பாரம்பரிய சுவையில் சோற்றுக் கற்றாழை குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

- Advertisement -

நம் பாரம்பரியத்தில் கற்றாழையின் பயன்பாடு என்பது நீண்ட காலத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வருகிறது. கிராமங்களில் எல்லாருடையை வீடுகளிலும் கற்றாழை இருக்கும். வயல்களில் தானாக பல வகையான கற்றாழைகள் முளைத்திருக்கும். இதில் உள்ள பல்வேறு சிறப்பு குணங்கள் காரணமாக பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வாக இருக்கிறது. இன்றைய சந்தையில், அழகுசாதன பொருட்கள், உணவு சார்ந்த பொருட்கள், உடல் எடை குறைக்க என பல்வேறு துறைகளில் இதை பயன்படுத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : ருசியான கொத்தவரங்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க! சில குழம்பை மட்டும் அடிக்கடி செய்யாமல் இதை செய்து பாருங்க!

- Advertisement -

கற்றாழையில் இருந்து உணவு தயாரிப்பதும் எளிமையானது தான் பொதுவாக கற்றாழையின் ஜெல்லை எடுத்து அதில் ஜூஸ் தயாரித்து பருகலாம். இதுவரை நீங்கள் கற்றாழையை சரும பராமரிப்பு மற்றும் மருந்து வடிவில் பயன்படுத்துவோம். ஆனால் காய்கறிகளை போல காற்றாழையை குழம்பு, கறி, பொரியலாகவும் சமைக்கலாம். அது போலவே கற்றாழையில் சாம்பார், காரக்குழம்பு, சப்ஜி செய்யலாம்.

Print
No ratings yet

சோற்றுக்கற்றாழை குழம்பு | Aloe Vera Kuzhambu Recipe in Tamil

நம் பாரம்பரியத்தில் கற்றாழையின் பயன்பாடு என்பது நீண்ட காலத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வருகிறது. கிராமங்களில் எல்லாருடையை வீடுகளிலும் கற்றாழை இருக்கும். வயல்களில் தானாக பல வகையான கற்றாழைகள் முளைத்திருக்கும். இதில் உள்ள பல்வேறு சிறப்பு குணங்கள் காரணமாக பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வாக இருக்கிறது. இதுவரை நீங்கள் கற்றாழையை சரும பராமரிப்பு மற்றும் மருந்து வடிவில் பயன்படுத்திருப்பீர்கள், ஆனால் காய்கறிகளை போல காற்றாழையை குழம்பு, கறி, பொரியலாகவும் சமைக்கலாம்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, tamilnadu
Keyword: kara kulambu
Yield: 4 People
Calories: 33.8kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 கற்றாழை
  • 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 1 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  • புளி எலுமிச்சை
  • 10 சின்ன
  • உப்பு தேவையானஅளவு
  • 1/4 கப் தேங்காய்
  • 4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • கொத்தமல்லி இலை சிறிதளவு
  • 1 தக்காளி

செய்முறை

  • சோற்றுக்கற்றாழை இலை எடுத்து அதன் நுனிப்பகுதியை வெட்டிக் கொள்ளவும்.
  • பின்னர் சோற்றுக் கற்றாழையின் மேல் இருக்கும் தோலை நீக்கி பின்பு உள்ளிருக்கும் ஜெல் வடிவத்தை தனியாக ஒரு ஸ்பூன் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இப்போது சோற்றுக் கற்றாழையை சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்த தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் அதில் வெந்தயம், கருவேப்பிலை மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  • சிறிதளவு வேர்க்கடலை மற்றும் நறுக்கிய தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பின்னர் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இப்போது வெங்காயம் தக்காளி வதங்கியவுடன் புளி தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • குழம்பு நன்றாக கொதித்து வரும்போது சிறிதாக நறுக்கி வைத்திருந்த சோற்றுக் கற்றாழையை சேர்த்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸியில் தேங்காய் 1/4 கப் எடுத்துக் கொண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • குழம்பு நன்றாக கொதிக்கும்போது தேங்காய் விழுதை சேர்த்து பத்து நிமிடம் குழம்பு மூடி வைக்கவும்.
  • இப்போது குழம்பு நன்றாக கெட்டியாகவும் எண்ணை பிரிந்து மேலே வரவும் அடுப்பை அணைத்து விடவும்.
  • சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடலாம் இப்போது மிகவும் சுவையான சோற்றுக்கற்றாழை குழம்பு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 33.8kcal | Carbohydrates: 6.68g | Protein: 0.19g | Fat: 0.03g | Sodium: 86.71mg | Potassium: 61.04mg | Vitamin C: 3.8mg | Calcium: 30.52mg | Iron: 0.19mg