மதிய உணவுக்கு ஏற்ற கேரட் சாதம் செய்வது எப்படி ?

- Advertisement -

இன்று நாம் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து விடும் வகையில் ஒரு அசத்தலான சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம், இன்று கேரட் சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த கேரட் சாதத்தை செய்து கொடுத்தால் நீங்கள் கொடுத்துவிட்ட டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும் அது மட்டும் இல்லாமல் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : அய்யர் வீட்டு சுவையான சாம்பார் சாதம் செய்வது எப்படி ?

- Advertisement -

ஏன் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடும் அளவிற்கு இந்த கேரட் சாதம் அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்த முறையும் உங்கள் குழந்தைகள் இது போல் செய்து தரச் சொல்லி உங்களிடம் கேட்பார்கள். அதனால் இன்று இந்த சுவையான கேரட் சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

கேரட் சாதம் | Carrot Sadam Recipe in Tamil

இன்று கேரட் சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த கேரட் சாதத்தை செய்து கொடுத்தால் நீங்கள் கொடுத்துவிட்ட டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும் அது மட்டும் இல்லாமல் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் ஏன் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடும் அளவிற்கு இந்த கேரட் சாதம் அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்த முறையும் உங்கள் குழந்தைகள் இது போல் செய்து தரச் சொல்லி உங்களிடம் கேட்பார்கள்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Carrot Sadam, கேரட் சாதம்
Yield: 4 People
Calories: 80kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 மேசை கரண்டி நெய்
  • ½ tbsp கடுகு
  • ½ tbsp சீரகம்
  • 2 வர மிளகாய்
  • 4 முந்திரி பருப்பு
  • 2 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 1 கப் துருவிய கேரட்
  • உப்பு தேவையான அளவு
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ¾ tbsp கரம் மசாலா
  • 1 ½ tbsp சாம்பார் பொடி
  • கருவேப்பிலை

செய்முறை

  • முதலில் கேரட் சாதத்திற்கு சேர்த்து மிக்ஸ் பண்ணும் அளவிற்கு சாதத்தை வடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நெய் ஊற்றவும்.
  • பின் நெய் உருகி காய்ந்ததும் அதனுடன் கடுகு, சீரகம், வரமிளகாய் மற்றும் முந்திரி பருப்பு போன்றவற்றை சேர்த்து நன்கு கிளறி விட்டு வறுத்துக் கொள்ளுங்கள். பின்பு கடுகு பொரிந்து முந்திரி பருப்பு நன்கு வறுபட்டு வந்ததும்.
  • இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு நன்கு வதங்கி வந்தவுடன் இதனுடன் நாம் வைத்திருக்கும் துருவிய கேரட்டை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
  • பின் கேரட்டை வதக்கும்போது தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, சாம்பார் தூள் மற்றும் கருவேப்பிலை போன்ற பொருட்களை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  • பின் கேரட் நன்கு வதங்கி வந்ததும் கடாயை கீழே இறக்கி அதனுடன் தேவையான அளவு வடித்த சாதத்தை சேர்த்து சாதத்துடன் கேரட் நான்கு கலக்குமாறு கலந்து விடுங்கள். அவ்வளவு தான் சுவையான கேரட் சாதம் இனிதே தயாராகி விட்டது.

Nutrition

Serving: 200gram | Calories: 80kcal | Carbohydrates: 78g | Protein: 12g | Fat: 1g | Saturated Fat: 0.7g | Cholesterol: 0.4mg | Sodium: 2.5mg | Potassium: 103mg | Fiber: 4g | Sugar: 2g | Vitamin A: 56IU | Iron: 1.2mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here