ஆருத்ரா தரிசனத்திற்காக செய்யக்கூடிய பிரசாதமான களியை இப்படி செய்து பாருங்கள் அருமையாக இருக்கும்!

- Advertisement -

இன்று கொண்டாடபடக்கூடிய ஆருத்ரா தரிசனத்திற்காக  சில வீடுகளில் நோன்பு இருந்து இறைவனை வழிபாடு செய்வாங்க. அப்படி செய்யும் போது இறைவனுக்கு களி பிரசாதம் செய்து நெய்வேத்தியம் செய்வாங்க. அந்த சுவையான களி  ரொம்பவே நல்லா இருக்கும் எப்போதும் செய்யும் அதே களி மாதிரி தான் அரிசி மாவுல செய்யக்கூடிய இந்த களி ரொம்பவே டேஸ்டா இருக்கும். சிலர் இந்த களி கூட அடை இலையில் சாப்பாடு அந்த மாதிரி செய்து நோன்பு மேற்கொள்வார்கள்.

-விளம்பரம்-

இன்னைக்கு நம்ம ஆருத்ரா தரிசனத்திற்கு வைக்கப்படும் நெய்வேதியமான களி எப்படி  சுவையா செய்யலாம் அப்படின்னு தான் இந்த பதிவுல பார்க்க இருக்கோம். நம்ம செய்யக்கூடிய பல உணவுகள்  வழிபாட்டுக்கு பிரசாதமாக பயன்படுத்தக்கூடிய உணவுகள் தான். நம்ம ரொம்ப விரும்பி சாப்பிடும்  சாதாரண  நேரத்துல செய்யக்கூடிய களியை விட சுவையா இருக்கும். இந்த மாதிரி கோவில்கள் இல்ல வீட்ல செய்யும் வழிபாட்டுக்கு செய்யக்கூடிய உணவுல இருக்கற சுவை ரொம்பவே நல்லா இருக்கும்.

- Advertisement -

உதாரணமாக கோவில்களில் கிடைக்கக்கூடிய புளியோதரையும் வழிபாட்டுக்கு செய்யக்கூடிய புளியோதரையிலும் இருக்கிற டேஸ்ட் சாதாரண நாள்ல நம்ம புளியோதரை செய்தால் அந்த சுவை இருக்கிறது இல்லை. அதே மாதிரி ரொம்பவே சுவையான இந்த ஆருத்ரா தரிசனத்திற்காக செய்யக்கூடிய பிரசாதமான களியை எப்படி செய்யலாம் சுவையா அப்படிங்கறது தெரிஞ்சுக்க இருக்கும். வாங்க இந்த ஆருத்ரா தரிசனத்திற்கு செய்யக்கூடிய பிரசாதமான களி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Print
No ratings yet

ஆருத்ரா தரிசன பிரசாதம் களி | Prasaadham Kali In Tamil

நம்ம ஆருத்ரா தரிசனத்திற்கு வைக்கப்படும் நெய்வேதியமானகளி எப்படி  சுவையா செய்யலாம் அப்படின்னு தான் இந்த பதிவுல பார்க்க இருக்கோம். நம்ம செய்யக்கூடிய பல உணவுகள்  வழிபாட்டுக்கு பிரசாதமாக பயன்படுத்தக்கூடிய உணவுகள்தான். நம்ம ரொம்ப விரும்பி சாப்பிடும்  சாதாரண  நேரத்துல செய்யக்கூடிய களியை விட சுவையா இருக்கும்.இந்த மாதிரி கோவில்கள் இல்ல வீட்ல செய்யும் வழிபாட்டுக்கு செய்யக்கூடிய உணவுல இருக்கறசுவை ரொம்பவே நல்லா இருக்கும்.வாங்க இந்த ஆருத்ரா தரிசனத்திற்கு செய்யக்கூடிய பிரசாதமான களி எப்படி செய்யலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Snack
Cuisine: tamil nadu
Keyword: Arudhra prasadha Kali
Yield: 4
Calories: 22kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 பச்சரிசி
  • 1/4 கிலோ வெல்லம்
  • 2 ஏலக்காய்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 2 ஸ்பூன் நெய்

செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து  அரிசியை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும் .பொரி அரிசி போல வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • வறுத்து வைத்துள்ள பொரி அரிசி ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பவுடர் அளவிற்கு பொடிக்கக் கூடாது சற்றே கொரகொரப்பாக இருக்கும் பதத்திற்கு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  •  பிறகு ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்தபிறகு அதில் வெல்லத்தை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
  • பிறகு அதில் பொடித்து வைத்துள்ள அரிசியை சேர்த்துகட்டி படாமல் கிளறி விட வேண்டும். அரிசி சேர்த்தவுடன் தண்ணீர்  சீக்கிரமாக கெட்டிப்பட்டு வரும்  அதனால் கைவிடாமல் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.
  • பொரி அரிசி நன்றாக வெந்து கட்டி ஆன பிறகு அதில் ஏலக்காய்,தேங்காய் துருவல், நெய் சேர்த்து நன்றாக கலந்து சூடாக பரிமாறினால் சுவையான ஆருத்ரா பிரசாத களி தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 22kcal | Carbohydrates: 3.3g | Sodium: 5mg | Potassium: 318mg | Fiber: 1g

இதையும் படியுங்கள் : வீட்டில சிறிது கேழ்வரகு மாவு இருந்தால் இப்படி ருசியான களி செஞ்சி பாருங்க!