் சென்று குடும்ப உறவுகளை சாதகமாக மாற்ற உங்களுக்கு உதவுவார். பணம் செலவழிப்பதில் கொஞ்சம் கவனம் தேவை. உங்களது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த வேலையும் செய்யாதீர்கள்.

மீன ராசி

2024 மீன ராசிக்காரர்களுக்கு ராகு குருவுடன் சேர்ந்து முதல் வீட்டில் இருப்பதால் சிந்திக்காமல் கோபத்தில் எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது. சூரியன் மற்றும் செவ்வாயின் தாக்கத்தினால் பிரச்சனைகள் அதிகமாக வரலாம். செவ்வாயின் அம்சம் ஐந்தாம் வீட்டில் இருக்கும்பொழுது குடும்ப உறவுகளில் சிறுசிறு கசப்புகள் ஏற்படக்கூடும். இந்த ஆண்டு உங்களுக்கு வேலை வாய்ப்புகள் நன்மைகள் உண்டாகும். மூத்த அதிகாரிகள் உங்கள் வேலைகள் திருப்தி அடைவார்கள். வேலை சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். வருடத்தின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு பிரச்சினைகள் இருந்தாலும், படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உங்களது அன்புக்குரியவர்களுக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. வருடத்தின் தொடக்கத்திலிருந்து குரு பகவான் இரண்டாம் வீட்டில் இருப்பதால் உங்களது குடும்பத்தையும் செல்வாக்கையும் குரு பகவான் பாதுகாப்பார். இது உங்களது பேச்சில் இனிமையை ஏற்படுத்தி உறவுகளை வலுப்படுத்தும். வருடம் முழுவதும் சனி பகவான் 12 ஆம் வீட்டில் இருப்பதால் செலவுகள் அதிகரிக்க கூடும். மே ஒன்றாம் தேதிக்கு பிறகு குருபகவான் மூன்றாம் வீட்டிற்கு மாறுவதால் உங்கள் வியாபாரம் அதிகரிக்கும். ராகு முதல் வீட்டிலும், கேது ஏழாம் வீட்டிலும் இருப்பதால் திருமண வாழ்க்கையில் ஏற்று இறக்கங்கள் ஏற்படக்கூடும்.