- Advertisement -
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் உருளைக்கிழங்கு முக்கியமானது என்றே சொல்லலாம். இந்த உருளைக்கிழங்கை வைத்து பல வகையான ரெசிபிகளை செய்யலாம். உருளைக்கிழங்கு 65 ஒரு அற்புதமான மற்றும் எளிமையான ஸ்டாட்டர் அல்லது ஸ்நாக்ஸ். உருளைக்கிழங்கு பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் காய்கறி என்பதால், இதை வைத்து எப்படி சமைத்தாலும், அதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.
-விளம்பரம்-
- Advertisement -
அதிலும் ஆலு 65 செய்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது மிகவும் பிரபலமான இந்தோ சீன ரெசிபி ஆகும். ஆலு 65 என்பது விரைவாகச் செய்யக்கூடிய ஒரு சிற்றுண்டியாகும், அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். உருளைக்கிழங்கு 65 என்பது நீங்கள் ஒரு நொடியில் செய்யக்கூடிய ஒரு அற்புதமான சிற்றுண்டியாகும்.
உருளைக்கிழங்கு 65 | Aloo 65 Recipe in Tamil
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் உருளைக்கிழங்கு முக்கியமானது என்றே சொல்லலாம். இந்த உருளைக்கிழங்கை வைத்து பல வகையான ரெசிபிகளை செய்யலாம். உருளைக்கிழங்கு 65 ஒரு அற்புதமான மற்றும் எளிமையான ஸ்டாட்டர் அல்லது ஸ்நாக்ஸ். உருளைக்கிழங்கு பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் காய்கறி என்பதால், இதை வைத்து எப்படி சமைத்தாலும், அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். அதிலும் ஆலு 65 செய்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது மிகவும் பிரபலமான இந்தோ சீன ரெசிபி ஆகும்.
Yield: 4 People
Calories: 164kcal
Equipment
- 1 கடாய்
- 1 வாணலி
- 1 பவுள்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 250 கிராம் பேபி உருளைக்கிழங்கு
- 1 1/2 டேபிள் ஸ்பூன் மைதா
- 3 டேபிள் ஸ்பூன் அரிசி
- 1 டீஸ்பூன் இஞ்சி
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
- 1/4 டீஸ்பூன் பேக்கிங்
- உப்பு தேவையானஅளவு
- 2 பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை சிறிதளவு
- எண்ணெய் தேவையானஅளவு
செய்முறை
- உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
- அரிசி மாவு, மைதா மாவு, மற்ற மசாலா பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பௌலில் மாவு மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து உப்பு தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து ஆலூ 65 மாவு தயார் செய்யவும்.
- அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்குகளை பெரிய துண்டுகளாக நறுக்கி கலந்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் போட்டு வைத்துள்ள உருளைக் கிழங்குகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- வேறு ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், தயாராக பொரித்து வைத்துள்ள உருளைக் கிழங்கை சேர்த்து கலந்து விட்டு எடுத்தால் உருளைக் கிழங்கு 65 தயார்.
- தயாரான ஆலுவை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். இப்போது மிகவும் சுவையான மொறு மொரு உருளைக் கிழங்கு 65 சுவைக்கத்தயார்.
Nutrition
Serving: 600g | Calories: 164kcal | Carbohydrates: 37g | Protein: 4.6g | Fat: 0.2g | Potassium: 620mg | Fiber: 4g | Vitamin C: 27mg | Calcium: 20mg | Iron: 1.1mg