பக்குவமா பார்த்து செய்த ஆப்கானி ஸ்டைல் ருசியான பன்னீர் கிரேவி! நீங்களும் மிஸ் பண்ணாம செஞ்சி பாருங்க!

- Advertisement -

பன்னீர்ல எத்தனையோ விதமா நீங்க கிரேவி செய்திருப்பீங்க. அது சப்பாத்தி, பூரி, பரோட்டா அப்படின்னு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இப்போ இந்த ஆப்கானி  ஸ்டையில்ல பன்னீர் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். இந்த கிரேவிய மட்டும் நீங்க ஒரு தடவை வச்சிட்டீங்கன்னா போதும் கண்டிப்பா எல்லாரும்  சப்பாத்தி, பூரி போட்டிங்களா இந்த பன்னீர் குருமா தான் வேணும் ஆப்கானி ஸ்டைல் அப்படின்னு கண்டிப்பா கேட்பாங்க.

-விளம்பரம்-

இந்த மாதிரி சுவையான பன்னீர்ல விதவிதமான கிரேவி எல்லாம் பண்ணி இருப்போம். இன்னைக்கு இந்த பன்னீரை யூஸ் பண்ணி ஒரு ஆப்கானி ஸ்டைலில்  பன்னீர் கிரேவி பண்ண போறோம். அந்த கிரேவி எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம். ரொம்பவே சுவையான இந்த ஆப்கானி பன்னீரை நீங்க சப்பாத்தியோடையும் பூரியோடையும் பரோட்டாவோடையும் தொட்டு சாப்பிடும்போது அவ்வளவு சுவையா இருக்கும்.

- Advertisement -

உங்களுக்கு பன்னீர் ரொம்ப பிடிக்குமா அப்போ இந்த மாதிரி ஒரு டைம் கிரேவி வச்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க இந்த மாதிரி மட்டும் தான் கிரேவி வைத்து சாப்பிடுவீங்க. அந்த அளவுக்கு இந்த கிரேவி உங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடும். இந்த ஆப்கானி ஸ்டைல் பன்னீர் கிரேவியில பச்சை பட்டாணி எல்லாம் சேர்த்து சும்மா சூப்பரா பண்ண போறோம். சரி வாங்க இந்த ஆப்கானி ஸ்டைலில் பன்னீர் கிரேவி எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம்.

Print
5 from 1 vote

ஆப்கானி பன்னீர் கிரேவி | Afghani paneer gravy in tamil

உங்களுக்கு பன்னீர் ரொம்ப பிடிக்குமா அப்போ இந்த மாதிரி ஒரு டைம் கிரேவி வச்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க இந்த மாதிரி மட்டும் தான் கிரேவி வைத்து சாப்பிடுவீங்க. அந்த அளவுக்கு இந்த கிரேவி உங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடும். இந்த ஆப்கானி ஸ்டைல் பன்னீர் கிரேவியில பச்சை பட்டாணி எல்லாம் சேர்த்து சும்மா சூப்பரா பண்ண போறோம். சரி வாங்க இந்த ஆப்கானி ஸ்டைலில் பன்னீர் கிரேவி எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: curry, Gravy
Cuisine: Affcani, American
Keyword: | Panneer Katlat Sanwich, Almond Paneer Gravy
Calories: 111kcal
Cost: 150

Equipment

  • 2 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 கப் பன்னீர்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1  வெங்காயம்
  • 12 கப் பச்சை பட்டாணி
  • 2 துண்டு இஞ்சி                          
  • 5 பல் பூண்டு                          
  • 10 முந்திரி பருப்பு
  • 1 கைப்பிடி கொத்த மல்லி
  • 1 4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 12 ஸ்பூன் கரமசாலா
  • 1 ஸ்பூன் மிளகுதூள்
  • 12 ஸ்பூன் சீரகம்
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 2 ஸ்பூன் வெண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எஎண்ணெய்
  • சிறிதளவு கஸ்தூரி மேத்தி

செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சதுரமாக நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து வறுக்க வேண்டும்.
  • இந்த பன்னீர் துண்டுகளின் மீது மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதே கடாயில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும் .
  • பிறகு அதில் இஞ்சி ,பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்வதில் முந்திரி பருப்பு கொத்தமல்லி தழைகளை சேர்த்து நன்றாக வதக்கிய எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து ஆற வைத்துள்ள பொருட்களை சேர்த்து அரைக்க வேண்டும். பின் அதனோடு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெண்ணெய் சேர்த்து சூடான் உருகியதும் அதில் சீரகம், ஏலக்காய், கிராம்பு சேர்த்து லேசாக வறுத்து விட்டு நாம் அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து விட்டு அதில் பச்சை பட்டாணி சேர்த்து கிளறி விட வேண்டும்.
  • இதில் தேவையான அளவு உப்பு , நீர் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும் கிரேவி நன்றாக கொதித்து கெட்டியாக வரும் வேளையில் அதில் வறுத்தெடுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து விட்டு  இறுதியாக கஸ்தூரி மேத்தி சேர்த்து கலந்து சூடாக பரிமாறினால் சுவையான ஆப்கானி ஸ்டைலில் பன்னீர் கிரேவி தயார்.

Nutrition

Calories: 111kcal | Carbohydrates: 12g | Fat: 5g | Saturated Fat: 1g | Polyunsaturated Fat: 2g | Sodium: 552mg