- Advertisement -
சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையக இருக்கும் இந்த நெத்திலி மீன் தொக்கு. பலருக்கு மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது அப்படியே தெரிந்தாலும் சுவையாக செய்ய தெரியாது, அதுவும் நெத்திலி மீன் போன்ற சிறிய மீன்களை குழம்பு தான் வைத்து சாப்பிடுவார்கள். அந்நாள் நெத்திலி மீனில் தொக்கு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அந்த சுவைக்கு ஈடே இல்லை ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
-விளம்பரம்-
அந்தவகையில் இந்த நெத்திலி மீன் தொக்கு சுலபமாகவும், குறைந்தநேரத்துளிம், மிகவும் சுவையாகவும் எப்படி செய்யலாம் என்றுதான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.
- Advertisement -
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் இந்த வார கடைசில் செய்து சுவைத்திடுகள்.
நெத்திலி மீன் தொக்கு | Nethili Meen Thokku Recipe In Tamil
சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையக இருக்கும் இந்த நெத்திலி மீன் தொக்கு. பலருக்கு மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது அப்படியே தெரிந்தாலும் சுவையாக செய்ய தெரியாது, அதுவும் நெத்திலி மீன் போன்ற சிறிய மீன்களை குழம்பு தான் வைத்து சாப்பிடுவார்கள். அந்நாள் நெத்திலி மீனில் தொக்கு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அந்த சுவைக்கு ஈடே இல்லை ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.அந்தவகையில் இந்த நெத்திலி மீன் தொக்கு சுலபமாகவும், குறைந்தநேரத்துளிம், மிகவும் சுவையாகவும் எப்படி செய்யலாம் என்றுதான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் இந்த வார கடைசில் செய்து சுவைத்திடுகள்.
Yield: 4 people
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- ½ கிலோ நெத்திலி மீன்
- ¼ கப் எண்ணெய்
- 1 டீஸ்பூன் வெந்தயம்
- 2 பூண்டு
- 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
- 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவைக்கேற்ப
- புளிக்கரைசல் தேவைக்கேற்ப
- கறிவேப்பிலை சிறிது
அரைக்க தேவையான பொருட்கள்:
- 20 சின்ன வெங்காயம்
- 2 தக்காளி
- 10 பூண்டு
- 1 டேபிள் ஸ்பூன் மிளகு
- 2 பச்சை மிளகாய்
செய்முறை
செய்முறை:
- முதலில் நெத்திலி மீனை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
- பிறகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, மிளகு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம், பூண்டு, சேர்த்து வதக்கி அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வேகவிடவும்.
- பச்சை வாசனை போனவுடன், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- எண்ணெய் பிரிய தொடங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி, நெத்திலி மீனை சேர்த்து மூடி வேக விடவும்.
- மீன் வெந்ததும் கருவேப்பிலை, மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.