Home ஸ்நாக்ஸ் சூப்பரான வாழைப்பூ தயிர் வடை‌ இப்படி செஞ்சி பாருங்க! அட்டகாசமான சுவையில் இருக்கும்!

சூப்பரான வாழைப்பூ தயிர் வடை‌ இப்படி செஞ்சி பாருங்க! அட்டகாசமான சுவையில் இருக்கும்!

வடையை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். டேஸ்டியான வடை செய்வதென்பது நம் தென் இந்தியாவில் பொதுவாக விசேஷ நாட்களில் செய்யப்படும். அதிலும் தயிர் வடை என்றால் பலரும் விருப்பமாக உண்பார்கள். தயிர்வடை தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான உணவு வகை. வடை செய்து அதனை தாளித்த தயிர் கலவையில் ஊற வைத்து சாப்பிடுவதே தயிர்வடை என்று கூறப்படுகிறது. பொதுவாக தயிர்வடை கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள் ஆனால் அதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம். அந்த வடையை சாம்பார் அல்லது தயிரில் போட்டு சாப்பிடுவது என்றால் பலருக்கும் பிடித்தமான ஒன்று. அப்படி, வடையின் காரசாரமும் தயிரின் புளிப்பும் சேர்த்து சுவையாக எப்படி தயிர் வடை செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

-விளம்பரம்-

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் டீ, காபி குடிக்கும் போது சூடாகவும், காரமாகவும் எதையேனும் சாப்பிட கேட்கிறார்களா? அப்படியானால் காபி, டீ குடிக்கும் போது சாப்பிட வடை தான் பொருத்தமாக இருக்கும். அதுவும் உங்கள் வீட்டில் வாழைப்பூ இருந்தால், அதைக் கொண்டு சுவையான ஒரு வடை செய்யுங்கள். இந்த வடை மிகவும் ருசியாக, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். வாழை மரத்தின் பல பாகங்கள் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது வாழைக்காய் கொண்டு பொரியல் மற்றும் சாம்பார் செய்யப்படுகிறது. வாழைத்தண்டு பலவிதங்களில் உணவில் சேர்க்கப்படுகிறது. வாழைப்பூ பொரியல், மற்றும் வாழைப்பூ கூட்டு மிகவும் பிரபலமான மதிய உணவு வகை. அதேபோல வாழைப்பூ கொண்டு வடையும் செய்யலாம். ஸ்நாக்ஸ் என்றால் முதலில் தோன்றுவது வாழைப்பூ வடை தான். பெரும்பாலான பிள்ளைகள் வாழைப்பூ வடை என்றாலே நோ சொல்லி விடுவார்கள். குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான வாழைப்பூ தயிர் வடை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
No ratings yet

வாழைப்பூ தயிர் வடை‌ | Vazhaipoo Thayir Vadai Recipe In Tamil

வடையை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். டேஸ்டியான வடை செய்வதென்பது நம் தென் இந்தியாவில் பொதுவாக விசேஷ நாட்களில் செய்யப்படும். அதிலும் தயிர் வடை என்றால் பலரும் விருப்பமாக உண்பார்கள். தயிர்வடை தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான உணவு வகை. வடை செய்து அதனை தாளித்த தயிர் கலவையில் ஊற வைத்து சாப்பிடுவதே தயிர்வடை என்று கூறப்படுகிறது. பொதுவாக தயிர்வடை கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள் ஆனால் அதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம். அந்த வடையை சாம்பார் அல்லது தயிரில் போட்டு சாப்பிடுவது என்றால் பலருக்கும் பிடித்தமான ஒன்று. அப்படி, வடையின் காரசாரமும் தயிரின் புளிப்பும் சேர்த்து சுவையாக எப்படி தயிர் வடை செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம். மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் டீ, காபி குடிக்கும் போது சூடாகவும், காரமாகவும் எதையேனும் சாப்பிட கேட்கிறார்களா? அப்படியானால் காபி, டீ குடிக்கும் போது சாப்பிட வடை தான் பொருத்தமாக இருக்கும். அதுவும் உங்கள் வீட்டில் வாழைப்பூ இருந்தால், அதைக் கொண்டு சுவையான ஒரு வடை செய்யுங்கள்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: snacks
Cuisine: Indian
Keyword: Vazhaipoo Thayir Vadai
Yield: 4 People
Calories: 105kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1 கப் வாழைப்பூ
  • 1/4 கப் கடலை பருப்பு
  • 5 வர ‌மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • உப்பு தேவையான அளவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் கேரட் துருவல்
  • 1 கப் தயிர்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்

செய்முறை

  • முதலில் கடலைப்பருப்பு, வரமிளகாய், சோம்பை சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் ‌ஊறவைத்த கடலைப்பருப்பு, வரமிளகாய், உப்பு, இஞ்சி, சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவுடன், நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  • அதன்பிறகு புளிப்பில்லாத தயிரில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து அதனுடன் கொஞ்சம் கேரட் துருவல் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பின் தயிருடன் வாழைப்பூ வடையை சேர்த்தால் அவ்வளவுதான் சுவையான வாழைப்பூ தயிர் வடை தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 27g | Protein: 5.3g | Fat: 0.4g | Potassium: 358mg | Fiber: 3.1g | Vitamin A: 2IU | Vitamin C: 17mg | Calcium: 5mg | Iron: 4mg

இதனையும் படியுங்கள் : உரலில் இடித்த ஆட்டுக்கறி வடை இப்படி சுட்டுப் பாருங்க! இந்த டேஸ்டை வாழ்க்கைல மறக்கவே மாட்டீங்க!