கேஎப்சி சிக்கன் சாப்பிடனும் போல இருக்கா அப்போ கடைக்கு போகாமல் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்

- Advertisement -

வீட்டிலேயே கேஎஃப்சி சிக்கன் செய்யலாமா அது எப்படி கேஎப்சி இல்ல நம்ம வாங்குற மாதிரியே அந்த சிக்கனோட டேஸ்ட் இருக்குமா அப்படின்னு யோசிக்கிறீங்களா. கண்டிப்பா இருக்கும் அதே மாதிரியான மொறு மொறுப்பு தன்மையோட சிக்கனுக்குள்ள ரொம்ப ஜூஸியா செம்ம டேஸ்ட்டா சாப்பிடுவதற்கு அவ்வளவு ஒரு அருமையா வீட்டுலையே நம்மளால ஈஸியா செய்ய முடியும். இந்த கேஎஃப்சி சிக்கன் செய்வதற்கு நிறைய பொருட்கள் தேவைப்படுமா அப்படின்னு எல்லாம் யோசிக்க வேண்டாம் நம்ம வீட்ல இருக்கிற பொருட்களை வைத்து ஈஸியான முறையில் டக்குனு இந்த கேஎஃப்சி சிக்கனை செஞ்சிடலாம்.

-விளம்பரம்-

சிக்கனை ஊற வைக்கிற டைம் மட்டும் தான் நமக்கு நிறைய இருக்கும் ஆனால் செய்யறது டக்குனு செஞ்சி முடிச்சிடலாம். இப்போ இருக்கிற குழந்தைகள் எல்லாரும் பீட்சா பர்கர் கேஎஃப்சி சிக்கன் கேட்ட அடம் பிடிப்பாங்க ஆனா எப்பவுமே கடைகளிலேயே நம்ம இது எல்லாமே வாங்கி கொடுத்தோம் அப்படின்னா அது குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா இருக்காது. அதனால வீட்டிலேயே நம்ம அவங்களுக்கு புடிச்ச மாதிரியான கேஎப்சி சிக்கனை செஞ்சு கொடுக்கலாம். கடைகள்ல கேஎஃப்சி சிக்கன் பொரிச்ச எண்ணெயிலேயே மறுபடியும் மறுபடியும் பொரிச்செடுப்பாங்க அது நம்ம இதயத்துக்கு ரொம்பவே கெட்டது.

- Advertisement -

அதனால வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இந்த கேஎஃப்சி சிக்கனை நம்ம செய்யலாம். இப்ப நான் குழந்தைங்க மட்டும் இல்லாம பெரியவங்களும் அடிக்கடி சாப்பிடுறாங்க அவங்களுக்கும் வீட்ல செய்த இந்த கேஎஃப்சி சிக்கன் ரொம்பவே பிடிக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளி குழந்தைகள் வந்துட்டாங்கனா அவங்களுக்கு இது செஞ்சி கொடுக்கலாம் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள பத்தி அவங்க பாராட்டிட்டு போவாங்க. அந்த அளவுக்கு ஒரு டேஸ்டான கேஎஃப்சி சிக்கன் தான் பார்க்க போறோம். இந்த கேஎப்சி சிக்கன் கூட வீட்ல இருக்கிற தக்காளி சாஸ் சேர்த்து கொடுத்தோம்னா போதும் இன்னும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

கேஎப்சி சிக்கன் | KFC Chicken Recipe In Tamil

வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இந்த கேஎஃப்சி சிக்கனை நம்ம செய்யலாம். இப்ப நான் குழந்தைங்க மட்டும் இல்லாம பெரியவங்களும் அடிக்கடி சாப்பிடுறாங்க அவங்களுக்கும் வீட்ல செய்த இந்த கேஎஃப்சி சிக்கன் ரொம்பவே பிடிக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளி குழந்தைகள் வந்துட்டாங்கனா அவங்களுக்கு இது செஞ்சி கொடுக்கலாம் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள பத்தி அவங்க பாராட்டிட்டு போவாங்க. அந்த அளவுக்கு ஒரு டேஸ்டான கேஎஃப்சி சிக்கன் தான் பார்க்க போறோம். இந்த கேஎப்சி சிக்கன் கூட வீட்ல இருக்கிற தக்காளி சாஸ் சேர்த்து கொடுத்தோம்னா போதும் இன்னும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time7 minutes
Course: starters
Cuisine: American
Keyword: KFC chicken
Yield: 2
Calories: 354kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 சிக்கன் லெக்
  • 1 டீஸ்பூன் பூண்டு விழுது
  • 4 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 4 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 முட்டை
  • கார்ன் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் மைதா மாவு பூண்டு விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
  •  
    சிக்கனை கலந்து கழுவி சுத்தம் செய்த கலந்து வைத்துள்ள கலவையில் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
  • ஒரு தட்டில் மைதா மாவு மிளகு தூள் மிளகாய் தூள் மற்றும் கார்ன் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
     
  • முட்டையை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் ஊற வைத்துள்ள சிக்கனைமுதலில் முட்டையில் முக்கிய எடுத்து பிறகு கலந்து வைத்துள்ள மைதா மாவு கலவையில் பிரட்டி எண்ணெயில் போட்டு நன்றாக வேக வைத்து பொன் நிறமாகும் வரை விட்டே எடுத்தால் சுவையான கேஎஃப்சி சிக்கன் தயார்
  • சிக்கன் பொரிக்கும் போது அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 398mg | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : அடுத்தமுறை சிக்கன் வாங்கினால் வீடே மணக்க மணக்க சிக்கன் தண்ணீர் குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க!