- Advertisement -
நாம் சாப்பிடும் சாத வகைகளில் பல வகையான சாதங்கள் இருந்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சாதம் எப்பொழுது கேட்டாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடும் சாதம் என்றால் அது இந்த சாம்பார் சாதம் மட்டும்தான். ஆகையால் இன்று நாம் சாம்பார் சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் ஆனால் இன்று நாம் அய்யர் வீட்டு ஸ்டைலில் சாம்பார் சாதம் செய்ய போகிறோம். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் ஐயர் வீட்டு சாம்பார் சாதம் செய்து பாருங்கள்
இதையும் படியுங்கள் : ஸ்ரீரங்கம் அய்யர் வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி ?
- Advertisement -
அதன் சுவை அட்டகாசமான முறையில் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இன்னும் வேண்டுமென கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமாக இருக்கும்.
-விளம்பரம்-
அய்யர் வீட்டு சாம்பார் சாதம் | Iyyer Veetu Sambar Sadam Recipe in Tamil
அனைவரும் விரும்பி சாப்பிடும் சாதம் எப்பொழுது கேட்டாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடும் சாதம் என்றால் அது இந்த சாம்பார் சாதம் மட்டும்தான். ஆகையால் இன்று நாம் சாம்பார் சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் ஆனால் இன்று நாம் அய்யர் வீட்டு ஸ்டைலில் சாம்பார் சாதம் செய்ய போகிறோம். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் ஐயர் வீட்டு சாம்பார் சாதம் செய்து பாருங்கள் அதன் சுவை அட்டகாசமான முறையில் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இன்னும் வேண்டுமென கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமாக இருக்கும்.
Yield: 4 people
Calories: 260kcal
Equipment
- 1 குக்கர்
- 1 பெரிய பவுள்
- கடாய்
தேவையான பொருட்கள்
குக்கரில் வேக வைக்க
- 1 கப் அரிசி
- ½ கப் துவரம் பருப்பு
- 5 கப் தண்ணீர்
- ¼ tbsp மஞ்சள் தூள்
- ½ tbsp உப்பு
- ¼ tbsp பெருங்காய தூள்
- 1 கைப்பிடி பூண்டு பற்கள்
- 1 tbsp எண்ணெய்
சாம்பார் சாதம் செய்ய
- 3 tbsp எண்ணெய்
- 2 tbsp நெய்
- 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
- 1 tbsp சீரகம்
- ½ tbsp வெந்தயம்
- 1 கொத்து கருவேப்பிலை
- 2 வர மிளகாய்
- 10 சின்ன வெங்காயம் தோலுரித்தது
- உப்பு தேவையான அளவு
- ½ கப் பீன்ஸ் நறுக்கியது
- ½ கப் கேரட் நறுக்கியது
- ½ கப் உருளைக்கிழங்கு நறுக்கியது
- 1 தக்காளி நறுக்கியது
- 1 ½ மேசை கரண்டி சாம்பார் பொடி
- ¼ tbsp மஞ்சள் தூள்
- 1 சிட்டிகை பெருங்காய தூள்
- ½ tbsp மிளகாய் தூள்
- ¼ கப் புளி கரைசல்
- ½ tbsp சர்க்கரை
- வேக வைத்த சாதம்
- 1 tbsp நெய்
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் துவரம் பருப்பு எடுத்துக் கொண்டு இரண்டு மூன்று முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி கொள்ளுங்கள். பின் அலசிய அரிசி பருப்பை குக்கரில் சேர்த்து அதனுடன் ஐந்து கப் அளவு தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள், பூண்டு மற்றும் எண்ணெய் ஊற்றி ஐந்து விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
- பின் குக்கரில் உள்ள அரிசி, பருப்பு நன்கு வெந்து வந்ததும் பிரஷர் ரிலீஸ் செய்து குக்கரில் உள்ள சாதத்தை நன்கு மசித்து விடுங்கள். அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
- பிறகு எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை மற்றும் வர மிளகாய் சேர்த்து தாளியுங்கள். பின் இதனுடன் தோலுரித்த சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் இதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். காய்கறிகள் ஓரளவு வந்தவுடன் இதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கி விடுங்கள்.
- பின் காய்கறிகள் முக்கால் வாசி வதங்கியதும் இதனுடன் காய்கறிகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து பின் சாம்பார் தூள் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
- பின் நன்கு கொதித்து வரும் நேரத்தில் கால் கப் புளி கரைசல் மற்றும் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். பின் இதனுடன் வேகவைத்து மசித்த சாதத்தை சேர்த்து மேலும் தண்ணீர் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
- பின்பு கடாயை ஒரு ஐந்து நிமிடம் மூடி வைத்து வேக வைத்து பின் கடைசியாக ஒரு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி நன்றாக கிளறி விட்டு சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவுதான் அய்யர் வீட்டு சாம்பார் சாதம் தயாராகிவிட்டது.
Nutrition
Serving: 600gram | Calories: 260kcal | Carbohydrates: 68g | Protein: 13g | Fat: 2g | Saturated Fat: 1.2g | Cholesterol: 4mg | Sodium: 3mg | Potassium: 489mg | Fiber: 1g | Sugar: 2g